இப்படிலாம் நடக்கும்ணு நான் நெனச்சு கூட பார்க்கல.. நெகிழும் நிகிடி

First Published May 22, 2018, 2:06 PM IST
Highlights
ngidi speaks about playing for csk in ipl


தான் ஐபிஎல் ஏலத்தில் எடுக்கப்படுவேன் என்பதை நினைத்துக்கூட பார்க்கவில்லை என சென்னை வீரர் நிகிடி தெரிவித்துள்ளார்.

ஐபிஎல் 11வது சீசன் விறுவிறுப்பான இறுதி கட்டத்தை எட்டியுள்ளது. இரண்டு ஆண்டுகால தடைக்கு பிறகு களமிறங்கிய சென்னை மற்றும் ராஜஸ்தான் ஆகிய இரு அணிகளும் பிளே ஆஃபிற்கு தகுதி பெற்றுள்ளன. ஹைதராபாத், சென்னை, கொல்கத்தா, ராஜஸ்தான் ஆகிய 4 அணிகளும் பிளே ஆஃபிற்கு தகுதி பெற்றுள்ளன. முதல் தகுதி சுற்று போட்டியில், இன்று சென்னை அணியும் ஹைதராபாத் அணியும் மோதுகின்றன.

இந்த சீசன் தொடங்கியது முதலே இறுதி ஓவர்களை சென்னை அணி மோசமாகவே வீசிவருகிறது. அதை சென்னை கேப்டன் தோனி, வெளிப்படையாக குறையாகவே கூறிவிட்டார். பேட்டிங்கில் சிறந்து விளங்கும் சென்னை அணி, இறுதி ஓவர்களில் பவுலர்களின் சொதப்பலால் சில போட்டிகளில் எதிரணிகளுக்கு வெற்றியை தாரை வார்த்தது.

அந்த குறையை லுங்கி நிகிடி தீர்த்துவைத்தார். தென்னாப்பிரிக்க பவுலர் நிகிடியை சென்னை அணி ஏலத்தில் எடுத்தது. ஆனால் அவருடைய தந்தை மறைந்ததால், தென்னாப்பிரிக்க சென்றுவிட்டதால் தொடக்கத்தில் சில போட்டிகளில் ஆடவில்லை. பின்னர் ஐபிஎல்லில் ஆடுவதற்காக இந்தியா திரும்பினார். சென்னை அணிக்காக 5 போட்டிகளில் ஆடி 9 விக்கெட்டுகளை வீழ்த்தியுள்ளார். 

பஞ்சாப் அணிக்கு எதிரான கடைசி லீக் போட்டியில் 10 ரன்களை மட்டுமே விட்டுக்கொடுத்து 4 விக்கெட்டுகளை வீழ்த்தினார். கடைசி ஓவர்களை பற்றி கவலைப்பட்டு கொண்டிருந்த தோனிக்கு, ஆறுதலாக நிகிடி திகழ்கிறார்.

பஞ்சாப் போட்டிக்கு பிறகு பேசிய நிகிடி, முதலில் ஐபிஎல் ஏலத்தில் நான் ஏலம் எடுக்கப்படுவேன் என்று நினைத்துக் கூட பார்த்ததில்லை. ஆனால், என்மீது நம்பிக்கை வைத்து சென்னை பயிற்சியாளர் பிளமிங் மற்றும் கேப்டன் டோனி ஏலம் எடுத்தது சிறப்பானது. சிறந்த அனுபவங்கள் எனக்கு கிடைத்து கொண்டிருப்பதை என்னால் தெளிவாக உணரமுடிகிறது. இவ்வளவு பெரிய ரசிகர்கள் கூட்டத்திற்கு நடுவே விளையாடியதே கிடையாது. எனக்கு இது மிகவும் சிறந்ததாக இருக்கிறது என நிகிடி நெகிழ்ந்து பேசினார்.

click me!