MTB Himachal Janjehli 2022 1st Edition : மவுண்டன் பைக்கிங் ரேஸ் கொடியசைப்புடன் கோலாகலத் துவக்கம்!

By Dinesh TGFirst Published Jun 23, 2022, 10:42 PM IST
Highlights

MTB ஹிமாச்சல் மவுண்டன் பைக்கிங் ரேஸ் கொடியசைப்புடன் கோலாகலமாகத் தொடங்கியது. 

சிம்லாவில் உள்ள ஓக் ஓவரில் MTB இமாச்சல் ஜாங்கெலி பைக்கிங் ரேஸ் கொடியசைப்புடன் கோலாகலமாகத் தொடங்கியது.  முதல் முறையாக நடைபெறும் இந்த மோட்டார்சைக்கிள் பந்தயத்தில் வீரர்கள் மலைப் பகுதிகளில் பைக் ரேசிங் செய்வர். இந்த மோட்டார்சைக்கிள் பந்தயம் சர்வதேச ஒலிம்பிக் தினம் (ஜூன் 23) அன்று சிம்லாவில் உள்ள ஓக் ஓவர் பகுதியில் நடைபெறுகிறது. 

மோட்டார்சைக்கிள் பந்தய வீரர்கள் சிம்லாவை சுற்றிய மலைப் பகுதிகளில் வலம் வந்து, மாநிலத்தின் கலாச்சாரம் மற்றும் பாரம்பரியத்தை உலகிற்கு பரைசாற்றுவர். அறிமுக விழாவை தொடர்ந்து மோட்டார்சைக்கிள் பந்தயம் ஜூன் 24 ஆம் தேதி மஷோபரா சிம்லாவில் துவங்கி ஜாங்கெலியில் ஜூன் 26 ஆம் தேதி நிறைவு பெற இருக்கிறது. இந்த பந்தயம் மொத்தம் மூன்று கட்டங்களாக நடைபெறும். 

வித்தியாசமாக மலைப் பகுதியில் நடைபெறும் பைக்கிங் ரேஸ் நிகழ்ச்சியை ஹிமாலயன் அட்வென்ச்சர் ஸ்போர்ட்ஸ் மற்றும் டூரிசம் புரமோஷன்  அசோசியேஷன் மற்றும் இமாச்சல பிரதேச துற்றுலாத் துறை, இமாச்சல பிரதேச அரசு சார்பில் நடத்த ஏற்பாடு செய்யப்பட்டது. 

இந்த பந்தயத்தில் நாடு முழுவதிலும் இருந்து சுமார் 60 வீரர்கள் பங்கேற்க உள்ளனர். இந்த நிகழ்ச்சியின் மூலம் நாடு முழுக்க சைக்ளிங் கலாச்சாரத்தை விளம்பரப்படுத்த திட்டமிடப்பட்டு உள்ளது. இத்துடன் இமாச்சல பிரதேச மாநிலத்தின் அழகை உலகளாவிய மோட்டார்சைக்கிள் வீரர்களுக்கு காட்சிப்படுத்தவும் இந்த பந்தயம் உதவியாக இருக்கும். 

MTB ஹிமாச்சல் ஜான்ஜெஹ்லி 2022 : முதலாவது தனித்துவமான மலை பைக்கிங் பந்தயம் ! விவரங்கள் இங்கே!

MTB இமாச்சல் ஜாங்கெலியின் முதல் எடிஷனில் சிம்லா, சோலன், பில்சாபுர் காங்ரா, மண்டி மற்றும் குல்லு என ஆறு மாவட்டங்கள் மற்றும் உத்தரகண்ட், ஹரியானா, மத்திய பிரதேசம், டெல்லி, உத்திர பிரதேசம், இமாச்சல பிரதேசம், சண்டிகர் மற்றும் ஜம்மு காஷ்மீர் என எட்டு மாநிலங்களை சேர்ந்த வீரர்கள் கலந்து கொள்கின்றனர். இத்துடன் டெல்லி போலீஸ், எஸ்.எஸ்.பி., ராணுவம், இந்திய ராணுவ அகாடமி சார்பிலும் பங்கேற்பாளர்கள் கலந்து கொள்கின்றனர். 

தேசிய சாம்பியன் பட்டம் வென்ற பிரத்வி ராஜ் சிங் ரக்கோர் மற்றும் அக்‌ஷித் கௌர் மற்றும் பல்வேறு பைக் ரேசர்கள் இதில் கலந்து கொள்ள இருக்கின்றனர். இந்த பந்தயத்தில் கலந்து கொள்ளும் இளம் வீரராக சிம்லாவை சேர்ந்த பத்து வயதான கௌசதவ் சிங், வயதான வீரரக 60 வயதான ராஜேஷ் குப்தா இந்த பைக் ரேஸ் தொடரில் கலந்து கொள்ள இருக்கின்றனர். இதுதவிர ஏழு பெண் ரேசர்களும் இதில் கலந்து கொள்ள இருக்கின்றனர். 

பெண் வீரர்களில் சிம்லாவை சேர்ந்த 13 வயதான சாம்பவி சிங், வயதானவர்களில் உத்தராகண்ட் மாநிலத்தை சேர்ந்த 25 வயதான அஸ்தா தோபால் ஆகியோர் கலந்து கொள்ள இருக்கின்றனர். 

நான்கு நாட்கள் நடக்கும் பந்தயத்தில் ரைடர்கள் மொத்தம் 175 கிலோமீட்டர்களை கடக்க வேண்டும். இதில் இமாச்சல பிரதேச மாநிலத்தின் 2750 மீட்டர்கள் உயரத்தில் இருக்கும் ஷிகாரி தேவி தளத்திற்கு செல்வர். இது நாட்டில் மிக கடுமையான பந்தயமாக பார்க்கப்படுகிறது. 

MTB இமாச்சல் ஜாங்கெலி 2022 முதல் எடிஷன் விவரங்கள்:

அறிமுக நிகழ்வு: ஜூன் 23, மாலை 4.30 மணி (ஹெரிடேஜ் ரைடு) சிம்லா டவுன் பகுதியில் இருந்து டாக் பங்ளா வரை

துவக்க ஸ்டேஜ் 1: ஜூன் 24, காலை 7 மணி, டாக் பங்களாவில் இருந்து சிண்டியில் னஉள்ள ஆப்பிள் தோட்டங்கள் வரை (இரவு தங்க வேண்டும்)

ஸ்டேஜ் 2: ஜூன் 25, காலை 7 மணி, சிண்டி ஸ்டேஜ் ஸ்டார்ட் முதல் ஜாங்கெலி வரை (இரவு தங்க வேண்டும்)

ஸ்டேஜ் 3: ஜூன் 26, காலை 7 மணிக்கு துவங்கி மதியம் 12 மணிக்கு ஜாங்கெலியில் முடிக்க வேண்டும். இதைத் தொடர்ந்து நிறைவு விழா.

வழித்தட விவரங்கள்:

துவங்கும் இடம்: சிம்லா
மொத்த நாட்கள்: 4
பயண நாட்கள்: 3
மொத்த தூரம்: 175 கி.மீ.
அதிகபட்ச எலிவேஷன்: 2750 மீட்டர்கள்
குறைந்த பட்ச எலிவேஷன்: 800 மீட்டர்கள்
டைப்: XC, MTB, ஆப் ரோடு, புரோக்கன் டார்மாக், கிராவெல், ராக்ஸ், மட், சேண்ட், லூஸ் ராக்

பந்தய வழித்தட விவரங்கள்:

முதல் நாள்: ஜூன் 23: சிம்லா - சஞ்சௌலி - டல்லி - மஷோப்ரா - டாக் பங்ளா (இரவு டாக் பங்ளாவில் ஓய்வு)

இரண்டாம் நாள்: ஜூன் 24: டாங் பங்ளா - சிபுர் - பல்டெயன் - நல்டெஹரா - சாபா - சுன்னி - டட்டாபனி - அல்சிந்தி நாட் பேன்க் - சுராக் - சிண்டி (இரவு ஆய்வு சிண்டியில்)

மூன்றாம் நாள்: ஜூன் 25: சிண்டி - சிண்டி பள்ளி - கார்-கர்சோக் சந்தை - சனர்லி சங்கர் டெக்ரா - ராய்கர் - புலா - ஜாங்கெலி சந்தை (இரவு ஓய்வு ஜாங்கெலியில்)

நான்காம் நாள்: ஜூன் 26: ஜாங்கெலி - ஜரோல், பனியாட் - துனாக் - ஜரோல் - ஜாங்கெலி (இரவு ஓய்வு ஜாங்கெலியில்)
 

click me!