SL vs AUS: 5 ஆண்டுகளுக்கு பிறகு ஆஸி., டெஸ்ட் அணியில் க்ளென் மேக்ஸ்வெல்

By karthikeyan VFirst Published Jun 23, 2022, 8:03 PM IST
Highlights

5 ஆண்டுகளுக்கு பிறகு ஆஸ்திரேலிய டெஸ்ட் அணியில் இடம்பிடித்துள்ளார் க்ளென் மேக்ஸ்வெல்.
 

இலங்கை அணி ஆஸ்திரேலியாவில் சுற்றுப்பயணம் செய்து ஆடிவருகிறது. டி20 தொடரை ஆஸ்திரேலிய அணி வென்ற நிலையில், 5 போட்டிகள் கொண்ட ஒருநாள் தொடரை இலங்கை அணி 3-1 என வென்றுவிட்டது. கடைசி ஒருநாள் போட்டி நாளை(ஜூன்24) நடக்கிறது.

அதன்பின்னர் 2 டெஸ்ட் போட்டிகள் கொண்ட தொடர் நடக்கவுள்ளது. அந்த டெஸ்ட் தொடருக்கான ஆஸ்திரேலிய அணியில் க்ளென் மேக்ஸ்வெல் சேர்க்கப்பட்டுள்ளார்.

ஆஸ்திரேலிய அதிரடி வீரரான க்ளென் மேக்ஸ்வெல், டி20 மற்றும் ஒருநாள் அணிகளில் ஆஸ்திரேலிய அணியின் முக்கியமான வீரராகவும் மேட்ச் வின்னராகவும் திகழ்ந்துவருகிறார். ஆனால் 2013ம் ஆண்டு டெஸ்ட் கிரிக்கெட்டில் அறிமுகமான மேக்ஸ்வெல், வெறும் ஏழே டெஸ்ட் போட்டிகளில் ஆடி 339 ரன்கள் மட்டுமே அடித்துள்ளார்.

டெஸ்ட் போட்டிகளில் சோபிக்காததால் மேக்ஸ்வெல்லுக்கு டெஸ்ட் அணியில் இடம் கிடைக்காமல் இருந்தது. கடைசியாக 2017ம் ஆண்டு வங்கதேசத்துக்கு எதிரான டெஸ்ட் போட்டியில் தான் ஆடினார். அதன்பின்னர் 5 ஆண்டுகளாக டெஸ்ட் அணியில் இடம்பெறாத மேக்ஸ்வெல்லுக்கு இப்போது இலங்கைக்கு எதிரான டெஸ்ட் தொடருக்கான ஆஸ்திரேலிய அணியில் இடம் கிடைத்துள்ளது.

இதையும் படிங்க - பயிற்சியாளர் பதவிக்கு தகுதியே இல்லாத ரவி சாஸ்திரியால் தான் கோலி ஃபார்மை இழந்தார்.! ரஷீத் லத்தீஃப் கடும் தாக்கு

ஆஸ்திரேலிய அணியின் முக்கியமான வீரரான டிராவிஸ் ஹெட் காயமடைந்ததால் டெஸ்ட் தொடரில் ஆடமுடியாமல் போயிற்று. அதனால் ஹெட்டுக்கு பதிலாக க்ளென் மேக்ஸ்வெல் ஆஸ்திரேலிய டெஸ்ட் அணியில் சேர்க்கப்பட்டுள்ளார்.

வரும் ஜூன் 29 மற்றும் ஜூலை 8 ஆகிய தேதிகளில் தொடங்கி 2 டெஸ்ட் போட்டிகள் நடக்கின்றன. ஐசிசி டெஸ்ட் சாம்பியன்ஷிப்புக்கான போட்டிகள் என்பதால் இரு அணிகளுமே வெற்றிக்காக போராடும் என்பதால் போட்டி மிகக்கடுமையாக இருக்கும்.
 

click me!