பயிற்சியாளர் பதவிக்கு தகுதியே இல்லாத ரவி சாஸ்திரியால் தான் கோலி ஃபார்மை இழந்தார்.! ரஷீத் லத்தீஃப் கடும் தாக்கு

By karthikeyan VFirst Published Jun 23, 2022, 6:33 PM IST
Highlights

விராட் கோலி ஃபார்மை இழந்து தவிப்பதற்கு இந்திய அணியின் முன்னாள் தலைமை பயிற்சியாளர் ரவி சாஸ்திரி தான் காரணம் என்று பாகிஸ்தான் முன்னாள் ஜாம்பவான் ரஷீத் லத்தீஃப் கடுமையாக விமர்சித்துள்ளார்.
 

சமகால கிரிக்கெட்டின் தலைசிறந்த வீரர்களில் ஒருவரான விராட் கோலி, சர்வதேச கிரிக்கெட்டில் சதங்களை குவித்து பல சாதனைகளை படைத்துவந்த நிலையில், கடந்த 3 ஆண்டுகளாக விராட் கோலி ஃபார்மில் இல்லாமல் தவித்துவருகிறார்.

சர்வதேச கிரிக்கெட்டில் 70 சதங்களை விளாசியுள்ள விராட் கோலி, 71வது சதத்திற்காக இரண்டரை ஆண்டுகளாக காத்துக்கொண்டிருக்கிறார். விராட் கோலி ஐபிஎல்லிலும் சரியாக ஆடுவதில்லை.

டி20 உலக கோப்பை நெருங்கிவரும் நிலையில், விராட் கோலியின் ஃபார்ம் இந்திய அணிக்கு ரொம்ப முக்கியம். அந்தவகையில் விராட் கோலி விரைவில் விஸ்வரூபம் எடுக்கவேண்டும் என்பதே ரசிகர்களின் விருப்பமாக உள்ளது. அதற்கிடையே, இங்கிலாந்தில் நடக்கும் டெஸ்ட், ஒருநாள் மற்றும் டி20 தொடர்களில் விராட் கோலி சிறப்பாக ஆடி மீண்டும் ஃபார்முக்கு வருவதுடன், 71வது சதத்தை பதிவு செய்யும் முனைப்பில் உள்ளார்.

இந்நிலையில், விராட் கோலி ஃபார்மில் இல்லாமல் போனதற்கு இந்திய அணியின் முன்னாள் தலைமை பயிற்சியாளர் ரவி சாஸ்திரி தான் காரணம் என்று பாகிஸ்தான் முன்னாள் வீரர் ரஷீத் லத்தீஃப் கருத்து கூறியுள்ளார்.

இதையும் படிங்க - NED vs ENG: பிட்ச்சுக்கு வெளியே போன பந்தை கிரவுண்டுக்கு வெளியே அனுப்பிய பட்லர்..! வைரல் வீடியோ

இதுகுறித்து பேசியுள்ள ரஷீத் லத்தீஃப், ரவி சாஸ்திரியால் தான் கோலி ஃபார்மை இழந்தார். அனில் கும்ப்ளேவை ஓரங்கட்டிவிட்டு, பயிற்சியாளராக நியமிக்கும் அளவிற்கு ரவி சாஸ்திரி சிறந்தவரா என்று எனக்கு தெரியவில்லை. அவர் ஒரு ஒளிபரப்பாளர்(வர்ணனையாளர்). அவருக்கும் பயிற்சிக்கும் சம்மந்தமே இல்லை. விராட் கோலியை தவிர, ரவி சாஸ்திரியை பயிற்சியாளராக நியமித்ததில் வேறு சிலரது உள்ளீடுகளும் தலையீடுகளும் இருந்திருக்கிறது. அதுவே எதிர்மறையான தாக்கத்தை ஏற்படுத்திவிட்டது. ரவி சாஸ்திரி பயிற்சியாளராக நியமிக்கப்படாவிட்டால், கோலி ஃபார்மை இழந்திருக்கவே மாட்டார் என்று ரஷீத் லத்தீஃப் கருத்து கூறியுள்ளார்.
 

click me!