IND vs LEIC: பயிற்சி போட்டியில் முதல் ஒரு மணி நேரத்தில் 4 விக்கெட்டை இழந்த இந்தியா..! படுமோசமான பேட்டிங்

By karthikeyan VFirst Published Jun 23, 2022, 4:51 PM IST
Highlights

லெய்செஸ்டெர்ஷைர் அணிக்கு எதிரான பயிற்சி போட்டியில் முதல் ஒரு மணி நேரத்தில் 4 விக்கெட்டுகளை இழந்தது இந்திய அணி.
 

இங்கிலாந்து - இந்தியா இடையேயான ஒரு டெஸ்ட் போட்டி வரும் ஜூலை 1ம் தேதி தொடங்குகிறது. எட்ஜ்பாஸ்டனில் இந்த டெஸ்ட் போட்டி நடக்கவுள்ளது. இந்த டெஸ்ட் உட்பட டி20, ஒருநாள் கிரிக்கெட் தொடர்களில் ஆடுவதற்காக இங்கிலாந்து சென்றுள்ளது இந்திய அணி.

டெஸ்ட் போட்டிக்கு முன்பாக இந்திய அணி பயிற்சி போட்டியில் ஆடிவருகிறது. லெய்செஸ்டெர்ஷைர் அணிக்கு எதிரான பயிற்சி போட்டியில் இந்திய அணி ஆடிவருகிறது. இந்த போட்டியில் டாஸ் வென்ற இந்திய அணி கேப்டன் ரோஹித் சர்மா பேட்டிங்கை தேர்வு செய்தார்.

இந்திய அணி:

ரோஹித் சர்மா (கேப்டன்), ஷுப்மன் கில், ஷ்ரேயாஸ் ஐயர், விராட் கோலி, ஹனுமா விஹாரி, ஸ்ரீகர் பரத் (விக்கெட் கீப்பர்), ரவீந்திர ஜடேஜா, ஷர்துல் தாகூர், முகமது ஷமி, முகமது சிராஜ், உமேஷ் யாதவ்.

இதையும் படிங்க - ஒழுங்கா ஆடலைனா விமர்சிக்கத்தான் செய்வாங்க கோலி.. ஊர் வாயை உங்களால் அடக்கமுடியாது - கபில் தேவ்

முதலில் பேட்டிங் ஆடிவரும் இந்திய அணியின் தொடக்க வீரர்களாக ரோஹித் சர்மாவும் ஷுப்மன் கில்லும் களமிறங்கினர். இருவருமே அடித்து ஆடி வேகமாக ஸ்கோர் செய்தனர். 28 பந்தில் 21 ரன்கள் அடித்து ஷுப்மன் கில் ஆட்டமிழக்க, ரோஹித் சர்மா 25 ரன்களுக்கு ஆட்டமிழந்தார். 3ம் வரிசையில் இறங்கிய ஹனுமா விஹாரி 3 ரன்னில் ஆட்டமிழக்க, 5ம் வரிசையில் ஷ்ரேயாஸ் ஐயர் ரன்னே அடிக்காமல் டக் அவுட்டாக,  முதல் ஒரு மணி நேரத்திலேயே வெறும் 55 ரன்களுக்கு 4 விக்கெட்டுகளை இழந்துவிட்டது இந்திய அணி.

4ம் வரிசையில் இறங்கிய விராட் கோலியுடன் ரவீந்திர ஜடேஜா ஜோடி சேர்ந்து ஆடிவருகிறார். 
 

click me!