ஒழுங்கா ஆடலைனா விமர்சிக்கத்தான் செய்வாங்க கோலி.. ஊர் வாயை உங்களால் அடக்கமுடியாது - கபில் தேவ்

By karthikeyan VFirst Published Jun 23, 2022, 4:35 PM IST
Highlights

ஒழுங்காக விளையாடவில்லை என்றால் மக்கள் விமர்சிக்கத்தான் செய்வார்கள். யாரும் விமர்சிக்கக்கூடாது என்றால் நன்றாக விளையாட வேண்டும் என்று கபில் தேவ் கருத்து கூறியிருக்கிறார்.
 

சமகால கிரிக்கெட்டின் தலைசிறந்த வீரர்களில் ஒருவரான விராட் கோலி, சர்வதேச கிரிக்கெட்டில் சதங்களை குவித்து பல சாதனைகளை படைத்துவந்த நிலையில், கடந்த 3 ஆண்டுகளாக விராட் கோலி ஃபார்மில் இல்லாமல் தவித்துவருகிறார்.

சர்வதேச கிரிக்கெட்டில் 70 சதங்களை விளாசியுள்ள விராட் கோலி, 71வது சதத்திற்காக இரண்டரை ஆண்டுகளாக காத்துக்கொண்டிருக்கிறார். விராட் கோலி ஐபிஎல்லிலும் சரியாக ஆடுவதில்லை.

டி20 உலக கோப்பை நெருங்கிவரும் நிலையில், விராட் கோலியின் ஃபார்ம் இந்திய அணிக்கு ரொம்ப முக்கியம். அந்தவகையில் விராட் கோலி விரைவில் விஸ்வரூபம் எடுக்கவேண்டும் என்பதே ரசிகர்களின் விருப்பமாக உள்ளது. அதற்கிடையே, இங்கிலாந்தில் நடக்கும் டெஸ்ட், ஒருநாள் மற்றும் டி20 தொடர்களில் விராட் கோலி சிறப்பாக ஆடி மீண்டும் ஃபார்முக்கு வருவதுடன், 71வது சதத்தை பதிவு செய்யும் முனைப்பில் உள்ளார்.

விராட் கோலி சரியாக ஆடாத நிலையில், அவர் பெரிய வீரராகவே இருந்தாலும் விமர்சனங்களை எதிர்கொண்டுவருகிறார். வெளியே இருப்பவர்களின் விமர்சனங்களை பற்றி கவலைப்படுவதில்லை என்பதே பெரும்பாலான கிரிக்கெட் வீரர்களின், குறிப்பாக பெரிய கிரிக்கெட் வீரர்களின் கருத்தாக இருக்கும்.

இதையும் படிங்க - ரஞ்சி ஃபைனலில் சதமடித்த சர்ஃபராஸ் கான்.. உணர்ச்சி பெருக்கில் கண்ணீருடன் சதத்தை கொண்டாடிய வைரல் வீடியோ

இதுகுறித்து பேசியுள்ள முன்னாள் கேப்டனும், ஜாம்பவான் ஆல்ரவுண்டருமான கபில் தேவ், சரியாக விளையாடவில்லை என்றால் மக்கள் விமர்சிக்கத்தான் செய்வார்கள். அதை ஏற்றுக்கொள்ளத்தான் வேண்டும் என்று கருத்து கூறியுள்ளார். மேலும் விமர்சிப்பவர்களின் வாயை அடைக்க முடியாது. நன்றாக பேட்டிங் ஆடி, பேட்டால் தான் அவர்களது வாயை அடைக்க முடியுமே தவிர, விமர்சனங்களே வரக்கூடாது என்று எதிர்பார்க்க முடியாது என்று கபில் தேவ் கருத்து கூறியுள்ளார்.

விராட்கோலி 71வது சதத்தை அடிக்க முடியாமல் திணறுவதை பார்க்க கஷ்டமாக இருப்பதாகவும், இது வருத்தமளிப்பதாகவும் தெரிவித்துள்ளார் கபில் தேவ்.
 

click me!