ENG vs NZ: 3வது டெஸ்ட் போட்டி டாஸ் ரிப்போர்ட்! வில்லியம்சன் வருகையால் வலுப்பெற்ற நியூசி., ஒயிட்வாஷை தடுக்குமா?

By karthikeyan VFirst Published Jun 23, 2022, 3:17 PM IST
Highlights

இங்கிலாந்துக்கு எதிரான 3வது டெஸ்ட் போட்டியில் டாஸ் வென்ற நியூசிலாந்து அணி பேட்டிங்கை தேர்வு செய்துள்ளது.
 

நியூசிலாந்து அணி இங்கிலாந்தில் சுற்றுப்பயணம் செய்து ஆடிவருகிறது. 3 டெஸ்ட் போட்டிகள் கொண்ட தொடரின் முதலிரண்டு டெஸ்ட் போட்டிகளிலும் வெற்றி பெற்று இங்கிலாந்து அணி தொடரை வென்றுவிட்டது.

இந்நிலையில், 3வது டெஸ்ட் போட்டி லீட்ஸில் இன்று தொடங்குகிறது. இந்த போட்டியிலும் வெற்றி பெற்று நியூசிலாந்தை ஒயிட்வாஷ் செய்யும் முனைப்பில் இங்கிலாந்து அணியும், ஒயிட்வாஷை தடுத்து ஆறுதல் வெற்றியாவது பெறும் முனைப்பில் நியூசிலாந்து அணியும் மோதுகின்றன.

காயத்திலிருந்து மீண்டு முழு ஃபிட்னெஸை பெற்ற நியூசிலாந்து கேப்டன் கேன் வில்லியம்சன் இந்த டெஸ்ட்டில் ஆடுகிறார். டாஸ் வென்ற நியூசிலாந்து கேப்டன் கேன் வில்லியம்சன் பேட்டிங்கை தேர்வு செய்தார். வில்லியம்சன் அணிக்குள் வந்ததால் மாட் ஹென்ரி நீக்கப்பட்டுள்ளார். மேலும் காயமடைந்த கைல் ஜாமிசனுக்கு பதிலாக நீல் வாக்னர் ஆடுகிறார்.

நியூசிலாந்து அணி:

டாம் லேதம், வில் யங், டெவான் கான்வே, கேன் வில்லியம்சன் (கேப்டன்), ஹென்ரி நிகோல்ஸ், டேரைல் மிட்செல், டாம் பிளண்டெல் (விக்கெட் கீப்பர்), மைக்கேல் பிரேஸ்வெல், டிம் சௌதி, டிரெண்ட் போல்ட், நீல் வாக்னர்.

இதையும் படிங்க - T20 WC-யில் ரோஹித் சர்மாவின் முக்கியமான துருப்புச்சீட்டாக இந்த வீரர் தான் இருப்பார்..! கவாஸ்கர் கருத்து

இங்கிலாந்து அணியில் சீனியர் ஃபாஸ்ட் பவுலர் ஜேம்ஸ் ஆண்டர்சனுக்கு ஓய்வளிக்கப்பட்டுள்ளது. அவருக்கு பதிலாக ஓவர்டன் சேர்க்கப்பட்டுள்ளார்.

இங்கிலாந்து அணி:

அலெக்ஸ் லீஸ், ஜாக் க்ராவ்லி, ஆலி போப், ஜோ ரூட், ஜானி பேர்ஸ்டோ, பென் ஸ்டோக்ஸ் (கேப்டன்), பென் ஃபோக்ஸ் (விக்கெட் கீப்பர்), மேட்டி பாட்ஸ், ஜேமி ஓவர்டன், ஸ்டூவர்ட் பிராட், ஜாக் லீச்.
 

click me!