காயத்திலிருந்து மீண்டு ஃபிட்னெஸை பெற்ற 2 முக்கியமான வீரர்கள்..! இந்திய அணிக்கு அடுத்தடுத்த குட் நியூஸ்

By karthikeyan VFirst Published Jun 21, 2022, 9:45 PM IST
Highlights

காயத்தால் பாதிக்கப்பட்டிருந்த தீபக் சாஹர் மற்றும் வாஷிங்டன் சுந்தர் ஆகிய இருவரும் ஃபிட்னெஸை பெற்றுவிட்டதால் விரைவில் இந்திய அணிக்கு திரும்பவுள்ளார்கள்.
 

டி20 உலக கோப்பை நெருங்கிவரும் நிலையில் இந்திய அணி அதற்காக தீவிரமாக தயாராகிவருகிறது. இந்திய அணி அனுபவ மற்றும் இளம் வீரர்கள் கலந்த நல்ல பேலன்ஸான வலுவான அணியாக திகழ்கிறது. பென்ச் வலிமையும் சிறப்பாக உள்ளது.

ஆனாலும் தீபக் சாஹர், வாஷிங்டன் சுந்தர் ஆகிய வீரர்கள் காயத்தால் அவதிப்பட்டுவந்தது பின்னடைவாக இருந்தது. தீபக் சாஹர் வெஸ்ட் இண்டீஸுக்கு எதிரான தொடரிலும், வாஷிங்டன் சுந்தர் ஐபிஎல்லிலும் காயமடைந்தனர்.

தீபக் சாஹரை ரூ.14 கோடி என்ற பெரும் தொகைக்கு சிஎஸ்கே அணி ஏலத்தில் எடுத்தும் கூட, காயம் காரணமாக அவர் ஐபிஎல்லில் ஆடமுடியாமல் போனது சிஎஸ்கே அணிக்கு பின்னடைவுதான். 

காயமடைந்த தீபக் சாஹர் மற்றும் வாஷிங்டன் சுந்தர் ஆகிய இருவரும் பெங்களூருவில் உள்ள தேசிய கிரிக்கெட் அகாடமியில் தான் சிகிச்சை மற்றும் பயிற்சி பெற்றுவருகின்றனர். இவர்களுடன் நடராஜனும் பயிற்சி எடுத்துவருகிறார்.

இந்நிலையில், தீபக் சாஹர் இன்னும் 4-5 வாரங்களில் முழு ஃபிட்னெஸை அடைந்துவிடுவேன் என்று தெரிவித்திருப்பது இந்திய அணிக்கு நற்செய்தி. தனது ஃபிட்னெஸ் குறித்து பேசியுள்ள தீபக் சாஹர், இப்போது 4-5 ஓவர்கள் தொடர்ச்சியாக வீசமுடிகிறது. இன்னும் 4-5 வாரங்களில் போட்டிகளில் ஆடுமளவிற்கான ஃபிட்னெஸை பெற்றுவிடுவேன் என்று தெரிவித்துள்ளார்.

இதையும் படிங்க - ENG vs IND: தப்பு பண்ணிட்டீங்க தம்பிங்களா.. ரோஹித், கோலிக்கு பிசிசிஐ எச்சரிக்கை

டி20 உலக கோப்பை நெருங்கிவரும் நிலையில், பவர்ப்ளேயில் அருமையாக வீசக்கூடிய மற்றும் பேட்டிங்கும் ஆடவல்ல தீபக் சாஹரின் இணைவு இந்திய அணிக்கு வலுசேர்க்கும்.

அதேபோலவே, வாஷிங்டன் சுந்தரும் ஃபிட்னெஸை பெற்றுவிட்டதாகவும், அவர் கவுண்டி அணியான லங்காஷைர் அணிக்காக ஆடவுள்ளதாகவும் தகவல் வெளியாகியுள்ளது.
 

click me!