ENG vs IND: இந்திய அணிக்கு செம குட் நியூஸ்.. 2 நாளில் இங்கிலாந்துக்கு பறக்கும் அஷ்வின்

Published : Jun 21, 2022, 07:59 PM IST
ENG vs IND: இந்திய அணிக்கு செம குட் நியூஸ்.. 2 நாளில் இங்கிலாந்துக்கு பறக்கும் அஷ்வின்

சுருக்கம்

கொரோனாவால் பாதிக்கப்பட்டு குவாரண்டினில் இருந்த அஷ்வின், இன்னும் 2 நாட்களில் இங்கிலாந்துக்கு சென்று இந்திய அணியுடன் இணைவார் என்று தகவல் வெளியாகியுள்ளது.   

இந்திய அணி கடந்த ஆண்டு இங்கிலாந்துக்கு சுற்றுப்பயணம் செய்து 5 டெஸ்ட் போட்டிகள் கொண்ட தொடரில் ஆடியது. 4 டெஸ்ட் போட்டிகள் முடிந்த நிலையில், கொரோனா காரணமாக கடைசி டெஸ்ட் போட்டி ஆடமுடியாமல் போனது.

அந்த கடைசி டெஸ்ட் போட்டி மற்றும் 3டி20, 3 ஒருநாள் போட்டிகள் கொண்ட தொடரில் ஆடுவதற்காக இந்திய அணி இங்கிலாந்துக்கு சென்றுள்ளது. ஜூலை 1ம் தேதி அந்தவொரு டெஸ்ட் போட்டி எட்ஜ்பாஸ்டனில் தொடங்குகிறது. 

அதற்கு முன் இந்திய அணி இங்கிலாந்தில் பயிற்சி போட்டிகளில் ஆடுவதால் கடந்த 16ம் தேதியே இந்திய டெஸ்ட் அணியில் இடம்பெற்றுள்ள வீரர்கள் இங்கிலாந்துக்கு புறப்பட்டு சென்றுவிட்டனர். ஆனால் டெஸ்ட் அணியில் இடம்பெற்றுள்ள அஷ்வின் இந்திய அணியுடன் இங்கிலாந்துக்கு செல்லவில்லை.

அஷ்வின் கொரோனாவால் பாதிக்கப்பட்டதால் தான் இங்கிலாந்துக்கு செல்லவில்லை. அவர் தனிமையில் இருந்துவந்தார். அவரது குவாரண்டின் முடிவடைவதால், இன்னும் 2 நாட்களில் இங்கிலாந்துக்கு சென்று இந்திய அணியுடன் இணைவார் என்று தகவல் வெளியாகியிருக்கிறது. 

இந்திய அணியின் சீனியர் ஸ்பின் ஆல்ரவுண்டரான அஷ்வின் இணைவது அணிக்கு பலம் சேர்க்கும். எனவே இது இந்திய அணிக்கு மிக நற்செய்தி ஆகும். 

இங்கிலாந்துக்கு எதிரான இந்திய டெஸ்ட் அணி:

ரோஹித் சர்மா (கேப்டன்), கேஎல் ராகுல் (துணை கேப்டன்), ஷுப்மன் கில், விராட் கோலி, ஷ்ரேயாஸ் ஐயர், ஹனுமா விஹாரி, புஜாரா, ரிஷப் பண்ட்(விக்கெட் கீப்பர்), பரத் (விக்கெட் கீப்பர்), அஷ்வின், ஜடேஜா, ஷர்துல் தாகூர், ஷமி, பும்ரா, சிராஜ், உமேஷ் யாதவ், பிரசித் கிருஷ்ணா.
 

PREV
Read more Articles on
click me!

Recommended Stories

IPL 2026 Final: கோப்பை யாருக்கு? RCB vs GT இறுதிப் போட்டி... அனல் பறக்கும் அகமதாபாத்!
Orange Cap Race: ஆரஞ்சு கேப் ரேஸ்: வைபவ் சாதனையை முறியடிப்பார்களா கில், சாய் சுதர்சன்?