T20 WC-யில் ரோஹித் சர்மாவின் முக்கியமான துருப்புச்சீட்டாக இந்த வீரர் தான் இருப்பார்..! கவாஸ்கர் கருத்து

By karthikeyan VFirst Published Jun 21, 2022, 5:08 PM IST
Highlights

டி20 உலக கோப்பைக்கான இந்திய அணியில் கேப்டன் ரோஹித் சர்மாவின் துருப்புச்சீட்டாக எந்த வீரர் இருப்பார் என்று சுனில் கவாஸ்கர் கருத்து கூறியுள்ளார்.
 

டி20 உலக கோப்பைக்காக இந்திய அணி தீவிரமாக தயாராகிவருகிறது. இந்திய அணியின் கோர் வீரர்களை கொண்ட ஆடும் லெவனுக்கு அப்பாற்பட்டு நிறைய திறமையான வீரர்கள் இருப்பதால் பென்ச் பலம் வலுவாக உள்ளது. 

ஐபிஎல்லில் அபாரமாக விளையாடி, தென்னாப்பிரிக்க டி20 தொடரில் இடம்பெற்று அந்த தொடரிலும் நன்றாக ஆடிய தினேஷ் கார்த்திக், ஹர்திக் பாண்டியா, ஹர்ஷல் படேல், ஆவேஷ் கான் ஆகிய வீரர்கள் நம்பிக்கை அளிக்கின்றனர்.

இந்நிலையில், டி20 உலக கோப்பையில் ரோஹித் சர்மாவின் துருப்புச்சீட்டாக எந்த வீரர் இருப்பார் என்று முன்னாள் ஜாம்பவான் சுனில் கவாஸ்கர் கருத்து கூறியுள்ளார்.

இதுகுறித்து பேசியுள்ள சுனில் கவாஸ்கர், புவனேஷ்வர் குமார், பும்ரா, ஷமி ஆகிய ஃபாஸ்ட் பவுலர்கள் இருந்தாலும், ரோஹித் சர்மாவின் முக்கியமான துருப்புச்சீட்டாக ஹர்ஷல் படேல் இருப்பார். பவர்ப்ளே மற்றும் டெத் ஓவர்கள் ஆகிய இரண்டிலும் பந்துவீசக்கூடிய ஹர்ஷல் படேல் மாதிரியான ஒரு பவுலர் கிடைப்பது கேப்டனுக்கு மிக நல்ல விஷயம். வேகத்தில் அவர் காட்டும் வேரியேஷன் அபாரமானது. கண்டிப்பாக டி20 உலக கோப்பைக்கான அணியில் ஹர்ஷல் படேல் இருப்பார்.

ஹர்ஷல் படேம் அருமையான வீரர். டெத் ஓவர்களில் ஸ்லே டெலிவரிகளை வீசக்கூடிய பவுலர்கள் யாருமில்லை. அதை ஹர்ஷல் படேல் சிறப்பாக செய்கிறார். தென்னாப்பிரிக்காவுக்கு எதிரான 3வது டி20 போட்டியிலிருந்து சரியான லெந்த்தை பிடித்து, விக்கெட்டுகளை வீழ்த்தியதுடன், தென்னாப்பிரிக்க வீரர்கள் மீது அழுத்தத்தையும் போட்டார். மேலும் ஆல்ரவுண்டருக்கான அனைத்து திறமைகளையும் அவரிடம் உள்ளது. அழுத்தத்தை சிறப்பாக கையாளக்கூடிய வீரர். அவர் இந்திய அணியின் மிகப்பெரிய சொத்து என்று கவாஸ்கர் கூறியுள்ளார்.

இதையும் படிங்க - T20 WC இந்திய அணியில் இவங்க 2 பேரையும் எக்காரணத்தை முன்னிட்டும் புறக்கணிக்கவே முடியாது

ஐபிஎல்லில் ஆர்சிபி அணிக்காக அபாரமாக பந்துவீசி 19 விக்கெட்டுகளை வீழ்த்தி, சீசனில் அதிக விக்கெட்டுகள் வீழ்த்திய பவுலர்களில் 9ம் இடத்தில் இருந்தார். தென்னாப்பிரிக்காவுக்கு எதிரான டி20 தொடரிலும் 4 போட்டிகளில் 7 விக்கெட் வீழ்த்தினார். ஒரு போட்டியில் 4 விக்கெட்டுகளை வீழ்த்தி அசத்தினார். ஹர்ஷல் படேல் ஆக்‌ஷனை மாற்றாமல் வேகத்தை மாற்றி வீசுவதால் அவரது பவுலிங்கை எதிர்கொள்வது எதிரணி வீரர்களுக்கு கடினமாக உள்ளது. 

அதனால், பவர்ப்ளே மற்றும் டெத் ஆகிய இரண்டு சூழல்களிலும் சிறப்பாக பந்துவீசும் ஹர்ஷல் படேல் டி20 உலக கோப்பையில் ரோஹித் சர்மாவின் துருப்புச்சீட்டாக இருப்பார் என்று கவாஸ்கர் கருத்து கூறியுள்ளார்.
 

click me!