T20 WC இந்திய அணியில் இவங்க 2 பேரையும் எக்காரணத்தை முன்னிட்டும் புறக்கணிக்கவே முடியாது

By karthikeyan VFirst Published Jun 21, 2022, 4:13 PM IST
Highlights

டி20 உலக கோப்பைக்கான இந்திய அணியில் தினேஷ் கார்த்திக் மற்றும் ஹர்திக் பாண்டியா ஆகிய இருவருக்கும் கண்டிப்பாக இடம் கிடைக்கும் என்று தென்னாப்பிரிக்க முன்னாள் ஜாம்பவான் க்ரேம் ஸ்மித் கருத்து கூறியுள்ளார்.
 

டி20 உலக கோப்பை வரும் அக்டோபர் - நவம்பர் மாதங்களில் ஆஸ்திரேலியாவில் நடக்கவுள்ளது. இந்த டி20 உலக கோப்பைக்காக ரோஹித் சர்மா தலைமையிலான இந்திய அணி தீவிரமாக தயாராகிவருகிறது.

டி20 உலக கோப்பைக்கான இந்திய அணியில் இடம்பெற பல வீரர்களுக்கு இடையே கடும் போட்டி நிலவுகிறது. எனவே இந்திய அணி தேர்வு மிகச்சவாலானதாக இருக்கும். 

இந்திய அணியின் ஓபனிங் காம்பினேஷன், மிடில் ஆர்டர் பேட்டிங், ஸ்பின் காம்பினேஷன், ஃபாஸ்ட் பவுலிங் யூனிட் என அனைத்துமே கிட்டத்தட்ட உறுதியாகிவிட்டது. ஒரேயொரு இடத்திற்கான போட்டி மட்டுமே நிலவுகிறது. சூர்யகுமார் யாதவ் - ஷ்ரேயாஸ் ஐயர் ஆகிய இருவருக்கும் 4ம் வரிசை பேட்டிங்கிற்கான போட்டி நிலவுகிறது. 

டி20 உலக கோப்பைக்கான இந்திய அணியில் எந்தெந்த வீரர்கள் இடம்பெறுகிறார்கள் என்பதை பார்க்க சுவாரஸ்யமாக இருக்கும். தென்னாப்பிரிக்க தொடரில் இந்திய அணிக்கு அதிரடியான 2 ஃபினிஷர்கள் உறுதியாக கிடைத்துவிட்டனர். தினேஷ் கார்த்திக் மற்றும் ஹர்திக் பாண்டியா ஆகிய இருவரும் ஐபிஎல்லில் அபாரமாக ஆடினர். அதே ஃபார்மை தென்னாப்பிரிக்க தொடரிலும் தொடர்ந்தனர். அதிரடியாக ஆடி இந்திய அணிக்கு சிறப்பாக போட்டிகளை முடித்து கொடுத்தனர். தினேஷ் கார்த்திக் இந்த தொடரில் தான் சர்வதேச டி20 கிரிக்கெட்டில் முதல் அரைசதத்தை பதிவு செய்தார்.

ஹர்திக் பாண்டியா இந்த தொடரில் 153.9 என்ற ஸ்டிரைக் ரேட்டில் ஆடி 117 ரன்கள் அடித்தார். 158.6 என்ற ஸ்டிரைக் ரேட்டில் ஆடி 92 ரன்கள் அடித்தார்.

இந்நிலையில், ஹர்திக் மற்றும் தினேஷ் கார்த்திக் குறித்து பேசிய க்ரேம் ஸ்மித், டி20 உலக கோப்பைக்கு முன் இன்னும் நிறைய போட்டிகள் ஆட வேண்டியிருக்கிறது. அடுத்த 2 மாதங்களில் என்ன வேண்டுமானாலும் நடக்கலாம். ஆனால் ஹர்திக் பாண்டியா, தினேஷ் கார்த்திக் ஆகிய இருவரையும் கண்டிப்பாக அணியில் சேர்த்தே ஆக வேண்டும். தினேஷ் கார்த்திக் ஃபினிஷிங் ரோலில் அனுபவ்ம வாய்ந்தவர். ஹர்திக் பாண்டியாவும் செம ஃபார்மில் அருமையாக ஆடிக்கொண்டிருக்கிறார். மனதளவிலும் ஹர்திக் வலிமையாக இருக்கிறார். ஹர்திக் பாண்டியா எக்ஸ் ஃபேக்டர் பிளேயர். அவரது இருப்பு அணியின் பேலன்ஸை வலுப்படுத்தும். எனவே தினேஷ் கார்த்திக்கும் ஹர்திக் பாண்டியாவும் டி20 உலக கோப்பைக்கான அணியில் கண்டிப்பாக இருப்பார்கள். அவர்கள் இல்லாத அணியை நினைத்துக்கூட பார்க்கமுடியாது என்று க்ரேம் ஸ்மித் தெரிவித்துள்ளார்.
 

click me!