SL vs AUS 4வது ஒருநாள் போட்டி: தொடரை வெல்லுமா இலங்கை..? தடுக்குமா ஆஸி.,? முக்கியமான போட்டியின் டாஸ் ரிப்போர்ட்

Published : Jun 21, 2022, 02:28 PM IST
SL vs AUS 4வது ஒருநாள் போட்டி: தொடரை வெல்லுமா இலங்கை..? தடுக்குமா ஆஸி.,? முக்கியமான போட்டியின் டாஸ் ரிப்போர்ட்

சுருக்கம்

இலங்கைக்கு எதிரான 4வது ஒருநாள் போட்டியில் டாஸ் வென்ற ஆஸ்திரேலிய அணி ஃபீல்டிங்கை தேர்வு செய்துள்ளது.  

இலங்கை - ஆஸ்திரேலியா இடையேயான 5 ஒருநாள் போட்டிகள் கொண்ட தொடரின் 3 போட்டிகள் முடிவில் இலங்கை அணி 2-1 என முன்னிலை வகிக்கிறது.

இந்நிலையில், 4வது ஒருநாள் போட்டி இன்று கொழும்பில் நடக்கிறது. இந்த போட்டியில் வெற்றி பெற்று தொடரை வெல்லும் முனைப்பில் இலங்கை அணியும், தொடரை வெல்லும் வாய்ப்பை தக்கவைக்க இந்த போட்டியில் வெற்றி பெறும் முனைப்பில் ஆஸ்திரேலிய அணியும் மோதுகின்றன.

இந்த போட்டியில் டாஸ் வென்ற ஆஸ்திரேலிய கேப்டன் ஆரோன் ஃபின்ச் ஃபீல்டிங்கை தேர்வு செய்தார். காயத்தால் பாதிக்கப்பட்ட ஸ்டீவ் ஸ்மித் இந்த போட்டியிலும் ஆடவில்லை. இந்த போட்டிக்கான ஆஸ்திரேலிய அணியில் எந்த மாற்றமும் செய்யப்படவில்லை. இலங்கை அணியிலும் எந்த மாற்றமும் செய்யப்படவில்லை. கடந்த போட்டியில் ஆடிய அதே ஆடும் லெவன் காம்பினேஷனுடன் தான் இரு அணிகளும் களமிறங்கியுள்ளன.

இலங்கை அணி:

நிரோஷன் டிக்வெல்லா (விக்கெட் கீப்பர்), பதும் நிசாங்கா, குசால் மெண்டிஸ், தனஞ்செயா டி சில்வா, சாரித் அசலங்கா, தசுன் ஷனாகா (கேப்டன்), சாமிகா கருணரத்னே, வனிந்து ஹசரங்கா, துனித் வெல்லாலகே, ஜெஃப்ரி வாண்டர்சே, மஹீஷ் தீக்‌ஷனா.

ஆஸ்திரேலிய அணி:

ஆரோன் ஃபின்ச் (கேப்டன்), டேவிட் வார்னர், மிட்செல் மார்ஷ், மார்னஸ் லபுஷேன், டிராவிஸ் ஹெட், அலெக்ஸ் கேரி (விக்கெட் கீப்பர்), க்ளென் மேக்ஸ்வெல், கேமரூன் க்ரீன், பாட் கம்மின்ஸ், மேத்யூ குனெமேன், ஜோஷ் ஹேசில்வுட்.
 

PREV
click me!

Recommended Stories

Harmanpreet Kaur Net Worth: கோடிகளை குவித்த ஹர்மன்ப்ரீத் கவுர்! மொத்த சொத்து மதிப்பு எவ்வளவு?
KL Rahul: இந்தியாவின் நியூ ரன் மெஷின்.. ஒரே சதத்தில் பல சாதனைகளை தகர்த்த கே.எல்.ராகுல்!