டி20 கிரிக்கெட்: வேறு யாரும் நினைத்துக்கூட பார்க்கமுடியாத சாதனையை செய்த பாகிஸ்தான் பவுலர்

By karthikeyan VFirst Published Aug 26, 2018, 3:42 PM IST
Highlights

டி20 கிரிக்கெட்டில் பாகிஸ்தான் பவுலர் முகமது இர்ஃபான் அபார சாதனை ஒன்றை நிகழ்த்தியுள்ளார்.
 

டி20 கிரிக்கெட்டில் பாகிஸ்தான் பவுலர் முகமது இர்ஃபான் அபார சாதனை ஒன்றை நிகழ்த்தியுள்ளார்.

இந்தியாவில் ஐபிஎல் நடத்தப்படுவதை பல்வேறு நாடுகளிலும் டி20 தொடர்கள் நடத்தப்பட்டுவருகின்றன. வெஸ்ட் இண்டீஸில் கரீபியன் பிரீமியர் லீக் தொடர் நடத்தப்பட்டு வருகிறது. இந்த ஆண்டுக்கான கரீபியன் பிரீமியர் லீக் தொடர் நடந்துவருகிறது. 

இதில், ஜேசன் ஹோல்டர் தலைமையிலான பர்படாஸ் டிரைடெண்ட்ஸ் அணிக்கும் கிறிஸ் கெய்ல் தலைமையிலான செயிண்ட் கிட்ஸ் மற்றும் நெவிஸ் பாட்ரியாட்ஸ் ஆகிய அணிகளுக்கு இடையே நடந்த போட்டியில், செயிண்ட் கிட்ஸ் அணி 6 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது.

இந்த போட்டியில் முதலில் பேட்டிங் செய்த பர்படாஸ் அணி, 20 ஓவர் முடிவில் 6 விக்கெட் இழப்பிற்கு 147 ரன்கள் எடுத்தது. 148 ரன்கள் என்ற இலக்குடன் களமிறங்கிய செயிண்ட் கிட்ஸ் அணிக்கு, பர்படாஸ் அணியின் பவுலர் முகமது இர்ஃபான் கடுமையாக டஃப் கொடுத்தார். இர்ஃபானின் பவுலிங்கில் சிங்கிள் எடுக்கக்கூட முடியாமல் பேட்ஸ்மேன்கள் திணறினர்.

இர்ஃபான் வீசிய 4 ஓவர்களில் 3 ஓவர்கள் மெய்டன். அவர் வீசிய 24 பந்துகளில் ஒரு ரன் மட்டுமே எதிரணியால் எடுக்க முடிந்தது. மற்ற 23 பந்துகளும் டாட் பந்துகள். இது டி20 கிரிக்கெட்டின் அபாரமான பந்துவீச்சு. இதற்கு முன் இப்படி ஒரு பவுலிங்கை யாரும் வீசியதில்லை. எனினும் செயிண்ட் கிட்ஸ் அணி, 19வது ஓவரில் இலக்கை எட்டி 6 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது. 4 ஓவர்களை வீசிய இர்ஃபான், 1 ரன் மட்டுமே விட்டுக்கொடுத்து 2 விக்கெட்டுகளை வீழ்த்தினார்.

பேட்ஸ்மேன்களின் போட்டியாக விளங்கும் டி20 போட்டியில் இர்ஃபானின் பவுலிங் அபாரமானது. இர்ஃபான் ஆடும் பர்படாஸ் அணி தோற்றிருந்தாலும் கூட அவரது அபாரமான பந்துவீச்சை அங்கீகரிக்கும் விதமாக ஆட்டநாயகன் விருது அவருக்கு வழங்கப்பட்டது. 
 

click me!