அசால்ட்டுத்தனத்தால் அம்போனு விக்கெட்டை இழந்த வீரர்.. விசித்திரமான விக்கெட்!! வைரல் வீடியோ

By karthikeyan VFirst Published Aug 26, 2018, 1:21 PM IST
Highlights

ஆஸ்திரேலியா ஏ மற்றும் தென்னாப்பிரிக்கா ஏ அணிகளுக்கு இடையேயான ஒருநாள் போட்டியில் ஆஸ்திரேலிய வீரர் உஸ்மான் கவாஜா, கவனக்குறைவால் நூழிலையில் தனது விக்கெட்டை இழந்தார். அந்த வீடியோ சமூக வலைதளங்களில் பரவிவருகிறது. 
 

ஆஸ்திரேலியா ஏ மற்றும் தென்னாப்பிரிக்கா ஏ அணிகளுக்கு இடையேயான ஒருநாள் போட்டியில் ஆஸ்திரேலிய வீரர் உஸ்மான் கவாஜா, கவனக்குறைவால் நூழிலையில் தனது விக்கெட்டை இழந்தார். அந்த வீடியோ சமூக வலைதளங்களில் பரவிவருகிறது. 

இந்தியா ஏ, இந்தியா பி, ஆஸ்திரேலியா ஏ மற்றும் தென்னாப்பிரிக்கா ஏ ஆகிய நான்கு அணிகள் கலந்துகொண்டு ஆடும் ஒருநாள் தொடர் இந்தியாவில் நடந்துவருகிறது. இதில் ஆஸ்திரேலியா ஏ மற்றும் தென்னாப்பிரிக்கா ஏ அணிகளுக்கு இடையேயான ஒருநாள் போட்டி நேற்று நடந்தது. 

இந்த போட்டியில் முதலில் பேட்டிங் செய்த ஆஸ்திரேலிய ஏ அணி, டிராவிஸ் ஹெட்டின் அதிரடி சதம் மற்றும் மார்ன்ஸ் லாபஸ்சாக்னேவின் அரைசதம் ஆகியவற்றால் 50 ஓவருக்கு 322 ரன்களை குவித்தது. 

323 ரன்கள் என்ற இலக்குடன் களமிறங்கிய தென்னாப்பிரிக்க ஏ அணியின் தொடக்க வீரர்கள் முதல் விக்கெட்டுக்கு 89 ரன்கள் சேர்த்தனர். அந்த அணியின் கேப்டன் ஜோண்டோ சதமடித்து 117 ரன்களில் வெளியேறினார். தென்னாப்பிரிக்க ஏ அணியின் டாப் ஆர்டர்கள் நன்றாக ஆடிய நிலையில், லோயர் மிடில் ஆர்டர் பேட்ஸ்மேன்கள் சொதப்பியதால் அந்த அணி 290 ரன்களுக்கு ஆல் அவுட்டானது. இதையடுத்து ஆஸ்திரேலிய ஏ அணி 32 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது. 

இந்த போட்டியில் ஆஸ்திரேலிய அணியின் தொடக்க வீரர் கவாஜாவின் விக்கெட் ஒரு வித்தியாசமான விக்கெட். இதுபோன்ற விக்கெட்டுகள் அரிதாக் விழுபவை. 5வது ஓவரின் கடைசி பந்து, கவாஜாவின் கால்காப்பில் பட்டு ஸ்லிப் ஃபீல்டரிடம் சென்றது. அப்போது கிரீஸை விட்டு கவாஜா சற்று வெளியே வந்தார். அந்த நேரத்தில் ஃபீல்டர்களும் பவுலரும் எல்பிடபிள்யூ விக்கெட்டுக்காக அம்பயரிடம் அப்பீல் செய்தனர். அப்போது கவாஜா கிரீஸை விட்டு சற்று வெளியே நின்றதை கவனித்த தென்னாப்பிரிக்க அணியின் எர்வீ, பந்தை சரியாக ஸ்டம்ப்பில் அடித்தார். 

கிரீஸை விட்டு வெளியே வந்த கவாஜா எதார்த்தமாக கிரீஸுக்குள் சென்றார். ஆனால் அதற்குள் எர்வீ எறிந்த பந்து ஸ்டம்பை தாக்கியது. இது மூன்றாவது அம்பயரின் முடிவுக்கு விடப்பட்டது. அதை ரிவியூ செய்து பார்த்ததில் அது அவுட்தான் என்பது தெரிந்ததை அடுத்து கவாஜா வெளியேறினார். கவனக்குறைவால் நூழிலையில் விக்கெட்டை இழந்தார் கவாஜா.

pic.twitter.com/YY6GHuU9T9

— Mushfiqur Fan (@NaaginDance)

இதுபோன்ற விக்கெட்டுகள் அரிதாக வீழ்த்தப்படுபவை ஆகும்.
 

click me!