WFI தலைவர் மீதான பாலியல் புகார்! மேரி கோம் தலைமையில் விசாரணை கமிட்டி; ஒருமாதத்தில் அறிக்கை சமர்ப்பிக்க உத்தரவு

By karthikeyan VFirst Published Jan 23, 2023, 7:15 PM IST
Highlights

இந்திய மல்யுத்த சம்மேளன தலைவர் பிரிஜ் பூஷண் சரண் சிங் மீதான பாலியல் குற்றச்சாட்டை விசாரித்து அறிக்கை தாக்கல் செய்ய மேரி கோம் தலைமையிலான விசாரணை கமிட்டி அமைக்கப்பட்டுள்ளது. ஒரு மாதத்தில் அறிக்கை தாக்கல் செய்ய உத்தரவிடப்பட்டுள்ளது.
 

இந்திய மல்யுத்த சம்மேளன தலைவர் பிரிஜ் பூஷண் சரண் சிங் மீது பாலியல் குற்றச்சாட்டை முன்வைத்து மல்யுத்த வீரர், வீராங்கனைகள் டெல்லி ஜந்தர் மந்தரில் தொடர் போராட்டத்தில் ஈடுபட்டனர். பிரிஜ் பூஷண் சரண் சிங் பாஜக எம்பியும் கூட. அவரை அந்த பதவியிலிருந்து நீக்கக்கோரியும், நடப்பு மல்யுத்த அமைப்பையே கலைத்துவிட்டு புதிய கூட்டமைப்பை உருவாக்க வேண்டும் என்று வலியுறுத்தினர்.

இதுதொடர்பாக மத்திய விளையாட்டுத்துறை அமைச்சர் அனுராக் தாகூருடனான முதல் கட்ட பேச்சுவார்த்தையில் தீர்வு எட்டப்படாத நிலையில், 2ம் கட்ட பேச்சுவார்த்தையின்போது தீர்வு எட்டப்பட்டதால் போராட்டம் கைவிடப்பட்டது. 

காங்கிரஸ் கட்சியின் திட்டமிட்ட சதிதான் மல்யுத்த வீரர் போராட்டம்! ராஜினாமா செய்யமுடியாது- WFIதலைவர் திட்டவட்டம்

இதுதொடர்பாக விசாரிக்க விசாரணை கமிட்டியை அமைப்பதாக இந்திய ஒலிம்பிக் சங்கம் உறுதியளித்திருந்த நிலையில், மேரி கோம் தலைமையிலான விசாரணை கமிட்டியை அமைத்துள்ளது மத்திய விளையாட்டுத்துறை அமைச்சகம். இதுதொடர்பான அறிவிப்பை மத்திய அமைச்சர் அனுராக் தாகூர் வெளியிட்டுள்ளார்.

மேரி கோம் தலைமையிலான விசாரணை கமிட்டியில் மல்யுத்த வீரர் யோகேஷ்வர் தத், பேட்மிண்டன் வீராங்கனை த்ருப்தி முரிகுண்டே, முன்னாள் டாப்ஸ் சி.இ.ஓ ராஜகோபாலன், எஸ்.ஏ.ஐ நிர்வாக இயக்குநர் ராதிகா ஸ்ரீமன் ஆகியோர் அடங்கிய விசாரணை கமிட்டி அமைக்கப்பட்டுள்ளது.

என்ன கொடுமைலாம் நடந்தது..? மல்யுத்த வீராங்கனையின் அரை மணி நேர கதறல் ஆடியோ ஆதாரம் இருக்கு - வினேஷ் போகத்

பிரிஜ் பூஷண் சரண் சிங் மீதான பாலியல் குற்றச்சாட்டு தொடர்பாக விசாரித்து 4 வாரங்களுக்குள் அறிக்கை தாக்கல் செய்யுமாறு மத்திய விளையாட்டுத்துறை அமைச்சகம் உத்தரவிட்டுள்ளது.
 

click me!