வரலாற்று சாதனை படைத்த மார்க்கெட்டா வோண்ட்ரூசோவா: முதல் முறையாக விம்பிள்டன் சாம்பியன்!

By Rsiva kumar  |  First Published Jul 16, 2023, 2:55 PM IST

விம்பிள்டன் டென்னிஸ் தொடரில் மகளிர் ஒற்றையர் பிரிவில் செக் குடியரசு வீராங்கனை மார்க்கெட்டா வோண்ட்ரூசோவா முதல் முறையாக சாம்பியன் பட்டத்தை கைப்பற்றியுள்ளார்.


கிராண்ட்ஸ்லாம் அந்தஸ்து கொண்ட விம்பிள்டன் டென்னிஸ் தொடர் கடந்த 3 ஆம் தேதி லண்டனில் தொடங்கியது. இதில், உலகின் பல நாடுகளைச் சேர்ந்த வீரர், வீராங்கனைகளை கலந்து கொண்டனர். இந்த தொடர் இன்றுடன் முடிகிறது. இந்த நிலையில், நேற்று நடந்த மகளிர் ஒற்றையர் பிரிவு இறுதிப் போட்டியில் தரவரிசைப் பட்டியலில் 42ஆவது இடத்திலுள்ள செக் குடியரசு நாட்டைச் சேர்ந்த மார்க்கெட்டா வோண்ட்ரூசோவா, துனிசியா வீராங்கனையான ஒன்ஸ் ஜபீரை எதிர்கொண்டார்.

மீண்டும் வாய்ப்பு கிடைத்தால் ஜானி பேர்ஸ்டோவை ஸ்டெம்பிங் செய்வேன் - இங்கிலாந்து அணியை எச்சரித்த அலெக்ஸ் கேரி!

Tap to resize

Latest Videos

பரபரப்பான சென்ற இந்தப் போட்டியில், ஒன்ஸ் ஜபேரை 6-4 மற்றும் 6-4 என்ற நேர்செட் கணக்கில் வீழ்த்தி மார்க்கெட்டா வோண்ட்ரூசோவா முதல் முறையாக சாம்பியனானார். அவருக்கு 25 கோடியே 25 லட்சம் ரூபாய் பரிசுத் தொகையாக வழங்கப்பட்டது. கடந்த ஆண்டு நடந்த போட்டியில் 2ஆவது இடம் பிடித்த ஒன்ஸ் ஜபீர், இந்த போட்டியில் 2ஆவது இடத்தோடு பரிதாபமாக வெளியேறியுள்ளார். இது குறித்து அவர் கூறியிருப்பதாவது: இந்த தோல்வியால் நான் துவண்டு போக மாட்டேன். மீண்டும் முயற்சி செய்வேன் என்று கூறியுள்ளார்.

ஆசிய விளையாட்டு போட்டியில் இடமில்லை: நம்பி ஏமாந்து போன ஷிகர் தவான் என்ன செய்யப் போகிறார்?

கடந்த 1999 ஆம் ஆண்டு ஜூன் 28 ஆம் தேதி பிறந்தார். அவருக்கு தற்போது 24 வயது. மார்கெட்டா செக் குடியரசின் கார்வோல்வி வேரி பிராந்தியத்தில் அமைந்துள்ள சோகோலோவ் என்ற சிறிய நகரத்தில் பிறந்தார். செக் குடியரசு நாட்டைச் சேர்ந்தவர். இவரது பெற்றோர் டேவிட் வோண்ட்ரூசோவா மற்றும் ஜின்ட்ரிஸ்கா வோண்ட்ரூசோவா.

திட்டமிடப்பட்டி அக்.15ல் இந்தியா – பாகிஸ்தான் போட்டிகள் நடக்க வேண்டும்: ஷாஹீத் அப்ரிடி

மார்கெட்டா தனது நீண்ட நாள் காதலனான ஸ்டீபன் சிமெக்கை திருமணம் செய்து கொண்டார். கடந்த 2021 ஆம் ஆண்டு நடந்த டோக்கியோ ஒலிம்பிக்கிற்கு பிறகு இருவரும் நிச்சயதார்த்தம் செய்து கொண்ட நிலையில், கடந்த 2022 ஆம் ஆண்டு ஜூலை 16 ஆம் தேதி திருமணம் செய்து கொண்டனர்.

மார்கெட்டா வோண்ட்ரூசோவா ஒரு செக் டென்னிஸ் வீராங்கனை. பெண்கள் டென்னிஸ் சங்கத்தின் (டபிள்யூடிஏ) படி, அவர் தொழில் வாழ்க்கையில் உயர்ந்த உலக நம்பர் 14 தரவரிசையைப் பெற்றுள்ளார். 2023ல் விம்பிள்டன் ஒற்றையர் சாம்பியன்ஷிப்பை வென்ற முதல் தரவரிசையில்லா வீராங்கனை என்ற வரலாற்று சாதனையை படைத்தார். அவர் 2019 பிரெஞ்சு ஓபன் இறுதிப் போட்டிக்கு முன்னேறியபோது, ​​கிட்டத்தட்ட 10 ஆண்டுகளில் முதல் டீன் மேஜர் இறுதிப் போட்டியாளர் ஆனார்.

இந்தப் போட்டியில் பெற்ற வெற்றிக்குப் பிறகு பேசிய மார்க்கெட்டா கூறியிருப்பதாவது: தனது 8 ஆண்டுகால காதல் வாழ்க்கையில் கணவர் ஒரு முறை தான் அழுது பார்த்திருக்கிறேன். அதுவும் எங்களது திருமணத்தின் போது அழுதார். அதன் பிறகு இப்போது தான் நான் அவர் அழுது பார்த்திருக்கிறேன் என்று கூறியுள்ளார்.

மும்பையில் 5 BHK வீட்டுக்கு மாறும் யஷஸ்வி ஜெய்ஸ்வாலின் குடும்பம்!

இதே போன்று ஆண்கள் இரட்டையர் பிரிவின் இறுதிப் போட்டியில் பிரிட்டனின் ஸ்கூப்ஸ்கி, நெதர்லாந்தின் கூல்காஃப் ஜோடி சாம்பியன் பட்டம் வென்றனர். ஆடவர் இரட்டையர் பிரிவு இறுதிப்போட்டியில் அர்ஜென்டினாவின் செபலோஸ், ஸ்பெயினின் மார்செல் ஜோடியுடன் கூல்காஃப்-ஸ்கூப்ஸ்கி ஜோடி மோதியது. இதில், கூல்காஃப்-ஸ்கூப்ஸ்கி ஜோடி 6 – 4 மற்றும் 6 - 4 என்ற நேர் செட் கணக்கில் வென்று விம்பிள்டன் ஆண்கள் இரட்டையர் பிரிவில் பட்டம் வென்றனர் என்பது குறிப்பிடத்தக்கது.

 

15 July 2023 🗓️

The day unseeded Marketa Vondrousova was crowned champion. pic.twitter.com/Ut3SLlkJag

— Wimbledon (@Wimbledon)

 

Neal Skupski joins Jonathan Marray as the second British player ever to win the Gentlemen’s Doubles title in the Open Era 🇬🇧 pic.twitter.com/9hfTk8w42r

— Wimbledon (@Wimbledon)

 

click me!