கேலோ இந்தியா நீச்சல் போட்டியில் தனது தேசிய சாதனையை பாலக் ஜோஷி முறியடித்து தங்கப் பதக்கம் கைப்பற்றியுள்ளார்.
கேலோ இந்தியா இளைஞர் விளையாட்டு போட்டிகளின் 6ஆவது சீசன் கடந்த 19 ஆம் தேதி தொடங்கி இன்றுடன் முடிவடைகிறது. தமிழகத்தில் சென்னை, கோயம்புத்தூர், மதுரை, திருச்சி ஆகிய பகுதிகளில் இந்த விளையாட்டு போட்டிகள் நடத்தப்பட்டு வருகிறது. இதுவரையில் நடந்த 26 விதமான போட்டிகளில் தமிழ்நாடு 35 தங்கம், 20 வெள்ளி மற்றும் 36 வெண்கலம் என்று மொத்தமாக 91 பதக்கங்களை கைப்பற்றி பதக்கபட்டியலில் 3ஆவது இடத்தில் உள்ளது.
Khelo India: இன்றுடன் முடிவடையும் கேலோ இந்தியா – தமிழ்நாடு 91 பதக்கத்துடன் 3 ஆவது இடத்திற்கு சரிவு!
மகாராஷ்டிரா 53 தங்கம், 46 வெள்ளி மற்றும் 51 வெண்கலம் என்று மொத்தமாக 150 பதக்கங்களுடன் பதக்க பட்டியலில் முதலிடத்தில் உள்ளது. இந்த நிலையில் தான் இன்று நடந்த நீச்சல் போட்டியில் மகாராஷ்டிரா வீராங்கனை பாலக் ஜோஷி 200 மீ பேக்ஸ்டிரோக் (பின்னோக்கி) பிரிவில் பந்தய தூரத்தை 2:18:90 வினாடிகளில் கடந்து முந்தைய தனது சாதனையை தானே முறியடித்து தங்கம் வென்றுள்ளார். இதற்கு முன்னதாக கடந்த ஹைதராபாத்தில் நடந்த தேசிய நீர்வாழ் சாம்பியன்ஷிப் போட்டியில் 200 மீ பேக்ஸ்டிரோக் பிரிவில் பந்தய தூரத்தை 2:18:90 வினாடிகளில் கடந்து சாதனை படைத்திருந்தார்.
இந்த சாதனையை தற்போது கேலோ இந்தியா நீச்சல் போட்டியில் முறியடித்துள்ளார். தெலங்கானாவின் ஸ்ரீ நித்யா சாகி 2:25.83 வினாடிகளில் கடந்து வெள்ளிப் பதக்கமும், கர்நாடகாவின் நைஷா 2:25.83 வினாடிகளில் கடந்து வெண்கலப் பதக்கமும் வென்றுள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.
விக்கெட்டே எடுக்காத சிராஜை தூக்கிட்டு குல்தீப் யாதவ்வை உள்ள இறக்குங்க – பார்த்தீவ் படேல்!