
கேலோ இந்தியா இளைஞர் விளையாட்டு போட்டிகளின் 6ஆவது சீசன் கடந்த 19 ஆம் தேதி தொடங்கியது. தமிழகத்தில் சென்னை, கோயம்புத்தூர், மதுரை, திருச்சி ஆகிய பகுதிகளில் இந்த விளையாட்டு போட்டிகள் நடத்தப்பட்டு வருகிறது. இதில், கபடி, ஜூடோ, ஸ்குவாஷ், ஃபென்சிங், பாக்ஷிங் (குத்துச்சண்டை), ஜிம்னாஸ்டிக்ஸ், யோகாசனம், ஹாக்கி, மல்லாகம்ப், கட்கா, கால்பந்து, கூடைப்பந்து, தடகளம், துப்பாக்கிச் சுடுதல் (ரைபிள், பிஸ்டல்), துப்பாக்கிச்சுடுதல் (ஷாட் ஹன்) உள்பட 26 விதமான விளையாட்டு போட்டிகள் நடத்தப்படுகின்றன.
இந்த சீசன் இன்று 31 ஆம் தேதியுடன் முடிவடைகிறது. இதுவரையில் நடந்த போட்டிகளின் படி தமிழ்நாடு 35 தங்கம், 20 வெள்ளி மற்றும் 36 வெண்கல பதக்கத்துடன் 3ஆவது இடத்தில் நீடிக்கிறது. இதில், நேற்று மட்டும் 6 தங்க பதக்கங்களை வீரர், வீராங்கனைகள் கைப்பற்றினர். அதன்படி, மகளிருக்கான 200 மீ மெட்லே போட்டியில் தமிழக வீராங்கனை ஸ்ரீநிதி நடேசன் 2 நிமிடம் 26.78 வினாடிகளில் இலக்கை எட்டி தங்கம் வென்றார். இதே போன்று ஆண்களுக்கான பேக்ஸ்டிரோக் நீச்சல் போட்டியில் சென்னையைச் சேர்ந்த நித்திக் நாதெல்லா 2 நிமிடம் 04.50 வினாடிகளில் இலக்கை எட்டி தங்கம் வென்றார்.
விக்கெட்டே எடுக்காத சிராஜை தூக்கிட்டு குல்தீப் யாதவ்வை உள்ள இறக்குங்க – பார்த்தீவ் படேல்!
ஆண்கள் இரட்டையர் பிரிவின் இறுதிப் போட்டி டென்னிஸில் தமிழகத்தின் பிரனவ் மற்றும் மகாலிங்கம் ஜோடி 6-3, 6-1 என்ற நேர் செட்டில் மராட்டியத்தின் இணையை தோற்கடித்து தங்கம் வென்றது. இதே போன்று மகளிருக்கான இரட்டையர் பிரிவில் தமிழகத்தைச் சேர்ந்த ரேவதி – லட்சுமி பிரபா ஜோடி தங்கம் வென்றது.
பேட்மிண்டன் போட்டியில் ஆண்கள் இரட்டையர் பிரிவின் இறுதிப் போட்டியில் தமிழகத்தின் வினயக்ராம் – ஸ்வஸ்திக் ஜோடி தங்கம் கைப்பற்றியது. இந்த நிலையில் தான் கடந்த 19 ஆம் தேதி தொடங்கிய இந்த 6ஆவது சீசனுக்கான கேலோ இந்தியா இளைஞர் விளையாட்டு போட்டி இன்று 31 ஆம் தேதியுடன் முடிவடைகிறது.
இன்று டேபிள் டென்னிஸ், கால்பந்து, நீச்சல் ஆகிய போட்டிகள் நடைபெற உள்ளன. இதையடுத்து இன்று மாலை 6 மணிக்கு நடக்கும் நிறைவு விழாவில் மத்திய அமைச்சர் அனுராக் தாக்கூர், தமிழக விளையாட்டு துறை அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் ஆகியோர் கலந்து கொண்டு வெற்றி பெற்ற அணி, வீரர், வீராங்கனைகளுக்கு பரிசுகளை வழங்க இருக்கின்றனர். இதுவரையில் நடந்த 5 சீசன்களில் ஹரியானா 2 முறையும், மகாராஷ்டிரா 3 முறையும் டிராபியை கைப்பற்றியுள்ளன.
கிரிக்கெட் மற்றும் விளையாட்டு உலகின் (Sports News in Tamil) நிமிட நிமிட தமிழ் செய்தி அப்டேட்களுக்காக ஏஷ்யாநெட் தமிழ்-ஐ பின்பற்றுங்கள். IPL லைவ் உட்பட டீம் இந்தியாவின் பிரேக்கிங் நியூஸ் (Cricket News in Tamil), சிறப்பு ரிப்போர்ட்கள் மற்றும் நேரலைகளுடன் முழுமையான தகவல்கள் உங்களுக்கு ஒரே கிளிக்கில் கிடைக்கும். ஏஷ்யாநெட் தமிழ் அதிகாரப்பூர்வ ஆப்பைப் டவுன்லோடு செய்து அனைத்து அப்டேட்களையும் பெறுங்கள்.