6ஆவது மகளிர் தேசிய குத்துச்சண்டை சாம்பியன்ஷிப் போட்டி: லவ்லினா, நிகாத் ஜரீன் தங்கம் வென்று அசத்தல்!

By Rsiva kumarFirst Published Dec 27, 2022, 9:44 AM IST
Highlights

போபாலில் நடந்த தேசிய குத்துச்சண்டை சாம்பியன்ஷிப் போட்டியில் லவ்லினா, நிகாத் ஜரீன் தங்கம் வென்று அசத்தியுள்ளனர்.

மத்தியப்பிரதேச மாநிலம் போபாலில் 6ஆவது எலைட் மகளிர் தேசிய குத்துச்சண்டை சாம்பியன்ஷிப் போட்டி நடைபெற்றது. 75 கிலோ இறுதிப் போட்டியில் அசாம் மாநிலத்தைச் சேர்ந்த லவ்லினா, சர்வீசஸ் விளையாட்டு கட்டுப்பாட்டு வாரியத்தின் அணியின் அருந்ததி சௌத்ரியை எதிர்த்துப் போட்டியிட்டார். இதில், சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்திய லவ்லினா 5-0 என்ற கணக்கில் அருந்ததி சௌத்ரியை வீழ்த்தி தங்கப்பதக்கம் வென்றார்.

IPL 2023: லக்னோ சூப்பர் ஜெயிண்ட்ஸ் அணியின் வலுவான ஆடும் லெவன் காம்பினேஷன்

இதே போன்று நடந்த 50 கிலோ எடை பிரிவுக்கான இறுதிப் போட்டியில் உலக சாம்பியனான தெலுங்கானா அணியின் நிகாஜ் ஜரீன், ரயில்வே விளையாட்டு மேம்பாட்டு வாரியத்தின் அணி அனாமிகாவை எதிர்கொண்டார். இதில், அனாமிகாவை 4-1 என்ற கணக்கில் வீழ்த்தி தங்கம் வென்று அசத்தினார்.

பாண்டிங், லாரா, ஜெயவர்தனே, கிரேம் ஸ்மித் ஆகிய லெஜண்ட் வீரர்களின் சாதனையை முறியடித்த பாபர் அசாம்! புதிய வரலாறு

போட்டியில் வெற்றி பெற்ற வீராங்கனைகளுக்கு மத்திய தகவல் ஒலிபரப்பு, இளைஞர் நலன் மற்றும் விளையாட்டுத்துறை அமைச்சர் அனுராக் சிங் தாக்கூர் பரிசுகளை வழங்கினார். இந்த போட்டியில் 5 தங்கம், 3 வெள்ளி, 2 வெண்கலம் என்று மொத்தம் 10 பதக்கங்களை ரெயில்வே அணி குவித்து மீண்டும் சாம்பியன்ஷிப் பட்டத்தை தட்டிச் சென்றது என்பது குறிப்பிடத்தக்கது.

click me!