Lionel Messi Jersey Number 10: லியோனல் மெஸ்ஸியின் ஜெர்சி நம்பர் 10க்கு ஓய்வு அறிவித்த அர்ஜென்டினா!

By Rsiva kumar  |  First Published Jan 1, 2024, 4:30 PM IST

லியோனல் மெஸ்ஸியின் ஜெர்சி நம்பர் 10க்கு அர்ஜென்டினா கால்பந்து வாரியம் ஓய்வு அளிக்க இருப்பதாக அறிவித்துள்ளது.


கடந்த 2022 ஆம் ஆண்டு கத்தாரில் நடந்த பிஃபா கால்பந்து உலகக் கோப்பை இறுதிப் போட்டியில் அர்ஜெண்டினா அணி வெற்றி பெற முக்கிய காரணமாக இருந்தவர் லியோனல் மெஸ்ஸி. அர்ஜென்டினா அணிக்காக 180 சர்வதேச போட்டிகளில் விளையாடிய மெஸ்ஸி 106 கோல்கள் அடித்துள்ளார். 1986 ஆம் ஆண்டிற்கு பிறகு 36 ஆண்டுகள் கழித்து மெஸ்ஸி தலைமையிலான அர்ஜென்டினா அணி உலகக் கோப்பையை கைப்பற்றியது.

ரவீந்திர ஜடேஜா, முகேஷ் குமார் அணியில் இடம் பெற வேண்டும் – இர்பான் பதான்!

Tap to resize

Latest Videos

இதையடுத்து, வரும் 2026 ஆம் ஆண்டு நடக்க இருக்கும் பிஃபா உலகக் கோப்பை கால்பந்து போட்டியில் மெஸ்ஸி இடம் பெறுவது என்னவோ கேள்விக்குறியாகியுள்ள நிலையில், அவரது ஜெர்சி நம்பர் 10ஐ இனிமேல் வேறு யாரும் பயன்படுத்தாத வகையில் ஜெர்சி நம்பர் 10க்கு ஓய்வு அளிக்க அர்ஜென்டினா கால்பந்து வாரியமானது முடிவு செய்துள்ளது.

இது குறித்து அர்ஜென்டினா கால்பந்து வாரியத்தின் தலைவர் கிளாடியோ டாபியா கூறியிருப்பதாவது:  அணியிலிருந்து லியோனல் மெஸ்ஸி ஓய்வு பெற்ற பிறகு அவர் அணிந்திருந்த ஜெர்சி நம்பர் 10ஐ வேறு யாரும் பயன்படுத்தாத வகையில் ஜெர்சி நம்பர் 10க்கு ஓய்வு அளிக்கப்படுகிறது. கடந்த 1986 ஆம் ஆண்டு அர்ஜென் டினா அணிக்கு உலகக் கோப்பையை பெற்றுக் கொடுத்த டியாகோ மரடோனா, ஜெர்சி நம்பர் 10ஐ பயன்படுத்தியிருந்தார்.

ஸ்லோ மோஷன் வீடியோ, கெத்தா, கம்பீரமாக நடந்து வந்த இந்திய வீரர்கள்: லேண்டான உடனே நியூ இயர் வாழ்த்து சொன்ன சிராஜ்

ஆனால், கடந்த 2002 ஆம் ஆண்டு நடந்த உலகக் கோப்பை தொடரின் போது 1 முதல் 23 வரையிலான ஜெர்சி நம்பர்களை அனைத்து வீரர்களும் அணிந்து கொள்ளலாம் என்று பிஃபா விதிமுறையில் தெரிவிக்கப்பட்டது. இதன் காரணமாக டியானோ மரடோனாவிற்கு பெருமை சேர்க்க இருந்த நிலையில், அவரது ஜெர்சி நம்பர் 10க்கு ஓய்வு அளிக்காமல் லியோனல் மெஸ்ஸி பயன்படுத்துவதற்கு வழங்கப்பட்டது.

இந்த நிலையில் தான் மரடோனாவிற்கு கிடைக்காத அந்த அங்கீகாரம் தற்போது லியோனல் மெஸ்ஸிக்கு வழங்கப்பட்டுள்ளது. அவரது ஓய்விற்கு பிறகு ஜெர்சி நம்பர் 10ஐ யாரும் பயன்படுத்தாத வகையில் ஓய்வு அளிக்க அர்ஜென்டினா கால்பந்து வாரியம் முடிவு செய்துள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.

டெஸ்ட் ஃபேர்வெல்லுக்கு முன்னதாக ஒருநாள் கிரிக்கெட்டிலிருந்து ஓய்வு பெறுவதாக அறிவித்த டெவிட் வார்னர்!

click me!