புரோ கபடி லீக் தொடரின் 10ஆவது சீசனில் நேற்று நடந்த 50ஆவது போட்டியில் தமிழ் தலைவாஸ் அணியானது 37-38 என்ற புள்ளி கணக்கில் தோல்வியை தழுவியது.
புரோ கபடி லீக் தொடரின் 10ஆவது சீசன் கடந்த ஆண்டு டிசம்பர் 10 ஆம் தேதி அகமதாபாத்தில் தொடங்கியது. இந்த தொடரில் பெங்கால் வாரியர்ஸ், பெங்களூரு காளைகள், தபாங் டெல்லி, குஜராத் ஜெயிண்ட்ஸ், ஹரியானா ஸ்டீலர்ஸ், ஜெய்ப்பூர் பிங்க் பாந்தர்ஸ், பாட்னா பைரேட்ஸ், புனேரி பால்தான், தமிழ் தலைவாஸ், தெலுங்கு டைட்டன்ஸ், யு மும்பா, யுபி யோதாஸ் என்று 12 அணிகள் இடம் பெற்றுள்ளன.
மகனுடன் நியூ இயர் கொண்டாடிய கிளென் மேக்ஸ்வெல் – வைரலாகும் வீடியோ!
அகமதாபாத், பெங்களூரு, புனே ஆகிய பகுதிகளில் போட்டிகள் நடத்தப்பட்ட நிலையில் தற்போது சென்னையில் நடந்தது. இங்கு மட்டும் 6 நாட்கள் போட்டிகள் நடத்தப்பட்டது. கடந்த ஆண்டு டிசம்பர் 22ஆம் தேதி தொடங்கிய இந்தப் போட்டி 28ஆம் தேதி வரை நடந்தது. சென்னையைத் தொடர்ந்து தற்போது நொய்டாவில் நடந்து வருகிறது. மும்பை, ஜெய்பூர், ஹைதராபாத், பாட்னா, டெல்லி, கொல்கத்தா, பஞ்ச்குலா ஆகிய பகுதிகளில் போட்டி நடக்கிறது.
இதுவரையில் தமிழ் தலைவாஸ் விளையாடிய 7 போட்டிகளில் 2ல் மட்டுமே வெற்றி பெற்று 5 தோல்வி அடைந்து புள்ளிப்பட்டியலில் 11ஆவது இடம் பிடித்திருந்தது. இதில் 2 தோல்வி சென்னையில் நடந்த ஹோம் மைதான போட்டி என்பது குறிப்பிடத்தக்கது. சென்னையில் நடந்த கடைசி போட்டியிலும் தமிழ் தலைவாஸ் அணியானது தோல்வி அடைந்துள்ளது.
இதன் மூலமாக சென்னையில் விளையாடிய 4 போட்டியிலும் தமிழ் தலைவாஸ் அணியானது தோல்வி அடைந்துள்ளது. இதுவரையில் 8 போட்டிகளில் தமிழ் தலைவாஸ் விளையாடிய நிலையில், 2ல் மட்டுமே வெற்றி பெற்று 6 தோல்விகளுடன் புள்ளிப்பட்டியலில் 11ஆவது இடத்தில் உள்ளது. குஜராத் ஜெயிண்ட்ஸ் விளையாடிய 8 போட்டிகளில் 5ல் வெற்றி பெற்று புள்ளிப்பட்டியலில் 3ஆவது இடம் பிடித்துள்ளது.
டிசம்பர் 22 – மேட்ச் 34: தமிழ் தலைவாஸ் 33 – பாட்னா பைரேட்ஸ் 46 – தோல்வி
டிசம்பர் 23 – மேட்ச் 36: தமிழ் தலைவாஸ் 24 – ஜெய்பூர் பிங்க் பாந்தர்ஸ் 25 – தோல்வி
டிசம்பர் 25: மேட்ச் 41: தமிழ் தலைவாஸ் 29 – ஹரியானா ஸ்டீலர்ஸ் 42 – தோல்வி
டிசம்பர் 28: மேட்ச் 44: தமிழ் தலைவாஸ் 30 – குஜராத் ஜெயிண்ட்ஸ் 33 – தோல்வி
இந்த நிலையில் சென்னையைத் தொடர்ந்து தற்போது நொய்டாவில் போட்டிகள் நடத்தப்பட்டு வருகிறது. இதில், நொய்டாவில் நடந்த 50ஆவது போட்டியில் தமிழ் தலைவாஸ் மற்றும் பெங்களூரு காளைகள் அணிகள் மோதின. இதில் தமிழ் தலைவாஸ் அணி சார்பில் நரேந்தர், எம் அபிஷேக், அஜின்க்யா, கேப்டன் சாகில் குலியா ஆகியோர் புள்ளிகள் பெற்றனர்.
இதே போன்று பெங்களூரு அணியில் விகாஷ் கண்டாலா ரெய்டர், சுர்ஜீத் சிங் டிபெண்டர், பர்தீக் டிபெண்டர், நீரஜ், சவுரப் நந்தால் ஆகியோர் புள்ளிகள் பெறவே பெங்களூரு காளைகள் அணியானது 38 புள்ளிகள் பெற்றது. தமிழ் தலைவாஸ் அணியானது 37 புள்ளிகள் மட்டுமே பெற்று ஒரு புள்ளிகள் வித்தியாசத்தில் தோல்வியை தழுவியது.
இந்த தோல்வியின் மூலமாக இந்த ஆண்டை தமிழ் தலைவாஸ் தோல்வியோடு முடித்துள்ளது. மேலும், தொடர்ந்து 7 போட்டிகளில் தமிழ் தலைவாஸ் தோல்வியை தழுவியுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது. பெங்களூரு காளைகள் அணியானது விளையாடிய 10 போட்டிகளில் 4ல் மட்டும் வெற்றி பெற்று புள்ளிப்பட்டியலில் 7ஆவது இடம் பிடித்துள்ளது.
ஏசியாநெட் தமிழ் செய்திகளை உடனுக்கு உடன் Whatsapp Channel-லில் பெறுவதற்கு கீழே கொடுக்கப்பட்டு இருக்கும் லிங்குடன் இணைந்து இருக்கவும்.
Click this link: https://whatsapp.com/channel/0029Va9TFCWB4hdYZOoYCK2D
நரேந்தரின் அட்டகாசமான சூப்பர் 10 😍
இத்துடன் 300 சூப்பர் 10 புள்ளிகள் 🔥 pic.twitter.com/KhqwlCZ7td