ஆசிய கோப்பையில் வெற்றி பெற்ற இந்திய அணி உலகக் கோப்பை இறுதிப் போட்டியில் தோல்வியோடு தொடரை முடித்துள்ளது.
2023ஆம் ஆண்டு இன்று நள்ளிரவு 11.59 மணியுடன் முடிந்து, நள்ளிரவு 12.00 மணிக்கு 2024 ஆம் ஆண்டு இனிதே துவங்குகிறது. இந்த 2024 ஆம் ஆண்டின் தொடக்கத்தில் தென் ஆப்பிரிக்கா அணிக்கு எதிரான 2ஆவது டெஸ்ட் போட்டியில் இந்திய அணி விளையாட இருக்கிறது. இந்த 2023 ஆம் ஆண்டில் இந்திய அணி விளையாடிய 2 முக்கிய போட்டிகளில் தோல்வியை தழுவியுள்ளது.
உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் இறுதிப் போட்டி 2023
undefined
கடந்த ஜூன் மாதம் லண்டனில் உள்ள ஓவல் மைதானத்தில் நடந்த உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் இறுதிப் போட்டியில் இந்திய அணி தோல்வி அடைந்தது. ஆஸ்திரேலியாவிற்கு எதிராக நடந்த உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் இறுதிப் போட்டியில் இந்திய அணி 209 ரன்கள் வித்தியாசத்தில் தோல்வி அடைந்தது.
ஆசிய கோப்பை 2023:
பாகிஸ்தான் மற்றும் இலங்கையில் நடந்த ஆசிய கோப்பை தொடரில் குரூப் ஏ பிரிவில் இந்திய அணி விளையாடிய 2 போட்டியில் ஒரு போட்டியில் தோல்வி அடைந்து ஒரு போட்டியில் வெற்றி பெற்றது. சூப்பர் ஃபோர்ஸ் சுற்று போட்டியில் இந்திய அணி விளையாடிய 3 போட்டிகளில் 2ல் வெற்றி பெற்று இறுதிப் போட்டிக்கு சென்றது.
இதில் இறுதிப் போட்டியில் முகமது சிராஜின் வேகத்தை தாக்குப்பிடிக்க முடியாமல் இலங்கை அணி 50 ரன்களுக்கு சுருண்டது. முகமது சிராஜ் 7 ஓவர்களில் ஒரு மெய்டன் உள்பட 21 ரன்கள் கொடுத்து 6 விக்கெட்டுகள் கைப்பற்றினார். பின்னர் விளையாடிய இந்திய அணி 10 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் ஆசிய கோப்பையை கைப்பற்றியது.
ஐசிசி கிரிக்கெட் உலகக் கோப்பை 2023:
இந்தியாவில் நடந்த 13 ஆவது கிரிக்கெட் உலகக் கோப்பையில் இந்திய அணி விளையாடிய 9 லீக் போட்டிகளில் வெற்றி பெற்று அரையிறுதிப் போட்டிக்கு முன்னேறியது. இதில், 2019 ஆம் ஆண்டு நடந்த உலகக் கோப்பை முதல் அரையிறுதிப் போட்டியில் நியூசிலாந்திடம் தோல்வி அடைந்து இந்திய அணி வெளியேறியது. இதற்கு பதிலடி கொடுக்கும் வகையில் 2023 ஆம் ஆண்டு அரையிறுதிப் போட்டியில் நியூசிலாந்தை வீழ்த்தி இந்திய அணி இறுதிப் போட்டிக்கு முன்னேறியது.
ஆப்கானிஸ்தானுக்கு எதிரான போட்டியில் ஆஸ்திரேலியா 91 ரன்னுக்கு 7 விக்கெட்டுகளை இழந்து தடுமாறிய போது, கிளென் மேக்ஸ்வெல் அதிரடியாக விளையாடி இரட்டை சதம் அடித்து ஆஸி, அணியை வெற்றி பெறச் செய்தார். இந்தப் போட்டியில் அவர் 128 பந்துகளில் 21 பவுண்டரி, 10 சிக்ஸர்கள் விளாசி 201 ரன்கள் குவித்து கடைசி வரை ஆட்டமிழக்காமல் இருந்தார்.
இறுதிப் போட்டியில் டிராவிஸ் ஹெட்டின் அதிரடி சதத்தால் 120 பந்துகளில் 15 பவுண்டரி 4 சிக்ஸர் உள்பட 137 ரன்கள் குவித்து ஆட்டமிழந்தார். இந்தப் போட்டியில் இந்திய அணி 6 விக்கெட் வித்தியாசத்தில் தோல்வி அடைந்தது. இந்தப் போட்டியில் இந்திய அணி மட்டும் வெற்றி பெற்றிருந்தால் இந்திய அணி ரசிகர்களை கொண்டாடியிருப்பார்கள்.
உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் இறுதிப் போட்டி மற்றும் உலகக் கோப்பை இறுதிப் போட்டி இந்த 2 போட்டியிலும் இந்திய அணி ஆஸ்திரேலியாவிடம் தோல்வி அடைந்தது.