
இந்தூரில் நடைபெற்ற ஐபிஎல்ன் 38 ஆவது ஆட்டத்தில் ராஜஸ்தான் ராயல்ஸ் அணிக்கு எதிரான போட்டியில் கிங்ஸ் லெவன் பஞ்சாபின் கே.எல்.ராகுலின் ஆட்டதை சக வீர்கள் புகழ்ந்து தள்ளி வருகின்றனர். ஆட்டம்னா இப்படித்தான் இருக்குணும் என அவர்கள் ராகுலை பாராட்டினர்.
ஐபிஎல் தொடரின் 38-வது ஆட்டம் இந்தூரில் நடைபெற்றது. இதில் கிங்ஸ் லெவன் பஞ்சாப் - ராஜஸ்தான் ராயல் அணிகள் பலப்பரீட்சை நடத்தின. முதலில் பேட்டிங் செய்த ராஜஸ்தான் ராயல்ஸ் அணி 20 ஓவர் முடிவில் 9 விக்கெட் இழப்பிற்கு 152 ரன்கள் எடுத்தது.
இதையடுத்து 153 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் கிங்ஸ் லெவன் பஞ்சாப் அணி வீரர்கள் களம் இறங்கினர். அதிரடி வீரர் கிறிஸ் கெய்ல், மயாங்க் அகர்வால் மிகக் குறைந்த ரன்களில் ஆட்டமிழந்கனர்.
ஆனாலும் தொடக்க ஆட்டக்காரரான கேஎல் ராகுல் 54 பந்தில் 7 பவுண்டரி, 3 சிக்சருடன் 84 ரன்கள் குவித்து கடைசி வரை ஆட்டமிழக்காமல் அணியின் வெற்றிக்கு வித்திட்டார். அதே நேரத்தில் கே.எல்.ராகுல் , நன்றாக விளையாடுவதற்கு வேகப்பந்து வீச்சாளர் மற்றும் ஆல்ரவுண்டரான மார்க்ஸ் ஸ்டாயினிஸ் துணையாக இருந்தார்.
கே.எல்.ராகுல் அடித்து விளையாடுவதற்கு ஏற்ப தன்னுடைய ஆட்டத்தை அவர் அமைத்துக் கொண்டார். அதே நேரத்தில் மார்கஸ் ஸ்டாய்னிஸ் 16 பந்தில் 2 பவுண்டரி, ஒரு சிக்சருடன் 23 ரன்கள் அடித்து உதவினார்.
கேஎல் ராகுலுக்கு எதிராக நின்று ஆட்டத்தை ரசித்த ஸ்டாய்னிஸ், கேஎல் ராகுலின் இந்த 84 ரன்கள்தான் ஐபிஎல் சீசனின் மிச் சிறந்த ஆட்டம் என்று பாராட்டியுள்ளார்.
இதுகுறித்து தனது கருத்தைத் தெரிவித்த மார்கஸ் ஸ்டாய்னிஸ் , நாங்கள் விளையாடிய ஆடுகளம் சற்று கடினமாக இருந்தது. கேஎல் ராகுல் மிகவும் அபாரமான ஆட்டத்தை வெளிப்படுத்தினார். இது அவருடைய சிறந்த இன்னிங்ஸ். சூழ்நிலையை அவர் புரிந்து கொண்டு, அதற்கேற்றபடி விளையாடினார். உண்மையில் அவரிடம் இருந்து ஸ்மார்ட் ஆன இன்னிங்ஸ் வெளிப்பட்டது என்று பாராட்டித் தள்ளினார்.
இதே போன்று பஞ்சாப் கிங்ஸ் லெவன் அணி அணியின் சக வீரர்கள் மட்டுமல்லாமல் கிரிக்கெட் ஜாம்பவான்கள் மற்றும் ரசிகர்களும் கே.எல்.ராகுலை புகழ்ந்து வருகின்றனர்.
கிரிக்கெட் மற்றும் விளையாட்டு உலகின் (Sports News in Tamil) நிமிட நிமிட தமிழ் செய்தி அப்டேட்களுக்காக ஏஷ்யாநெட் தமிழ்-ஐ பின்பற்றுங்கள். IPL லைவ் உட்பட டீம் இந்தியாவின் பிரேக்கிங் நியூஸ் (Cricket News in Tamil), சிறப்பு ரிப்போர்ட்கள் மற்றும் நேரலைகளுடன் முழுமையான தகவல்கள் உங்களுக்கு ஒரே கிளிக்கில் கிடைக்கும். ஏஷ்யாநெட் தமிழ் அதிகாரப்பூர்வ ஆப்பைப் டவுன்லோடு செய்து அனைத்து அப்டேட்களையும் பெறுங்கள்.