Kl rahul ipl: IPL 2022 : கேட்சை அல்ல போட்டியையே தவறவிட்ட கேஎல் ராகுல்: கடுப்பான கவுதம் கம்பீர்

By Pothy RajFirst Published May 26, 2022, 11:11 AM IST
Highlights

Kl rahul ipl:  IPL 2022 : LSG vs RCB :  Eliminator: கொல்கத்தாவில் நேற்று நடந்த ஐபிஎல் டி20 போட்டியின் எலிமினேட்டர் சுற்றில் ஆர்சிபி அணி வீரர் தினேஷ் கார்த்திக்கிற்கு கேட்சை மட்டும் லக்னோ சூப்பர் ஜெயின்ட்ஸ் கேப்டன் கேஎல் ராகுல் கோட்டைவிடவில்லை. ஆட்டத்தையும் கோட்டைவிட்டுள்ளார். 

கொல்கத்தாவில் நேற்று நடந்த ஐபிஎல் டி20 போட்டியின் எலிமினேட்டர் சுற்றில் ஆர்சிபி அணி வீரர் தினேஷ் கார்த்திக்கிற்கு கேட்சை மட்டும் லக்னோ சூப்பர் ஜெயின்ட்ஸ் கேப்டன் கேஎல் ராகுல் கோட்டைவிடவில்லை. ஆட்டத்தையும் கோட்டைவிட்டுள்ளார்.

இந்த கேட்சை மட்டும் ராகுல் பிடித்திருந்தால் ஆட்டத்தில் பெரிய திருப்புமுனை ஏற்பட்டிருக்கும். 

கொல்கத்தாவில் உள்ள ஈடன் கார்டன் மைதானத்தில் நேற்று நடந்த எலிமினேட்டர் சுற்றில் லக்னோ சூப்பர் ஜெயின்ட்ஸ் அணியை  14 ரன்கள் வித்தியாசத்தில் ஆர்சிபி அணி தோற்கடித்தது. முதலில் பேட் செய்தஆர்சிபி அணி 20 ஓவர்களில் 4 விக்கெட் இழப்புக்கு 207 ரன்கள் சேர்த்தது. 208 ரன்கள் சேர்த்தால் வெற்றி எனும் இலக்குடன் களமிறங்கிய லக்னோ சூப்பர் ஜெயின்ட்ஸ் அணி 20 ஓவர்களில் 6 விக்கெட் இழப்புக்கு 193 ரன்கள் சேர்த்து 14 ரன்களில் தோல்வி அடைந்தது.

இந்த ஆட்டத்தில் ஆர்சிபி அணியின் வெற்றிக்கு ராஜ் பட்டிதார் 54 பந்துகளில் 112 ரன்கள் சேர்த்ததும், அவருக்கு துணையாக தினேஷ் கார்த்திக் 37 ரன்களும் சேர்த்து இறுதிவரை ஆட்டமிழக்காமல் இருந்தார். இருவரும் 5-வது விக்கெட்டுக்கு 98 ரன்கள் பார்டனர்ஷிப் அமைத்து மிகப்பெரிய ஸ்கோர் உயர்வுக்கு காரணாக அமைந்தனர்.

இந்த ஆட்டத்தில் தினேஷ் கார்த்திக்கிற்கு லக்னோ கேப்டன் கேஎல் ராகுல் கேட்சை கோட்டைவிட்டதுதான் பெரிய திருப்புமுனையாக அமைந்தது. ஆட்டத்தின் 15-வது ஓவரை மோசின்கான் வீசினார், அதை தினேஷ் கார்த்திக் கவர் திசையில் தூக்கி அடிக்க அங்கு பீல்டிங் செய்த கேஎல் ராகுல் கைகளில் பந்து விழுந்தது. எளிதாகப் பிடிக்க வேண்டிய கேட்சை ராகுல் கோட்டைவி்ட்டார். ராகுல் கைகளில் பந்துபட்டு அதன்பின் தரையில் விழுந்தது.

இந்த கேட்சை ராகுல் நழுவவிடும்போது, ஆர்சிபி அணி பெரும் திணறலில் இருந்தது. தினேஷ் கார்த்திக் 2 ரன்களுடன் களத்தில் இருந்தார். இந்த வாய்ப்பை பயன்படுத்திக்கொண்ட கார்த்திக் வலுவாக நங்கூரமிட்டு பேட் செய்தார். ஒருவேளை தினேஷ் கார்த்திக்கிற்கு இந்த கேட்சை ராகுல் பிடித்திருந்தால் ஆட்டம் வேறு திசையில் சென்றிருக்கும்.

ராகுல் கேட்ச் பிடிப்பதை டக்அவுட்டிலிருந்து மென்ட்டர் கவுதம் கம்பீர் கூர்ந்து கவனித்து வந்தார். ஆனால் பந்து ராகுல் கரங்களில் பட்டு பிடிக்க முடியாமல் தரையில்பட்டதை பார்த்ததும் கவுதம் கம்பீர் பெருத்த வேதனையுடனும் ஆத்திரத்துடனும் சைகை செய்தார்.

இந்த போட்டியில் அடைந்த தோல்விக்குப்பின் லக்னோ சூப்பர் ஜெயின்ட்ஸ் கேப்டன் ராகுல் அளித்த பேட்டியில் “ நாங்கள் வெல்ல முடியாததற்கு அந்த கேட்சை நழுவவிட்டதுகூட காரணமாக இருக்கலாம். எளிதான கேட்சை நழுவவிடுவது போட்டியை வெல்ல துணை புரியாது. டாப் 3 வரிசையில் களமிறங்கும் வீரர்களில் யாரேனும் ஒருவர் சதம் அடிக்கும்போது, பெரும்பாலும் அந்த அணி வென்றுவிடும்.

 

pic.twitter.com/o7tUbHm5ZZ

— Yashi (@Smash_Jaiswal)

அந்த வகையில் பட்டிதார் ஆட்டம் சிறப்பானதாக இருந்தது. பட்டிதாருக்கு மட்டும் 3 கேட்சுகளை நழுவவிட்டோம். ஆர்சிபி நன்றாக பீல்டிங் செய்தனர், நாங்கள் மோசமாக செய்தோம். புதிய அணியாக வந்து 4-வது இடத்துக்குள் வந்தது பெருமையாக இருக்கிறது. இதில் கிடைத்த நல்ல விஷயங்களை அனுபவங்களை எடுத்துக்கொள்வோம். ஏராளமான தவறுகள் செய்தோம், ஒவ்வொருஅணியும் செய்வதுதான். அடுத்துவலுவாக வருவதற்கு முயல்வோம். இளம் வீரர்களைக் கொண்ட அணி, தவறுகளில் இருந்து பாடம் கற்று சிறந்த வீரர்களாக வருவோம்” எனத் தெரிவித்தார்

click me!