kieron pollard : விடைபெற்றார் கெய்ரன் பொலார்ட்: சர்வதேச கிரிக்கெட்டிலிருந்து ஓய்வு : மறக்க முடியாத சாதனை!

By Pothy Raj  |  First Published Apr 21, 2022, 10:24 AM IST

kieron pollard : மேற்கிந்தியத்தீவுகள் அணியின் டி20 கேப்டனான கெய்ரன் பொலார்ட் சர்வதேச கிரிக்கெட்டிலிருந்து ஓய்வு பெறுவதாக அறிவித்தார். சிஎஸ்கே அணியுடன் இன்று போட்டி நடக்க இருக்கும் நிலையில் இந்த முடிவை அறிவித்துள்ளார்.


மேற்கிந்தியத்தீவுகள் அணியின் டி20 கேப்டனான கெய்ரன் பொலார்ட் சர்வதேச கிரிக்கெட்டிலிருந்து ஓய்வு பெறுவதாக அறிவித்தார். சிஎஸ்கே அணியுடன் இன்று போட்டி நடக்க இருக்கும் நிலையில் இந்த முடிவை அறிவித்துள்ளார்.

ஆஸ்திரேலியாவில் டி20 உலகக் கோப்பை நடக்க இருக்கும் நிலையில் அடுத்த ஆண்டு ஒருநாள் உலகக் கோப்பை இருக்கும் நிலையில் பொலார்ட் இந்த முடிவை எடுத்துள்ளது அதிர்ச்சியடைய வைத்துள்ளது. இதனால் புதிய கேப்டனை மே.இ.தீவுகள் நிர்வாகம் தேட வேண்டிய நிலையில் இருக்கிறது.

Tap to resize

Latest Videos

கெய்ரன் பொலார்ட் பேட்டிங்கைப் பொறுத்தவரை முதல் 15 ஒருநாள்  போட்டிகளில் அவரின் பேட்டிங் சராசரி 11 ரன்களும், டி20 போட்டிகளில் முதல் 10 போட்டிகளில் 17 ரன்களாகத்தான் இருந்தது. ஆனால், ஐபிஎல் டி20 தொடரில் 2010ம் ஆண்டு ஜனவரியில் மும்பை இந்தியன்ஸ் அணியால் 7.50 லட்சம் டாலருக்கு வாங்கப்பட்டவுடன் அவரின் பேட்டிங்,பவுலிங் அனைத்து மாறியது.

குறிப்பாக 2009ம் ஆண்டு டி20 சாம்பியன்லீக் தொடரில் நியூ சவுத் வேல்ஸ் அணிக்கு எதிராக பொலார்ட் 18 பந்துகளில் 54 ரன்கள் விளாசியதைக் கண்டு அனைவரும்மிரண்டனர். இந்த ஆட்டத்தைப் பார்த்தபின்புதான் மும்பை இந்தியன்ஸ் பொலார்டை ஏலத்தில் தூக்கிச் சென்றது.

அதன்பின் பொலார்டின் சர்வதேச பேட்டிங், பந்துவீச்சு ரொக்கார்டு அனைத்தும் மாறத் தொடங்கியது. 2011ம் ஆண்டு உலகக் கோப்பைத் தொடரில் இரு அரைசதங்களை பொலார்ட் அடித்தார். சென்னையில் இந்திய அணிக்கு எதிராக நடந்த ஆட்டத்தில் பொலார்ட் 110 பந்துகளில் 110 ரன்கள் அடித்து வியப்பில் ஆவ்த்தினார். 2012ம் ஆண்டு டி20 உலகக் கோப்பை அரையிறுதியில் ஆஸ்திரேலியாவுக்கு எதிராக 15ப ந்துகளி்ல் 38 ரன்கள் சேர்த்து பொலார்ட் அதிர்ச்சியளித்தார்

பொலார்டின் பேட்டிங், ப ந்துவீச்சு அனைத்தும் டி20, ஒருநாள் போட்டிக்கு மட்டுமே பொருந்துவதாக இருந்ததால், அதில் ஸ்பெஷலிஸ்ட் வீரராக மாறினார். ஆனால் 2014ம் ஆண்டு மே.இ.தீவுகள் அணியிலிருந்து  பொலார்ட் கழற்றிவிடப்பட்டார். அணி நிர்வாகத்துடன் ஏற்பட்ட ஊதியப் பிரச்சினை காரணமாக பொலார்ட் அணியில் இடம் பெறாமல் இருந்தார்.

அதன்பின் மீண்டும் 2016ம் ஆண்டு சர்வதேச கிரிக்கெட்டுக்கு திரும்பினார். தென் ஆப்பிரிக்காவுக்கு எதிரான ஆட்டத்தில் டேரன் பிராவோவுடன் சேர்ந்து 156 ரன்கள் சேர்த்து 285 ரன்கள் வெல்லவைத்து தன்னுடைய ஃபார்மை பொலார்ட் நிரூபித்தார். 2014ம் ஆண்டு சிபிஎல் டி20 லீக்கில் பர்படாஸ் டிரிடன்ட்ஸ் அணிக்கு பொலார்ட் தலைமை கோப்பையைப் பெற்றுத்தந்து 2015ம் ஆண்டில் 2வது இடத்தைப் பிடித்தது.

மே.இ.தீவுகள் அணிக்குத் தவிர ஏறக்குறைய 30 வகையான லீக் அணிகளில் பொலார்ட் விளையாடி வருகிறார். சர்வதேச கிரிக்கெட்டிலிருந்து விடைபெற்றாலும், தனியார் லீக் போட்டிகளில் தொடர்ந்து விளையாடுவேன் எனத் தெரிவித்துள்ளார்.

பொலார்ட் தனது இஸ்ட்காகிராம் பகத்தில் பதிவிட்ட கருத்தில் “ கவனமாக நான் பரிசீலனை செய்து, இந்த முடிவை அறிவிக்கிறேன். நான் சர்வதேச கிரிக்கெட்டிலிருந்து ஓய்வு பெற முடிவு செய்திருக்கிறேன். மே.இ.தீவுகள் அணியில் இடம் பெற வேண்டும் என்பது ஏராளமான இளம் வீரர்களின் கனவு. எனக்கும் நான் 10வயதாக இருக்கும்போதிலிருந்து இருந்துத. கடந்த 15 ஆண்டுகளாக மே.இ.தீவுகள் அணியில் டி20 ஒருநாள் அணியில் இடம் பெற்றது பெருமையாக இருக்கிறது.

2007ம் ஆண்டு நான் முதன்முதலில் மே.இ.தீவுகள் அணியில் அறிமுகமானது எனக்கு நினைவிருக்கிறது, என்னுடைய ஹீரோ லாராவின் கேப்டன்ஷிப்பில் களமிறங்கினேன். மிகப்பெரிய ஜாம்பவான்களுடன், மெரூன்நிற ஆடை அணிந்துவிளையாடியதும், பந்துவீசியதையும், பேட்டிங் செய்ததையும், பீல்டிங் செய்ததையும் மறக்க முடியாது.மே.இ.தீவுகள் அணிக்கு கேப்டனாகப் பொறுப்பேற்ற தருணம் எனக்கு கிடைத்த மிக்பபெரிய கவுரவம். எந்தவிதமான சமரசமின்றி அந்தப் பணியைச் செய்தேன்.” எனத் தெரிவித்துள்ளார்.

பொலார்ட் இதுவரை 123 ஒருநாள் போட்டிகளில் விளையாடி 2,706 ரன்கள் சேர்த்துள்ளார், 55 விக்கெட்டுகளை வீழ்த்தியுள்ளார். 101 டி20 போட்டிகளில் விளையாடி 1,569 ரன்கள் சேர்த்துள்ளார், 135 ஸ்ட்ரைக்ரேட் வைத்துள்ளார் பொலார்ட். அதிகபட்சமாக 75 ரன்களுடன் பொலார்ட் நாட்அவுட் நிலையில் இருந்துள்ளார்.

2012ம் ஆண்டு டி20 உலகக் கோப்பைப் போட்டியில் இலங்கைக்கு எதிரான ஆட்டத்தில் அகிலா தனஞ்செயா ஓவரில் ஒரே ஓவரில் 6 சிக்ஸர் பொலார்ட் அடித்ததை மறக்க முடியாது. 2007ம் ஆண்டு யுவராஜ் சிங், கிப்ஸுக்கு அடுத்தார்போல் இந்த சாதனையை பொலார்ட் மட்டுமே செய்திருக்கிறார். டி20 போட்டிகளில் அதிகமான சிக்ஸர்களாக 234 சிக்ஸர் அடித்தவைகயில் கெயிலுக்கு(532) அடுத்தார்போல் பொலார்ட் உள்ளார்.

click me!