DC vs PBKS: டெல்லி கேபிடள்ஸ் பவுலர்கள் அபார பவுலிங்.. எளிய இலக்கை நிர்ணயித்த பஞ்சாப் கிங்ஸ்

Published : Apr 20, 2022, 09:30 PM IST
DC vs PBKS: டெல்லி கேபிடள்ஸ் பவுலர்கள் அபார பவுலிங்.. எளிய இலக்கை நிர்ணயித்த பஞ்சாப் கிங்ஸ்

சுருக்கம்

டெல்லி கேபிடள்ஸுக்கு எதிரான போட்டியில் முதலில் பேட்டிங் ஆடிய பஞ்சாப் கிங்ஸ் அணி 20 ஓவரில் 115 ரன்கள் மட்டுமே அடித்து 116 ரன்கள் என்ற இலக்கை நிர்ணயித்துள்ளது.  

ஐபிஎல் 15வது சீசனின் இன்றைய போட்டியில் டெல்லி கேபிடள்ஸ் மற்றும் பஞ்சாப் கிங்ஸ் அணிகள் ஆடிவருகின்றன. மும்பை ப்ரபோர்ன் மைதானத்தில் நடந்துவரும் இந்த போட்டியில் டாஸ் வென்ற டெல்லி கேபிடள்ஸ் கேப்டன் ரிஷப் பண்ட் ஃபீல்டிங்கை தேர்வு செய்தார்.

டெல்லி கேபிடள்ஸ் அணி:

பிரித்வி ஷா, டேவிட் வார்னர், ரிஷப் பண்ட் (கேப்டன், விக்கெட் கீப்பர்), ரோவ்மன் பவல், லலித் யாதவ், சர்ஃபராஸ் கான், ஷர்துல் தாகூர், அக்ஸர் படேல், குல்தீப் யாதவ், முஸ்தாஃபிசுர் ரஹ்மான், கலீல் அகமது.

பஞ்சாப் கிங்ஸ் அணி:

மயன்க் அகர்வால் (கேப்டன்), ஷிகர் தவான், ஜானி பேர்ஸ்டோ, லியாம் லிவிங்ஸ்டோன், ஜித்தேஷ் ஷர்மா (விக்கெட் கீப்பர்), ஷாருக்கான், ரபாடா, நேதன் எல்லிஸ், ராகுல் சாஹர், வைபவ் அரோரா, அர்ஷ்தீப் சிங்.

முதலில் பேட்டிங் ஆடிய பஞ்சாப் கிங்ஸ் அணியின் தொடக்க வீரர்கள் தவான் (9), மயன்க் அகர்வால்(24) ஆகிய இருவரும் சொற்ப ரன்களில் ஆட்டமிழக்க, அதன்பின்னர் லிவிங்ஸ்டோன்(2), பேர்ஸ்டோ(9), ஷாருக்கான்(12) ஆகியோரும் சொற்ப  ரன்களில் ஆட்டமிழந்தனர். அதிரடியாக ஆடிய ஜித்தேஷ் ஷர்மா 32 ரன்கள் அடித்தார். அதன்பின்னர் பின்வரிசை வீரர்களும் சொற்ப ரன்களுக்கு ஆட்டமிழந்ததால் 20 ஓவரில் 115 ரன்களுக்கு ஆல் அவுட்டானது பஞ்சாப் அணி.

டெல்லி கேபிடள்ஸ் அணி சார்பில் அபாரமாக பந்துவீசிய கலீல் அகமது, அக்ஸர் படேல், லலித் யாதவ், குல்தீப் யாதவ் ஆகிய நால்வரும் தலா 2 விக்கெட்டுகளை வீழ்த்தினர். 116 ரன்கள் என்ற எளிய இலக்கை டெல்லி அணி விரட்டிவருகிறது.
 

PREV
Read more Articles on
click me!

Recommended Stories

IND vs NZ: சிவம் துபேவின் அதிரடி வேஸ்ட்.. 4வது டி20ல் இந்தியா அதிர்ச்சி தோல்வி
T20 உலகக்கோப்பையை இந்தியா வெல்வது உறுதி.. இவர் தான் துருப்புச்சீட்டு.. அடித்து சொல்லும் ஜாம்பவான்!