
ஐபிஎல் 15வது சீசனின் இன்றைய போட்டியில் டெல்லி கேபிடள்ஸ் மற்றும் பஞ்சாப் கிங்ஸ் அணிகள் ஆடிவருகின்றன. மும்பை ப்ரபோர்ன் மைதானத்தில் நடந்துவரும் இந்த போட்டியில் டாஸ் வென்ற டெல்லி கேபிடள்ஸ் கேப்டன் ரிஷப் பண்ட் ஃபீல்டிங்கை தேர்வு செய்தார்.
டெல்லி கேபிடள்ஸ் அணி:
பிரித்வி ஷா, டேவிட் வார்னர், ரிஷப் பண்ட் (கேப்டன், விக்கெட் கீப்பர்), ரோவ்மன் பவல், லலித் யாதவ், சர்ஃபராஸ் கான், ஷர்துல் தாகூர், அக்ஸர் படேல், குல்தீப் யாதவ், முஸ்தாஃபிசுர் ரஹ்மான், கலீல் அகமது.
பஞ்சாப் கிங்ஸ் அணி:
மயன்க் அகர்வால் (கேப்டன்), ஷிகர் தவான், ஜானி பேர்ஸ்டோ, லியாம் லிவிங்ஸ்டோன், ஜித்தேஷ் ஷர்மா (விக்கெட் கீப்பர்), ஷாருக்கான், ரபாடா, நேதன் எல்லிஸ், ராகுல் சாஹர், வைபவ் அரோரா, அர்ஷ்தீப் சிங்.
முதலில் பேட்டிங் ஆடிய பஞ்சாப் கிங்ஸ் அணியின் தொடக்க வீரர்கள் தவான் (9), மயன்க் அகர்வால்(24) ஆகிய இருவரும் சொற்ப ரன்களில் ஆட்டமிழக்க, அதன்பின்னர் லிவிங்ஸ்டோன்(2), பேர்ஸ்டோ(9), ஷாருக்கான்(12) ஆகியோரும் சொற்ப ரன்களில் ஆட்டமிழந்தனர். அதிரடியாக ஆடிய ஜித்தேஷ் ஷர்மா 32 ரன்கள் அடித்தார். அதன்பின்னர் பின்வரிசை வீரர்களும் சொற்ப ரன்களுக்கு ஆட்டமிழந்ததால் 20 ஓவரில் 115 ரன்களுக்கு ஆல் அவுட்டானது பஞ்சாப் அணி.
டெல்லி கேபிடள்ஸ் அணி சார்பில் அபாரமாக பந்துவீசிய கலீல் அகமது, அக்ஸர் படேல், லலித் யாதவ், குல்தீப் யாதவ் ஆகிய நால்வரும் தலா 2 விக்கெட்டுகளை வீழ்த்தினர்.
116 ரன்கள் என்ற எளிய இலக்கை விரட்டிய டெல்லி கேபிடள்ஸ் அணியின் தொடக்க வீரர்கள் டேவிட் வார்னர் மற்றும் பிரித்வி ஷா ஆகிய இருவரும் தொடக்கம் முதலே அடித்து ஆடி வேகமாக ஸ்கோர் செய்தனர். பவர்ப்ளேயில் டெல்லி அணி 81 ரன்களை குவித்தது. அதிரடியாக ஆடிய பிரித்வி ஷா 20 பந்தில் 41 ரன்கள் அடித்து ஆட்டமிழந்தார். அதிரடியாக ஆடி அரைசதம் அடித்த வார்னர் 30 பந்தில் 60ரன்களை குவிக்க, 11வது ஓவரிலேயே இலக்கை அடித்து டெல்லி அணி அபார வெற்றி பெற்றது.