
இந்தியன் சூப்பர் லீக் - 4 (ஐ.எஸ்.எல்.) கால்பந்து போட்டியின் 22-வது ஆட்டத்தில் மும்பை அணி 1-0 என்ற கோல் கணக்கில் சென்னை அணியை வீழ்த்தியது.
இந்தியன் சூப்பர் லீக் - 4 (ஐ.எஸ்.எல்.) கால்பந்து போட்டியின் 22-வது ஆட்டம் மும்பையில் நேற்றிரவு சென்னையின் எப்.சி. அணி மற்றும் மும்பை சிட்டி எப்.சி. அணிகளுக்கு இடையே நடைப்பெற்றது.
விறுவிறுப்பாக நடந்த இந்த ஆட்டத்தில் பந்தை கடத்துவதிலும், ஷாட் அடிப்பதிலும் சென்னை அணியே ஆதிக்கம் செலுத்தியது. ஆனாலு, 60-வது நிமிடத்தில் மும்பை வீரர் பல்வந்த் சிங்கை, கோல் பகுதியில் வைத்து சென்னை வீரர் தள்ளிவிட்டதால் அந்த அணிக்கு பெனால்டி வாய்ப்பு கொடுக்கப்பட்டது.
பெனால்டி வாய்ப்பில் மும்பை வீரர் ஆசிலி எமானா கோல் அடித்து முதல் கோலைப் பதிவு செய்தார். ஆட்டத்தின் இறுதிவரை சென்னை அணியை கோல் போட விடாமல் தடுப்பாட்டம் ஆடிய மும்பை அணி 1-0 என்ற கோல் கணக்கில் வெற்றிப் பெற்றது.
இந்த வெற்றி மும்பை அணிக்கு 2-வது வெற்றி ஆகும். 5-வது ஆட்டத்தில் ஆடிய சென்னை அணிக்கு இது 2-வது தோல்வி ஆகும்.
கிரிக்கெட் மற்றும் விளையாட்டு உலகின் (Sports News in Tamil) நிமிட நிமிட தமிழ் செய்தி அப்டேட்களுக்காக ஏஷ்யாநெட் தமிழ்-ஐ பின்பற்றுங்கள். IPL லைவ் உட்பட டீம் இந்தியாவின் பிரேக்கிங் நியூஸ் (Cricket News in Tamil), சிறப்பு ரிப்போர்ட்கள் மற்றும் நேரலைகளுடன் முழுமையான தகவல்கள் உங்களுக்கு ஒரே கிளிக்கில் கிடைக்கும். ஏஷ்யாநெட் தமிழ் அதிகாரப்பூர்வ ஆப்பைப் டவுன்லோடு செய்து அனைத்து அப்டேட்களையும் பெறுங்கள்.