ஐபிஎல் தொடரில் சிஎஸ்கேவின் தோனி விளையாடும் கடைசி போட்டி குறித்தும் முக்கிய தகவல் வெளியாகி உள்ளது.
IPL 2025: Dhoni retirement decisions, CSK team future: கிரிக்கெட் ரசிகர்கள் ஆவலுடன் எதிர்பார்க்கும் ஐபிஎல் 2025 தொடர் மார்ச் 22ம் தேதி முதல் கோலாகலமாக தொடங்க உள்ளது. 2025 ஐபிஎல் தொடரை தங்களுக்கு பிடித்தமான அணி தான் கைப்பற்றும் என ரசிகர்கள் இப்போதே சமூக வலைத்தளத்தில் கருத்துகளை பகிர்ந்து வருகின்றனர். ஐபிஎல் தொடர்களில் தொடர்ந்து சிறந்த அணியாக வலம் வந்து கொண்டிருக்கிறது சிஎஸ்கே என அழைக்கப்படும் சென்னை சூப்பர் கிங்ஸ்.
மகேந்திர சிங் தோனி தலைமையில் சென்னை அணி 5 முறை ஐபில் கோப்பையை கையில் ஏந்தியுள்ள நிலையில், இந்த முறையும் கோப்பையை வெல்ல வேண்டும் என ரசிகர்கள் எதிர்பார்ப்பில் உள்ளனர். இதற்கேற்ப சிஎஸ்கே அணி பேட்டிங், பவுலிங் என இரண்டிலும் சம பலத்துடன் உள்ளது. மேலும் 43 வயதான தோனிக்கு இதுதான் கடைசி ஐபிஎல் சீசனாக இருக்கும் என கருதப்படுவதால் தோனியின் ஆட்டத்தை காண ரசிகர்கள் ரெடியாக உள்ளனர்.
தோனி ஓய்வு குறித்து வெளியான தகவல்
தோனி எந்த இடத்தில் பேட்டிங் செய்ய களமிறங்குவார்? என்ற எதிர்பார்ப்பு எழுந்துள்ள நிலையில், சிஎஸ்கே ரசிகர்களுக்கு அதிர்ச்சி அளிக்கும் விதமாக ஒரு செய்தி வெளியாகி உள்ளது. அதாவது இந்த ஐபிஎல் சீசனின்போது தோனி ஓய்வு பெறுவது உறுதியாகி உள்ளது. இந்நிலையில், 18ஆவது சீசனின் தோனி சில போட்டிகளில் மட்டுமே ஆடுவார் எனத் தகவல் வெளியாகி உள்ளது. இந்த ஐபிஎல் சீசனில் சேப்பாக்கத்தில் நடக்கும் கடைசி லீக் போட்டியின்போது தோனி ஓய்வு பெற்று விடுவார் என தகவல்கள் தெரிவிக்கின்றன.
ஒரு சில போட்டிகளில் தான் விளையாடுவார்
அதுதான் தோனிக்கு கடைசி போட்டி என்றும் சிஎஸ்கே பிளே ஆப் சுற்றுக்கு சென்றாலும் தோனி அதில் விளையாட மாட்டார் எனவும் தகவல்கள் கூறுகின்றன. இதுமட்டுமின்றி 2025 ஐபிஎல்லில் இம்பேக்ட் வீரராக மட்டுமே களமிறங்கும் தோனி ஒரு சில போட்டிகளில் மட்டும் தான் விளையாடுவார் எனவும் தகவல்கள் கசிந்துள்ளன.
CSK vs MI டிக்கெட் விற்பனை தொடங்கும் தேதி அறிவிப்பு! டிக்கெட் விலை என்ன? எங்கு வாங்கலாம்?
அடுத்த விக்கெட் கீப்பர் யார்?
தோனி இம்பேக் வீரராக இருப்பதால் சிஎஸ்கேவில் தோனிக்கு பதிலாக டெவான் கான்வே விக்கெட் கீப்பராக செயல்படுவார் என கூறப்பட்டுள்ளது. அதே வேளையில் தோனி பல போட்டிகளில் விளையாடாமல் இருந்தாலும் அணிக்கு ஒரு ஆலோசகராக செயல்படுவார் எனவும் தகவல்கள் வெளியாகி இருக்கின்றன.
ஐபிஎல் தொடரில் சிஎஸ்கே கோப்பையை வெல்லும்! அடித்து சொல்லும் முன்னாள் கேப்டன்!