ஐபிஎல் தொடர் 22ம் தேதி தொடங்க உள்ள நிலையில், சன்ரைசர்ஸ் ஹைதராபாத் அணியின் பேட்டிங் மற்றும் பந்துவீச்சு பலம் குறித்து பார்க்கலாம்.
IPL 2025: SRH Batting and Bowling Analysis: ஐபில் கிரிக்கெட் தொடர் தொடங்குவதற்கு இன்னும் சில நாட்களே இருக்கும் நிலையில், அதிக எதிர்பார்ப்பை ஏற்படுத்திய அணிகளில் ஒன்று சன்ரைசர்ஸ் ஹைதராபாத். டேவிட் வார்னர் தலைமையில் ஒருமுறை கோப்பையை கையில் ஏந்திய சன்ரைசர்ஸ் ஹைதராபாத், கடந்த சீசனில் இறுதிப்போட்டி வரை வந்து தோற்றது.
இந்த முறை வாய்ப்பை விடக்கூடது என்பதில் பேட் கம்மின்ஸ் தலைமையிலான அணி உறுதியாக இருக்கிறது. சன்ரைசர்ஸ் ஹைதராபாத் அணி பெரும்பாலும் வெளிநாட்டு வீரர்களை நம்பியிருந்தாலும், அதைச் சேர்க்க இளம் இந்திய வீரர்கள் உள்ளனர். கடந்த முறை, பலமான பேட்டிங் வரிசையால் பந்துவீச்சு குறைபாட்டை சமாளிக்க முடிந்தது. ஆனால் இந்த முறை பந்துவீச்சாளர்களின் பலமும் சரிசமாக உள்ளது.
டிராவிஸ் ஹெட், அபிஷேக் சர்மா
பேட் கம்மின்ஸ், ஹென்ரிச் கிளாசென், டிராவிஸ் ஹெட், அபிஷேக் சர்மா, நிதிஷ் ரெட்டி என வலுவான வீரர்கள் உள்ளனர். அதுவும் அபிஷேக் சர்மா, டிராவிஸ் ஹெட் இரக்கமே இல்லாமல் பவுலர்களை வெளுத்து வாங்குவார்கள். கடந்த சீசனில் இருவரும் 200 ஸ்டிரைக் ரேட்டில் ஆடினர். ஹெட் 567 ரன்களும், அபிஷேக் 484 ரன்களும் எடுத்தனர். இருவரின் 70 சதவீத ரன்களும் பவர்பிளேயில் வந்தவை.
ஹென்ரிச் கிளாசன், நிதிஷ்குமார் ரெட்டி
இதனுடன் பேட் கம்மின்ஸின் கேப்டன்சி அனுபவம் ஹைதராபாத் அணிக்கு பெரிதும் கைகொடுக்கும். மேலும் இஷான் கிஷான் டாப் ஆர்டரில் இணையும்போது பேட்டிங் வரிசை மேலும் பலப்படும். ஒப்பனிங்கில் டிராவிஸ் ஹெட், அபிஷேக் சர்மா களமிறங்குவார்கள். அதற்கு அடுத்த இடத்தில் இஷான் கிஷன் களமிறங்குவார். இதற்கு அடுத்து அபினவ் மனோகர் அல்லது சச்சின் பேபி,ஹென்ரிச் கிளாசன், நிதிஷ்குமார் ரெட்டி களமிறங்க உள்ளனர்.
ஐபிஎல் 2025: அதிக சம்பளம் பெறும் டாப் 5 வீரர்கள்! முழு லிஸ்ட் இதோ!
ஆடம் ஜம்பா, முகமது ஷமி
பந்துவீச்சை பொறுத்தவரை பேட் கம்மின்ஸ் களத்டதின் சூழ்நிலைக்கு ஏற்ப பந்துவீசுவதில் வல்லவர். இது தவிர அனுபவம் வாய்ந்த முகமது ஷமி, இளம் வீரர் ஹர்ஷல் படேல் பந்துவீச்சில் பலம் சேர்க்கின்றனர்.
இது தவிர ஹைதராபாத் அணிக்கு ஜெய்தேவ் உனத்கட்டும் ஒரு வாய்ப்பாக இருக்கிறார். ஸ்பின் பவுலிங்கை பொறுத்தவரை நம்பர் 1 ஸ்பின் பவுலர் ஆடம் ஜம்பா மற்றும் ராகுல் சாஹர் ஆகியோர் துருப்புச் சீட்டுகளாக இருக்கின்றனர்.
ஷாபாஸ் அகமது
இவர்கள் தவிர கடந்த சீசனில் ஷாபாஸ் அகமது முக்கிய சுழற்பந்து வீச்சாளராக இருந்தார். அபிஷேக் சர்மா நன்றாக ஸ்பின் பவுலிங் போடுவார். ஒட்டுமொத்தத்தில் பேட்டிங், பவுலிங் என இரண்டிலும் பலமாக உள்ள சன்ரைசர்ஸ் ஹைதராபாத் அணி இந்த முறை கோப்பையை வெல்ல ரெடியாக உள்ளது.
ஏலத்தில் எடுக்கப்படாத ஷர்துல் தாக்கூருக்கு திடீர் அதிர்ஷ்டம்! தட்டித்தூக்கும் அணி!