ஐபிஎல் 2025ல் சென்னை சூப்பர் கிங்ஸ் கோப்பையை வெல்லும் என கிருஷ்ணமாச்சாரி ஸ்ரீகாந்த் தெரிவித்துள்ளார். சிஎஸ்கே தனது முதல் போட்டியில் மும்பையுடன் மோதுகிறது.
IPL 2025: CSK VS MI: இந்திய முன்னாள் வீரரும், தேர்வாளருமான கிருஷ்ணமாச்சாரி ஸ்ரீகாந்த், சென்னை சூப்பர் கிங்ஸ் (சிஎஸ்கே) மற்றும் மும்பை இந்தியன்ஸ் (எம்ஐ) அணிகளுக்கு இடையிலான ஐபிஎல் 2025 போட்டி குறித்து கருத்து தெரிவித்துள்ளார். இந்த போட்டி மார்ச் 23 ஞாயிற்றுக்கிழமை நடைபெற உள்ளது. ஏஎன்ஐ செய்தி நிறுவனத்திடம் பேசிய ஸ்ரீகாந்த், சிஎஸ்கே அணியைப் புகழ்ந்து பேசினார். இந்த 2025 ஐபிஎல் சீசன் சிஎஸ்கேவுக்கு சிறப்பாக இருக்கும் என்று கூறினார்.
சென்னை சூப்பர் கிங்ஸ்
"சென்னை சூப்பர் கிங்ஸ் (சிஎஸ்கே) ஐபிஎல் 2025ல் சிறப்பாக விளையாடுவார்கள். மும்பை இந்தியன்ஸ் மற்றும் சென்னை சூப்பர் கிங்ஸ் அணிகளுக்கு இடையிலான தொடக்க ஆட்டம் சூப்பராக இருக்கும். இந்த சீசன் ரொம்ப நல்லா இருக்கும்" என்று கிருஷ்ணமாச்சாரி ஸ்ரீகாந்த் தெரிவித்துள்ளார். இந்த முக்கியமான போட்டி சீசனின் மிகவும் எதிர்பார்க்கப்பட்ட நிகழ்வுகளில் ஒன்றாக இருக்கும், ஏனெனில் இரண்டு அணிகளுக்கும் நீண்டகால போட்டி உள்ளது. சென்னை சூப்பர் கிங்ஸ் ஐபிஎல்-இல் நம்பகத்தன்மைக்கும், திறமைக்கும் பெயர் பெற்றது. அதே நேரத்தில், மும்பை இந்தியன்ஸ் ஐந்து முறை சாம்பியன் பட்டம் வென்றுள்ளது.
மஞ்சள் ஜெர்சி அணிந்து களம்காணும் தோனி
இந்த போட்டி தொடரின் மிகவும் எதிர்பார்க்கப்பட்ட நிகழ்வுகளில் ஒன்று மட்டுமல்ல, எம்.எஸ்.தோனியின் கிரிக்கெட் மைதானத்துக்கு திரும்பும் போட்டியும்கூட. தோனி சர்வதேச கிரிக்கெட் போட்டிகளில் இருந்து ஓய்வு பெற்றுவிட்டார். இப்போது ஐபிஎல்-இல் மட்டும்தான் விளையாடுகிறார். தோனி மஞ்சள் ஜெர்சி அணிந்து விளையாடுவதை பார்க்க ரசிகர்கள் ஆவலுடன் உள்ளனர்.
இந்த இரண்டு அணிகளும் கடைசியாக மோதியபோது சென்னை அணி 20 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது. அந்த போட்டியில் ரோகித் சர்மா சதம் அடித்தார். ஆனால் சிஎஸ்கே பதிரனா நாலு விக்கெட் எடுத்து ஆட்டநாயகன் விருதை தட்டி தூக்கினார். எம்.எஸ்.தோனி நாலு பந்தி; 20 ரன் அடிச்சு சிஎஸ்கே வெற்றிக்கு காரணமாக விளங்கினார்.
இனி ஆஸ்திரேலியாவில் விளையாட மாட்டோன்! கோலியின் அதிரடி அறிவிப்பால் அதிர்ச்சியில் ரசிகர்கள்
சிஎஸ்கே அணி என்ன?
சிஎஸ்கே அணி: ருதுராஜ் கெய்க்வாட் (கேப்டன்), எம்.எஸ்.தோனி, ரவீந்திர ஜடேஜா, சிவம் துபே, மதீஷா பதிரனா, நூர் அகமது, ரவிச்சந்திரன் அஸ்வின், டெவோன் கான்வே, சையத் கலீல் அகமது, ரச்சின் ரவீந்திரா, ராகுல் திரிபாதி, விஜய் சங்கர், சாம் குர்ரான், ஷேக் ரஷீத், அன்ஷுல் கம்போஜ், முகேஷ் சவுத்ரி, தீபக் ஹூடா, குர்ஜான்ப்ரீத் சிங், நாதன் எல்லிஸ், ஜேமி ஓவர்டன், கம்லேஷ் நாகர்கோடி, ராமகிருஷ்ணன் கோஷ், ஸ்ரேயாஸ் கோபால், வான்ஷ் பேடி, ஆண்ட்ரே சித்தார்த்.
மும்பை இந்தியன்ஸ் அணி என்ன?
மும்பை இந்தியன்ஸ் அணி: ஹர்திக் பாண்டியா (கேப்டன்), ஜஸ்பிரித் பும்ரா, ரோஹித் சர்மா, திலக் வர்மா, டிரெண்ட் போல்ட், நமன் திர், ராபின் மின்ஸ், கர்ண் சர்மா, ரியான் ரிக்கெல்டன், தீபக் சாஹர், வில் ஜாக்ஸ், அஷ்வனி குமார், மிட்செல் சான்ட்னர், ரீஸ் டோப்லி, ஸ்ரீஜித் கிருஷ்ணன், ராஜ் அங்கத் பாவா, வெங்கட் சத்யநாராயணா ராஜு, பெவோன் ஜேக்கப்ஸ், அர்ஜுன் டெண்டுல்கர், விக்னேஷ் புத்தூர், சூர்யகுமார் யாதவ்.
ஐபிஎல் 2025: தோனி எந்த இடத்தில் களமிறங்குகிறார்? சிஎஸ்கே பிளேயிங் லெவன் இதோ!