ipl 2022:playoff:ஐபிஎல் 2022: ப்ளே ஆஃப் சுற்றுக்கு எந்தெந்த அணிகளுக்கு வாய்ப்பு: சிஎஸ்கே, டெல்லி முன்னேறுமா

By Pothy RajFirst Published May 12, 2022, 12:51 PM IST
Highlights

ipl 2022:  playoff : ஐபிஎல் டி20 போட்டியில் இன்னும் 12 லீக் ஆட்டங்கள் மீதமிருக்கும் நிலையில் எந்தெந்த அணிகள் ப்ளேஆஃப் சுற்றுக்கு முன்னேறும் என்பது பெரும் எதிர்பார்ப்பாக இருக்கிறது

ஐபிஎல் டி20 போட்டியில் இன்னும் 12 லீக் ஆட்டங்கள் மீதமிருக்கும் நிலையில் எந்தெந்த அணிகள் ப்ளேஆஃப் சுற்றுக்கு முன்னேறும் என்பது பெரும் எதிர்பார்ப்பாக இருக்கிறது

15-வது ஐபிஎல் டி20 தொடரில் இதுவரை குஜராத் டைட்டன்ஸ் அணி மட்டுமே ப்ளே ஆஃப் சுற்றுக்கு அதிகாரபூர்வமாக முன்னேறியுள்ளது, அதேபோல, மும்பை இந்தியன்ஸ் அணி மட்டுமே தொடரிலிருந்து வெளியேறியுள்ளது. மற்ற அணிகளுக்கு வாய்ப்புகள் இருப்பதால் மற்ற 7 அணிகளில் எந்த 3 அணிகள் வேண்டுமானாலும் ப்ளே ஆஃப் சுற்றுக்குள் செல்லலாம்.

ப்ளே ஆஃப் சுற்றுக்கான 12 விதமான முக்கிய அம்சங்கள்

  1. மும்பை இந்தியன்ஸ் அணி ஐபிஎல் தொடரிலிருந்து கணக்கீட்டு முறையில் வெளியேறிவிட்டது. இனிமேல் அடுத்துவரும் போட்டிகளில் வென்றாலும்ப்ளே ஆஃப் வாய்ப்பு இல்லை
  2. சென்னை சூப்பர் கிங்ஸ் அணி 3-வது அல்லது 4-வது இடத்தைப் பிடிக்க வாய்ப்பு இருக்கிறது. 14 புள்ளிகளுடன் 4-வது இடத்துக்கு 6 அணிகள் போட்டியில் வெல்லவும்,   7 அணிகளுக்கு இடையிலான 3-வது இடத்துக்கான  போட்டியில் வெல்லவும் சிஎஸ்கே அணிக்கு வாய்ப்புள்ளது.
  3. சிஎஸ்கே அணி 3வது அல்லது 4வது இடத்தைப் பிடிக்க அடுத்துவரும் அனைத்து ஆட்டங்களிலும் மிகப்பெரிய வித்தியாசத்தில் வெற்றி பெற வேண்டும்.
  4. கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணி 4-வது இடத்தைப் பிடிக்க 7% வாய்ப்பு இருக்கிறது. ஆனால், சிஎஸ்கே அணி 4-வது இடத்தையோ அல்லது 3-வது இடத்தையோ பிடிக்க அதிகமான வாய்ப்புகள் உள்ளன.
  5. டெல்லி கேபிடல்ஸ் அணி ப்ளே ஆஃப் சுற்றில் டாப்-4 இடங்களில் இடம் பெறுவதற்கான வாய்ப்பை 40 சதவீதம் அதிகரித்துக்கொண்டது. ஆனால் முதலிடம் பெற முடியாது.
  6.  பஞ்சாப் கிங்ஸ் அணி டாப்-4 இடங்களில் இடம் பெற 26 சதவீதம் வாய்ப்புள்ளது. டெல்லி கேபிடல்ஸ் அணியைப் போல் அடுத்துவரும் போட்டிகளி்ல வென்றாலும் முதலிடம் பெற முடியாது.
  7. சன் ரைசர்ஸ் ஹைதராபாத் அணி டாப்-4 பிரிவில் இடம் பிடிக்க 23.4% வாய்ப்புள்ளது. அடுத்துவரும் ஆட்டங்களில் வென்றாலும் சன்ரைசர்ஸ் அணியால் முதலிடத்தைப் பிடிக்க முடியாது.
  8. ஆர்சிபி அணி டாப்-4 இடங்களில் பிடிக்க வாய்ப்பு இருந்தநிலையில் 88 சதவீதமாகக் குறைந்துவிட்டது. ஆர்சிபி அணியால் புள்ளிக்கணக்கில் 6-வது இடத்தைத்தான்பிடிக்க இயலும்.
  9. டெல்லி கேபிடல்ஸ் அணிக்கு எதிராக நேற்றைய ஆட்டத்தில் ராஜஸ்தான்ராயல்ஸ் அணி தோற்றாலும் 91 சதவீதம் ப்ளே ஆஃப் சுற்றுக்குள் செல்ல வாய்ப்புள்ளது. ஆனால் அடுத்துவரும் போட்டிகளில்ராஜஸ்தான் தோல்வி அடைந்தால் 6-வது இடத்தைத்தான் பிடிக்கஇயலும்.
  10. லக்னோ சூப்பர் ஜெயின்ட்ஸ் அணி டாப்-4 இடங்களில் புள்ளிகளின் அடிப்படையில் முதல்முறையாக இடம் பெற வாய்ப்புள்ளது. ஆனால், 5 அணிகள் 2-வது இடத்துக்கு போட்டியிட்டு 16 புள்ளிகள் எடுத்தாலும் லக்னோ அணியால் அதை அடைவது கடினம்
  11. குஜராத் டைட்டன்ஸ் அணி முதல்முறையாக ஐபிஎல் டி20 தொடரில் ப்ளே ஆஃப் சுற்றை உறுதிசெய்துள்ளது. 
  12. குஜராத் டைட்டன்ஸ், லக்னோ சூப்பர் ஜெயின்ட்ஸ், ராஜஸ்தான் ராயல்ஸ், ஆர்சிபி அணிகள் ப்ளே ஆப் சுற்றுக்குள் வரலாம். அதேசமயம், ஆர்சிபி, ராஜஸ்தான் அணிகளுக்கு மாற்றாக, டெல்லி கேபிடல்ஸ், சன்ரைசர்ஸ் ஹைதராபாத், பஞ்சாப் கிங்ஸ் அணிகள் ப்ளே ஆஃப் சுற்றுக்குள் வருவதற்கு குறைந்த வாய்ப்புகளே உள்ளன. 
click me!