
நடிகை அனுஷ்கா சர்மாவுடன் இணைந்து முதல்முறையாக ஐபிஎல்டி20 போட்டியைப் பார்க்கும் வாய்ப்பு இளம் பெண் ஒருவருக்கு கிடைத்துள்ளது.
அந்த இளம் பெண் இதுவரை ஐபிஎல் டி20 போட்டியை இதுவரை நேரடியாகப் பார்த்ததில்லை என்பதால், போட்டியை நேரடியாகப் பார்க்கும் வாய்ப்பு, அதிலும் அனுஷ்கா சர்மாவுடன் இணைந்து போட்டியைக் காணும் வாய்ப்பால் மகிழ்ச்சி அடைந்து ட்விட்டரில் வீடியோ வெளியிட்டுள்ளார்.
ஆர்சிபி மற்றும் டெல்லி கேபிடல்ஸ் அணிகளுக்கு இடையிலான ஆட்டத்தைப் பார்த்த அனுஷ்காவின் கைதட்டல்கள், ஆர்ப்பரிப்புகள், முகபாவனைகளை புகைப்படம் எடுத்தும், வீடியோ எடுத்தும் இன்ஸ்டாகிராமில் ரவீணா அஹுஜா என்ற இளம் பெண் வெளியிட்டார். இதற்கு லட்சக்கணக்கான லைக்குகள் கிடைத்து, இந்த வீடியோ வைரலாகியுள்ளது.
ரவீணா இதுநாள்வரை ஐபிஎல் போட்டியை நேரடியாக மைதானத்துக்குச் சென்று பார்த்தது இல்லை. ஆனால், மும்பை வான்ஹடை மைதானத்துக்கு முதல்முறையாகச் சென்று ஆர்சிபி அணியின் ஆட்டத்தைப் பார்த்தபோது அங்கு கார்ப்பரேட் பாக்ஸில் அனுஷ்கா சர்மாவும், அவரின் குடும்பத்தாரும் இருந்தது ரவிணாவுக்கு இன்பஅதிர்ச்சியாக இருந்தது. அனுஷ்காவுடன் இணைந்து போட்டியைப் பார்த்த ரவீணா, அனுஷ்காவுடன் புகைப்படம் எடுத்தும், வீடியோ எடுத்தும் வெளியிட்டுள்ளார்.
அனுஷ்கா சர்மாவுடன் அமர்ந்து ஐபிஎல் போட்டியைப் பாரத்தபின் ரவீணா இன்ஸ்டாகிராமில் பதிவிட்ட கருத்தில் “ என்னுடைய வாழ்க்கையில் முதல்முறையாக மைதானத்துக்குச் சென்று ஐபிஎல் போட்டியை நேரடியாகப் பார்த்தேன். எனக்கு இது எப்போதுமே மிகச்சிறந்த அனுபவமாக மாறியுள்ளது” எனத் தெரிவித்துள்ளார்.
கிரிக்கெட் மற்றும் விளையாட்டு உலகின் (Sports News in Tamil) நிமிட நிமிட தமிழ் செய்தி அப்டேட்களுக்காக ஏஷ்யாநெட் தமிழ்-ஐ பின்பற்றுங்கள். IPL லைவ் உட்பட டீம் இந்தியாவின் பிரேக்கிங் நியூஸ் (Cricket News in Tamil), சிறப்பு ரிப்போர்ட்கள் மற்றும் நேரலைகளுடன் முழுமையான தகவல்கள் உங்களுக்கு ஒரே கிளிக்கில் கிடைக்கும். ஏஷ்யாநெட் தமிழ் அதிகாரப்பூர்வ ஆப்பைப் டவுன்லோடு செய்து அனைத்து அப்டேட்களையும் பெறுங்கள்.