ipl 2022 virat kohli: கோலியின் மோசமான ஃபார்முக்கு காரணமென்ன? பீட்டர்ஸன் கூறியதற்கு நடிகர் சுனில் ஷெட்டி பதில்

By Pothy RajFirst Published Apr 25, 2022, 11:19 AM IST
Highlights

ipl 2022 virat kohli :  ஐபிஎல் டி20 தொடரில் ஆர்சிபி வீரர் விராட் கோலி மோசமாக பேட் செய்து வரும் நிலையில் அவரின் ஃபார்ம் குறைவுக்கான காரணத்தை இங்கிலாந்து முன்னாள் கேப்டன் கெவின் பீட்டர்ஸன் விளக்கியுள்ளார். இதற்கு நடிகர் சுனில் ஷெட்டி பதில் அளி்த்துள்ளார்.

ஐபிஎல் டி20 தொடரில் ஆர்சிபி வீரர் விராட் கோலி மோசமாக பேட் செய்து வரும் நிலையில் அவரின் ஃபார்ம் குறைவுக்கான காரணத்தை இங்கிலாந்து முன்னாள் கேப்டன் கெவின் பீட்டர்ஸன் விளக்கியுள்ளார். இதற்கு நடிகர் சுனில் ஷெட்டி பதில் அளி்த்துள்ளார்.

மோசமான ஃபார்ம்

இந்திய அணியின் முன்னாள் கேப்டன் கோலியிடம் இருந்து இந்திய அணியின் கேப்டன் பதவி பறிக்கப்பட்டதோடு அவர் பேட்டிங் ஃபார்மை  மறந்துவிட்டதுபோல் விளையாடி வருகிறார். ஆர்சிபி அணிக்கு கேப்டனாக இருந்து கோப்பையைப் பெற்றுத்தர முடியவில்லை என்பதால்தான் கோலி ராஜினாமா செய்தார். ஒரு வீரராக கூடுதல் பங்களிப்பு செய்வார் என்று எதிர்பார்க்கப்பட்டாலும், பேட்டிங்கிலும் இந்த சீசனில் கோலி சொதப்பி வருகிறார்.

119 ரன்கள்தான்

இந்த ஐபிஎல் சீசனில் ஆர்சிபியில் அணியில் கோலி 8 போட்டிகளில் விளையாடி வெறும் 119 ரன்கள் மட்டுமே சேர்த்துள்ளார், சராசரியாக 17 ரன்கள் சேர்த்துள்ளார். அதிலும் தொடர்ந்து இரு போட்டிகளாக கோல்டன் டக்அவுட்டாகி அணியையும், ரசிகர்களையும் வேதனையில் ஆழ்த்தியுள்ளார்.
லக்னோ சூப்பர் ஜெயின்ட்ஸ் அணிக்கு எதிராகவும், சன்ரைசர்ஸ் அணிக்கு எதிராகவும் கோலி தன்னுடைய முதல் பந்திலேயே விக்கெட்டை பறிகொடுத்து அதிர்ச்சி அளித்தார். கடந்த 2016ம் ஆண்டு ஐபிஎல் சீசனில் ஒவ்வொரு அணிக்கும் சிம்மசொப்னமாக திகழ்ந்த விராட் கோலியின் பேட்டிங் ஃபார்ம் மோசமாக மாறியுள்ளது.

ஓய்வு தேவை

விராட் கோலியின் பேட்டிங் ஃபார்ம் குறித்து பல்வேறு விமர்சனங்கள் எழுந்து வருகின்றன. கோலிக்கு நீண்ட ஓய்வு தேவை என முன்னாள் பயிற்சியாளர் ரவிசாஸ்திரியும் அறிவுறுத்தியுள்ளார். கோலி தொடர்ந்து இதுபோன்று ஆடினால் கிரிக்கெட் மீது வெறுப்பு வந்துவிடும் என்று ரவிசாஸ்திரி தெரிவித்துள்ளார்.

பீட்டர்ஸன் ஆதரவு

இந்நிலையில் கோலிக்கு ஆதரவாகவும், கோலியின் பேட்டிங் ஃபார்ம் குறித்தும் இங்கிலாந்து முன்னாள் கேப்டன் பீட்டர்ஸன் ட்விட்டரில் கருத்துத் தெரிவித்துள்ளார். அதில் “ கோலியின் பேட்டிங் ஃபார்ம் குறித்த உண்மை வேண்டுமா?

ஒவ்வொரு நம்முடைய மிகப்பெரிய போட்டியும் விராட் கோலியைக் கடந்துதான் சென்றுள்ளது. விராட் கோலியால்தான் வென்றுள்ளது. மற்றொரு உண்மை வேண்டுமா? ஒவ்வொரு பேட்ஸ்மேனுக்கும் பேட்டிங்கில் ஃபார்ம் குறைவது இயல்புதான், இது இயற்கையாக ஏற்படுவது. ஆனால், மீண்டும் விராட் கோலி மிகப்பெரிய தளத்துக்கு மீண்டுவருவார்” எனத் தெரிவித்துள்ளார்.

பீட்டர்ஸன் நிலைமை

கெவின் பீட்டர்ஸன் இங்கிலாந்து அணிக்கு கேப்டனாக இருந்து, ஆஷஸ் தொடரை வழிநடத்தினார். ஆஸ்திரேலியாவுக்கு எதிராக அந்தத் தொடரில் அதிகமாக ரன்களை பீட்டர்ஸன் குவித்தபோதிலும் இங்கிலாந்து அணி தொடரை இழந்தது. இந்தத் தோல்வியோடு பீட்டர்ஸன் கிரிக்கெட் வாழ்க்கையும் அஸ்தமித்தது. பீட்டர்ஸனை கேப்டன்ஷிப்பில் மோசம் என்ற முத்திரையோடு இங்கிலாந்து அணியிலிருந்தே நீக்கப்பட்டார். அதுபோன்ற நிலைமைதான் கோலிக்கு ஏற்பட்டுள்ளது.

பீட்டர்ஸன் கருத்துக்கு பாலிவுட்நடிகர் சுனில் ஷெட்டி ட்விட்டரில் பதில் அளித்துள்ளார். அதில் “ ஒரு ஜாம்பவான் மற்றொரு ஜாம்பவானைப் பற்றிப் பேசுகிறார். மதிக்கிறேன்” எனத் தெரிவித்துள்ளார்
 

click me!