ms dhoni ipl: பீர் வியாபாரம், இப்போது கோழி பிஸ்னஸ் ! 2 ஆயிரம் கடக்நாத் கோழிகளை பண்ணைக்கு ஆர்டர் செய்த தோனி

By Pothy RajFirst Published Apr 25, 2022, 10:34 AM IST
Highlights

ms dhoni ipl : பீர் வியாபாரத்தில் ஈடுபட்டுள்ள சிஎஸ்கே முன்னாள் கேப்டன் தோனி, இப்போது கோழி பண்ணை வியாபாரத்திலும் காலூன்றத் தொடங்கியுள்ளார். மத்தியப்பிரதேசத்திலிருந்து உயர்ரக கடக்நாத் கோழிகளை ராஞ்சிக்கு ஆர்டர் செய்து வரவழைத்துள்ளார்.

பீர் வியாபாரத்தில் ஈடுபட்டுள்ள சிஎஸ்கே முன்னாள் கேப்டன் தோனி, இப்போது கோழி பண்ணை வியாபாரத்திலும் காலூன்றத் தொடங்கியுள்ளார். மத்தியப்பிரதேசத்திலிருந்து உயர்ரக கடக்நாத் கோழிகளை ராஞ்சிக்கு ஆர்டர் செய்து வரவழைத்துள்ளார்.

7 இங்க் ப்ரீவ்ஸ் என்ற பீர் நிறுவனத்தின் பங்குதாரராகவும், தூதுவராகவும் தோனி இருந்து வருகிறார். இந்த நிறுவனம், காப்டர் 7 என்ற பெயரில் பீர் ஒன்றை அறிமுகம் செய்து மும்பை, பெங்களூரு, கோவா மற்றும் ராஞ்சி உள்ளிட்ட நகரங்களில் விற்பனைக்குவந்துள்ளது.

பீர் வியாபாரத்தில் முதலீடு செய்திருந்த மகேந்திர சிங் தோனி, கோழிப்பண்ணைத் தொழிலிலும் முதலீடு செய்துள்ளார். ரஞ்சியில் கூட்டுறவுஅமைப்புகளுடன் சேர்ந்து தோனி கோழிப் பண்ணை வளர்ப்பில் ஈடுபட்டுள்ளார். 

தனது பண்ணைக்காக மத்தியப்பிரதேசம் ஜாபுவா மாவட்டத்திலிருந்து அதிகமான புரோட்டீன் சத்து நிறைந்த, உயர்ரக கடக்நாத் கோழிவகைகளை தோனி இறக்குமதி செய்துள்ளார். இதற்காக மத்தியப்பிரதேசத்திலிருந்து 2ஆயிரம் கடக்நாத் கோழிகளை தனது பண்ணைக்கு தோனி வரவழைத்துள்ளார். 

மத்தியப்பிரதேசத்தைச் சேர்ந்த கடக்நாத் கோழி வகைகள் நாட்டில் வேறு எங்கும் இல்லை என்பதால் இந்த கோழி வகைகளுக்கு 2018ம் ஆண்டு புவிசார் குறியீடு கிடைத்தது. சத்தீஸ்கர் மாநிலம் இந்த கடக்நாத் கோழி தங்களின் பாரம்பரியம் என்று சட்டப்போராட்டம் நடத்திய நிலையில் அதில் மத்தியப்பிரதேசம் மாநிலம் வென்றது புவிசார் குறியீடு பெற்றது.

ஜாபுவா மாவட்ட ஆட்சியர் சோமேஷ் மிஸ்ரா கூறுகையில் “ 2 ஆயிரம் கடக்நாத் கோழிகள் உள்ளூர் பண்ணைக்கு கொண்டு செல்லப்பட்டு அங்கிருந்து பரிசோதனைகள் முடிந்தபின் ராஞ்சிக்கு கொண்டு செல்லப்படுகிறது. கடக்நாத் கோழி வகைகளை தோனி போன்ற நட்சத்திர வீரர்கள் வாங்கி வளர்ப்பது வரவேற்கக்கூடியது. யார் வேண்டுமானாலும் கடக்நாத் கோழிகளை ஆன்லைனில் ஆர்டர் செய்யலாம், இங்குள்ள பழங்குடிமக்கள்தான் இந்த கோழிகளை வளர்த்து வருகிறார்கள்” எனத் தெரிவித்தார்

ஜாபுவா விவசாயிகள் கூட்டமைப்பின் தலைவர் தோமர் கூறுகையில்  “ இதற்குமுன்புகூட தோனி கடக்நாத் கோழிகளுக்கு ஆர்டர் செய்துள்ளார். ஆனால், அந்த நேரத்தில் பறவைக்காய்ச்சல் பரவியதால் அனுப்பமுடியவில்லை. கூட்டுறவை சொசைட்டி நடத்தும் வினுத் மேதா மூலம் தோனி கோழிகளுக்கு ஆர்டர் செய்துள்ளரார். ஜாபாவா மாவட்டம், ருன்டிபடா கிராமத்தில்தான் இந்த கோழிகள் கிடைக்கும்” எனத் தெரிவித்தார்

click me!