WFI தலைவர் மீதான பாலியல் குற்றச்சாட்டை விசாரிக்க 7 பேர் அடங்கிய கமிட்டி அமைப்பு..! IOA நடவடிக்கை

By karthikeyan VFirst Published Jan 20, 2023, 9:06 PM IST
Highlights

இந்திய மல்யுத்த சம்மேளன தலைவர் பிரிஜ் பூஷன் சரண் சிங் மீதான மல்யுத்த வீராங்கனைகளின் பாலியல் குற்றச்சாட்டை விசாரிக்க, 7 பேர் அடங்கிய கமிட்டியை அமைத்துள்ளது இந்திய ஒலிம்பிக்  சங்கம். 
 

இந்திய மல்யுத்த வீராங்கனைகளை பயிற்சியாளர்கள் மற்றும் மல்யுத்த சம்மேளன தலைவர் உள்ளிட்ட நிர்வாகிகள் பாலியல் துன்புறுத்தல் செய்வதாக குற்றம்சாட்டி மல்யுத்த வீரர், வீராங்கனைகள் டெல்லி ஜந்தர் மந்தரில் போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர்.

மல்யுத்த வீராங்கனைகள் மீதான பாலியல் துன்புறுத்தலுக்கு எதிராக வினேஷ் போகத், பஜ்ரங் புனியா, சாக்‌ஷி மாலிக், அன்ஷு மாலிக் உள்ளிட்ட 30 மல்யுத்த வீரர், வீராங்கனைகள் டெல்லி ஜந்தர் மந்தரில் போராட்டத்தில் ஈடுபட்டுவருகின்றனர். புதன்கிழமை தொடங்கிய இந்த போராட்டம் 3வது நாளாக தொடர்ந்துவருகிறது.

காங்கிரஸ் கட்சியின் திட்டமிட்ட சதிதான் மல்யுத்த வீரர் போராட்டம்! ராஜினாமா செய்யமுடியாது- WFIதலைவர் திட்டவட்டம்

இந்திய மல்யுத்த சம்மேளன தலைவராக இருக்கும் பிரிஜ் பூஷன் சரண் சிங், பாஜக எம்பி ஆவார். இவர் மீதுதான் குற்றச்சாட்டுகள் முன்வைக்கப்படுகின்றன. போராட்டத்தில் ஈடுபட்டுள்ள மல்யுத்த வீரர்கள், வீராங்கனைகள் நேற்றிரவு மத்திய விளையாட்டுத்துறை அமைச்சர் அனுராக் தாகூரை சந்தித்து நான்கரை மணி நேரம் பேச்சுவார்த்தை நடத்தினர். அதில் முடிவு எட்டப்படாததால், இன்று காலை 11.45 மணியிலிருந்து மீண்டும் போராட்டத்தை தொடர்ந்தனர்.

இதற்கிடையே, இந்த போராட்டம் காங்கிரஸ் கட்சியின் திட்டமிட்ட சதி என்றும், இந்திய மல்யுத்த சம்மேளன தலைவர் பதவியை ராஜினாமா செய்யமாட்டேன் என்றும் பிரிஜ் பூஷன் சரண் சிங் திட்டவட்டமாக தெரிவித்திருந்தார்.

இன்று மாலை மீண்டும் அனுராக் தாகூரை சந்தித்து போராட்டத்தில் ஈடுபட்டுள்ள மல்யுத்த வீரர், வீராங்கனைகள் பேச்சுவார்த்தை நடத்தினர். மல்யுத்த சம்மேளன தலைவர் பிரிஜ் பூஷன் சரண் சிங்கிற்கு எதிரான பாலியல் புகார் குறித்து விசாரணை நடத்தி, அதில் உண்மை இருக்கும்பட்சத்தில் அவர் மீது நடவடிக்கை எடுக்கப்படும் என அரசு தரப்பில் உறுதியளிக்கப்பட்ட நிலையில், இதுதொடர்பாக விசாரிக்க 7 பேர் அடங்கிய கமிட்டி அமைக்கப்பட்டுள்ளது. 

என்ன கொடுமைலாம் நடந்தது..? மல்யுத்த வீராங்கனையின் அரை மணி நேர கதறல் ஆடியோ ஆதாரம் இருக்கு - வினேஷ் போகத்

இதுதொடர்பாக விசாரிக்க 7 பேர் அடங்கிய விசாரணை கமிட்டியை இந்திய ஒலிம்பிக் சங்கம் அமைத்துள்ளது. இந்த கமிட்டியில் மேரி கோம், டோலா பானர்ஜி, அலக்னந்தா அசோக், யோகேஷ்வர் தத், சஹாதேவ் யாதவ் ஆகியோர் இடம்பெற்றுள்ளனர். மல்யுத்த வீராங்கனைகளின் பாலியல் குற்றச்சாட்டுகள் குறித்து இந்த கமிட்டி ஆய்வு செய்து அறிக்கை சமர்ப்பிக்கும். அதனடிப்படையில் நடவடிக்கை எடுக்கப்படும்.
 

click me!