
ஆசியக் கோப்பை மகளிர் டி-20 கிரிக்கெட் போட்டியில் இரண்டாவது வெற்றியை பெற்று அசத்தியது இந்திய மகளிர் அணி.
ஆசியக் கோப்பை மகளிர் டி-20 கிரிக்கெட் போட்டி கோலாலம்பூரில் நடந்து வருகிறது.
ஆறு நாடுகள் கலந்து கொள்ளும் இப்போட்டியில் ஏற்கெனவே முதல் ஆட்டத்தில் மலேசியாவை 142 ஓட்டங்கள் வித்தியாசத்தில் இந்தியா வென்று அசத்தியது.
இந்த நிலையில் நேற்று இரண்டாவது ஆட்டத்தில் இந்தியாவும் - தாய்லாந்தும் மோதின. முதலில் ஆடிய இந்திய மகளிரணி 20 ஓவர்களில் 4 விக்கெட்டை இழந்து 132 ஓட்டங்களை எடுத்தது. ஹர்மன்பிரீத் கெளர் 27 ஓட்டங்கள், ஸ்மிருதி மந்தானா 22 ஓட்டங்கள் குவித்தனர்.
பின்னர் ஆடிய தாய்லாந்து அணி 8 விக்கெட்டை இழந்து 66 ஓட்டங்களை மட்டுமே எடுத்து தோல்வியைத் தழுவியது. அந்த அணியின் நட்டாயா 21 ஓட்டங்களை குவித்தார்.
இந்திய அணியின் ஹர்மன்பிரீத் கெளர் 3 விக்கெட்டையும், தீப்தி சர்மா 2 விக்கெட்டை வீழ்த்தினர்.
இறுதியில் இந்தியா 66 ஓட்டங்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது அசத்தியது.
கிரிக்கெட் மற்றும் விளையாட்டு உலகின் (Sports News in Tamil) நிமிட நிமிட தமிழ் செய்தி அப்டேட்களுக்காக ஏஷ்யாநெட் தமிழ்-ஐ பின்பற்றுங்கள். IPL லைவ் உட்பட டீம் இந்தியாவின் பிரேக்கிங் நியூஸ் (Cricket News in Tamil), சிறப்பு ரிப்போர்ட்கள் மற்றும் நேரலைகளுடன் முழுமையான தகவல்கள் உங்களுக்கு ஒரே கிளிக்கில் கிடைக்கும். ஏஷ்யாநெட் தமிழ் அதிகாரப்பூர்வ ஆப்பைப் டவுன்லோடு செய்து அனைத்து அப்டேட்களையும் பெறுங்கள்.