பிரெஞ்ச் ஓபன் டென்னிஸ்: அசத்தல் ஆட்டத்தால் காலிறுதிக்கு தகுதி பெற்ற வீரர்கள்  இவர்கள்தான்...

 
Published : Jun 05, 2018, 10:33 AM ISTUpdated : Sep 19, 2018, 02:29 AM IST
பிரெஞ்ச் ஓபன் டென்னிஸ்: அசத்தல் ஆட்டத்தால் காலிறுதிக்கு தகுதி பெற்ற வீரர்கள்  இவர்கள்தான்...

சுருக்கம்

French Open Tennis These are the players who qualified for the quarter-finals.

பிரெஞ்ச் ஓபன் டென்னிஸ் போட்டி ஆடவர் பிரிவில் ரஃபேல் நடால், ஜோகோவிச், ஷரபோவா ஹலேப் உள்ளிட்டோர் காலிறுதிக்கு தகுதி பெற்றனர்.

பிரெஞ்ச் ஓபன் டென்னிஸ் போட்டியின் ஆடவர் ஒற்றையர் பிரிவில் முதல்நிலை வீரர் நடால் மற்றும் ஜெர்மனியின் மார்டெரர் மோதினர். இதில், 6-3, 6-2, 6-6, 7-6 என்ற செட் கணக்கில் மார்டெரரை வீழ்த்தி காலிறுதிக்கு தகுதி பெற்றார் நடால். 

அதேபோன்று, டீகோ கிரைஸ்மேன் 1-6, 2-6, 7-5, 7-6, 6-2 என்ற செட் கணக்கில் கெவின் ஆண்டர்சனை வென்றார்.

மற்றொரு ஆட்டத்தில் செர்பியான் ஜோகோவிச் 6-3, 6-4, 6-2 என்ற நேர் செட்களில் ஸ்பெயினின் வெர்டாஸ்கோவை வீழ்த்தி காலிறுதிக்கு முன்னேறினார்.

அதேபோன்று, மகளிர் பிரிவில் 4-ஆம் சுற்று ஆட்டத்தில் ஷரபோவா - செரீனா வில்லியம்ஸ் மோதினர். இதில், காயம் காரணமாக செரீனா வெளியேறினார். இதனால் ஷரபோவா காலிறுதிக்கு தகுதி பெற்றார்.

உலகின் முதல்நிலை வீராங்கனை சீமோனோ ஹலேப் 6-2, 6-1 என்ற செட் கணக்கில் பெல்ஜியத்தின் எல்சி மெர்டன்ஸை வீழ்த்தி காலிறுதிக்கு முன்னேறினார்.

PREV

கிரிக்கெட் மற்றும் விளையாட்டு உலகின் (Sports News in Tamil) நிமிட நிமிட தமிழ் செய்தி அப்டேட்களுக்காக ஏஷ்யாநெட் தமிழ்-ஐ பின்பற்றுங்கள். IPL லைவ் உட்பட டீம் இந்தியாவின் பிரேக்கிங் நியூஸ் (Cricket News in Tamil), சிறப்பு ரிப்போர்ட்கள் மற்றும் நேரலைகளுடன் முழுமையான தகவல்கள் உங்களுக்கு ஒரே கிளிக்கில் கிடைக்கும். ஏஷ்யாநெட் தமிழ் அதிகாரப்பூர்வ ஆப்பைப் டவுன்லோடு செய்து அனைத்து அப்டேட்களையும் பெறுங்கள்.

click me!

Recommended Stories

T20 World Cup: இந்திய அணியின் துணை கேப்டனை தூக்கி எறிந்தது ஏன்..? ரகசியம் உடைத்த தேர்வுக்குழு
T20 உலகக்கோப்பை 2026: இந்திய அணி அறிவிப்பு.. சஞ்சு இன், கில் அவுட்.. BCCI அதிரடி