துப்பாக்கி சுடுதல் ஸ்கீட் பிரிவில் வெண்கலப் பதக்க வாய்ப்பை இழந்து வெளியேறிய மகேஷ்வரி சவுகான் – அனந்த்ஜீத் சிங்

By Rsiva kumar  |  First Published Aug 5, 2024, 9:16 PM IST

துப்பாக்கி சுடுதல் ஸ்கீட் கலப்பு இரட்டையர் பிரிவில் இந்திய ஜோடியான மகேஷ்வரி சவுகான் மற்றும் அனந்த்ஜீத் சிங் நருகா ஜோடி 4ஆவது இடம் பிடித்து வெண்கலப் பதக்கம் வெல்லும் வாய்ப்பை இழந்து வெளியேறியுள்ளது.


பாரிஸ் ஒலிம்பிக் 2024 தொடர் தற்போது இறுதி கட்டத்தை நெருங்கி வருகிறது. இதுவரையில் 10 நாட்கள் முடிந்த நிலையில் இந்தியா 3 வெண்கலப் பதக்கம் மட்டுமே கைப்பற்றியுள்ளது. இதில், துப்பாக்கி சுடுதல் 10மீ ஏர் பிஸ்டல் போட்டியில் மகளிருக்கான ஒற்றையர் பிரிவில் இந்திய வீராங்கனை மனு பாக்கர் வெண்கலப் பதக்கம் வென்றார். இதே போன்று கலப்பு இரட்டையர் பிரிவில் மனு பாக்கர் மற்றும் சரப்ஜோத் சிங் ஜோடி வெண்கலப் பதக்கம் வென்றது.

Paris 2024:கடைசியில் லக்‌ஷயா சென் அதிர்ச்சி தோல்வி – பேட்மிண்டனில் ஒரு பதக்கம் கூட இல்லாமல் வெளியேறிய இந்தியா!

Latest Videos

undefined

கடைசியாக ஆண்களுக்கான 25மீ ஏர் ரைபிள் 3பி பிரிவில் இந்தியாவின் ஸ்வப்னில் குசலே வெண்கலப் பதக்கம் வென்றார். இவர்கள் தவிர ஆண்களுக்கான துப்பாக்கி சுடுதல் போட்டியில் மற்ற அனைவரும் தோல்வி அடைந்து வெளியேறினர். இதே போன்று மகளிருக்கான துப்பாக்கி சுடுதல் போட்டியிலும் மனு பாக்கர் தவிர மற்ற அனைவரும் தோல்வி அடைந்து வெளியேறினர்.

Paris Olympics 2024: டேபிள் டென்னிஸ் பிரிவில் இந்திய மகளிர் அணி காலிறுதிப் போட்டிக்கு முன்னேற்றம்!

மேலும், கலப்பு இரட்டையர் பிரிவிலும் மனு பாக்கர் தவிர மற்றும் சரப்ஜோத் சிங் ஜோடி தவிர மற்றவர்கள் தோல்வி அடைந்து வெளியேறினர். இந்த நிலையில் தான் துப்பாக்கி சுடுதல் கலப்பு இரட்டையர் ஸ்கீட் பிரிவில் இந்தியாவின் மகேஷ்வரி சவுகான் மற்றும் அனந்த்ஜீத் சிங் நருகா ஜோடி தகுதிச் சுற்று போட்டியில் 146 புள்ளிகள் பெற்று 4ஆவது இடம் பிடித்து வெண்கலப் பதக்கத்திற்கான போட்டியில் பங்கேற்றது.

இந்தப் போட்டியில் சீனாவின் லியூ ஜின்லின் மற்றும் ஜியாங் ஒயிட்டிங் ஜோடியை எதிர்கொண்டது. இந்தப் போட்டியில் இந்திய ஜோடி 43-44 என்ற புள்ளிக் கணக்கில் தோல்வி அடைந்து வெளியேறியது. இதன் மூலமாக இந்தியா துப்பாக்கி சுடுதல் போட்டியில் 3 வெண்கலப் பதக்கத்துடன் வெளியேறியுள்ளது.

முதல் முறையாக டிராபியை தட்டி தூக்கிய திண்டுக்கல் டிராகன்ஸ் – அனுபவத்தை பகிர்ந்த அஸ்வின்!

click me!