பாரிஸ் ஒலிம்பிக் 2024 தொடரின் இன்றைய 10ஆவது நாளில் நடைபெற்ற பேட்மிண்டன் ஒற்றையர் பிரிவு இறுதிப் போட்டியில் இந்திய வீரர் லக்ஷயா சென் தோல்வி அடைந்து வெண்கலப் பதக்கம் கைப்பற்றும் வாய்ப்பை இழந்து வெளியேறியுள்ளார்.
பிரான்ஸ் தலைநகர் பாரிஸில் 33ஆவது ஒலிம்பிக் தொடர் விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது. இதில், இதுவரையில் துப்பாக்கி சுடுதல் போட்டியில் மட்டும் 3 பதக்கங்களை கைப்பற்றியுள்ளது. இந்த தொடரில் இந்தியா போட்டியிட்ட வில்வித்தை, தடகளம், ஜூடோ, பேட்மிண்டன், டென்னிஸ், துப்பாக்கி சுடுதல், படகு போட்டி, டேபிள் டென்னிஸ், ஹாக்கி, மல்யுத்தம், பளூதூக்குதல், குத்துச்சண்டை, கோல்ஃப், நீச்சல், ரோவிங், குதிரையேற்றம், படகு போட்டி என்று 16 விளையாட்டுகளில் பங்கேற்கிறது.
Paris Olympics 2024: டேபிள் டென்னிஸ் பிரிவில் இந்திய மகளிர் அணி காலிறுதிப் போட்டிக்கு முன்னேற்றம்!
இதில், இதுவரையில் நடைபெற்ற போட்டிகளின் படி இந்தியா குதிரையேற்றம், வில்வித்தை, டென்னிஸ், நீச்சல், ரோவிங், குத்துச்சண்டை ஆகிய விளையாட்டுகளில் பதக்கம் இல்லாமல் வெளியேறியது. இந்த நிலையில் தான் பேட்மிண்டன் போட்டியிலும் கிட்டத்தட்ட இந்தியா வெளியேறிவிட்டது. கடைசி கட்டமாக ஆண்களுக்கான ஒற்றையர் பிரிவு இறுதிப் போட்டியில் இந்திய வீரர் லக்ஷயா சென் தங்கப் பதக்கம் வெல்லும் வாய்ப்பை இழந்து வெண்கலப் பதக்கத்திற்கான போட்டியில் பங்கேற்றார்.
பாரிஸ் 2024 ஒலிம்பிக் தொடரின் 10ஆவது நாளான இன்று நடைபெற்ற பேட்மிண்டன் ஒற்றையர் பிரிவு இறுதிப் போட்டியில் மலேசியா நாட்டைச் சேர்ந்த லீ ஜீ ஜியாவை எதிர்கொண்டார். மாலை 6 மணிக்கு தொடங்கிய இந்தப் போட்டியில் ஆரம்பம் முதலே சிறப்பாக விளையாடிய சென் முதல் செட்டை 21-13 என்று கைப்பற்றினார்.
முதல் முறையாக டிராபியை தட்டி தூக்கிய திண்டுக்கல் டிராகன்ஸ் – அனுபவத்தை பகிர்ந்த அஸ்வின்!
இதே போன்று 2ஆவது செட்டை சிறப்பாக தொடங்கிய சென் கடைசியில் 16-21 என்று இழந்தார். கடைசியாக 3ஆவது செட்டை 11-12 என்று இழந்து வெண்கலப் பதக்கம் வெல்லும் வாய்ப்பை இழந்து வெளியேறியுள்ளார்.