பாரிஸ் ஒலிம்பிக் 2024 தொடரின் 2ஆவது நாளான இன்று நடைபெற்ற 10மீ ஏர் பிஸ்டல் இறுதிப் போட்டியில் இந்திய வீராங்கனை மனு பாக்கர் 3ஆவது இடம் பிடித்து இந்தியாவிற்கு வெண்கலப் பதக்கம் வென்று கொடுத்தார்.
பாரிஸில் 33ஆவது ஒலிம்பிக் தொடரின் தொடக்க விழா பிரம்மாண்டமாக தொடங்கி போட்டிகள் விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது. இதில் இந்திய வீரர்களான பிவி சிந்து மற்றும் சரத் கமல் இருவரும் இந்திய கொடியை ஏந்தி அணிவகுப்பு நடத்தினர். இதையடுத்து பாரிஸ் ஒலிம்பிக்கில் போட்டிகள் நடைபெற்றன. முதல் நாளில் துப்பாக்கி சுடுதல், ரோவிங் (துடுப்பு படகு), டென்னிஸ், டேபிள் டென்னிஸ், பேட்மிண்டன், ஹாக்கி போட்டிகள் நடைபெற்றன. இதில் ரோவிங் போட்டியில் இந்திய வீரர் பால்ராஜ் பன்வார் 4ஆவது இடம் பிடித்து காலிறுதிப் போட்டிக்கு தகுதி பெறும் வாய்ப்பை இழந்தார். எனினும், அவருக்கு 2ஆவது நாளான இன்று கிடைத்த வாய்ப்பில் வெற்றி பெற்று காலிறுதிப் போட்டிக்கு தகுதி பெற்றார்.
undefined
இதே போன்று, துப்பாக்கி சுடுதல் 10 மீ ஏர் ரைபிள் கலப்பு இரட்டையர் பிரிவில் இந்தியாவின் ரமீதா ஜிண்டால் மற்றும் அர்ஜூன் பபுதா ஜோடி 6ஆவது இடம் பிடித்து அடுத்த சுற்றுக்கு தகுதி பெறும் வாய்ப்பை இழந்து வெளியேறியது. தமிழகத்தைச் சேர்ந்த இளவேனில் வளரிவன் மற்றும் சஞ்சீவ் சிங் ஜோடியானது 12ஆவது இடம் பிடித்து அடுத்த சுற்றுக்கு தகுதி பெறும் வாய்ப்பை இழந்து வெளியேறியது.
இதையடுத்து ஆண்களுக்கான 10 மீ ஏர் பிஸ்டல் துப்பாக்கி சுடுதல் போட்டியில் இந்தியா சார்பாக சரப்ஜோத் சிங் மற்றும் அர்ஜூ சிங் சீமா இருவரும் பங்கேற்றனர். இதில் தகுதிச் சுற்று போட்டியில் முதல் 8 இடங்களை பிடிக்கும் வீரர்கள் இறுதிப் போட்டிக்கு முன்னேறும் நிலை இருந்தது. இதில் சரப்ஜோத் சிங் 577 புள்ளிகளுடன் 9ஆவது இடம் பிடித்து இறுதிப் போட்டிக்கு முன்னேறும் வாய்ப்பை இழந்து வெளியேறினார்.
இதே போன்று அர்ஜூன் சிங் சீமா 574 புள்ளிகளுடன் 18ஆவது இடம் பிடித்து இறுதிப் போட்டிக்கு முன்னேறும் வாய்ப்பை இழந்து வெளியேறினார். இதனைத் தொடர்ந்து மகளிருக்கான 10 மீ ஏர் பிஸ்டல் துப்பாக்கி சுடுதல் போட்டியில் இந்திய வீராங்கனைகள் மனு பாக்கர் மற்றும் ரிதம் சங்வான் இருவரும் களமிறங்கினர். இதில், சங்வான் 573 புள்ளிகளுடன் 15ஆவது இடம் பிடித்து வெளியேறினார். ஆனால், ஆரம்பம் முதலே முன்னிலையில் இருந்து வந்த மனு பாக்கர் 580 புள்ளிகளுடன் 3ஆவது இடம் பிடித்து இறுதிப் போட்டிக்கு முன்னேறினார்.
பிளே ஆப் உறுதி செய்த அணிகள் – ஒருவழியாக உள்ளே நுழைந்த அஸ்வினின் திருப்பூர் தமிழன்ஸ்!
இந்த நிலையில் தான் பாரிஸ் ஒலிம்பிக் தொடரின் 2ஆவது நாள் போட்டிகள் தற்போது நடைபெற்று வருகின்றன. இதில் துப்பாக்கி சுடுதல், பேட்மிண்டன், டேபிள் டென்னிஸ், நீச்சல், டென்னிஸ், குத்துச்சண்டை என்று பல போட்டிகள் நடைபெற்று வருகிறது. இதில், பிற்பகல் 3.30 மணிக்கு தொடங்கிய மகளிருக்கான 10மீ ஏர் பிஸ்டல் இறுதிப் போட்டியில் இந்திய வீராங்கனை மனு பாக்கர் 3ஆவது இடம் பிடித்து இந்தியாவிற்கு முதல் பதக்கத்தை பெற்றுக் கொடுத்துள்ளார்.
துப்பாக்கி சுடுதல் பிரிவில் இந்தியா 12 ஆண்டுகளுக்கு பிறகு முதல் முறையாக பதக்கம் கைப்பற்றியுள்ளது. முதலில் கொரியா ஷாட் போடும் நிகழ்வை தொடங்கியது. இதில், கொரிய வீராங்கனை முதல் ஷாட்டில் 10.7 புள்ளிகள் பெற்றார். மனு பாக்கர் 10.6 புள்ளிகள் பெற்றார். முதல் சுற்றில் பாக்கர் மொத்தமாக 50.4 புள்ளிகள் (10.6, 10.2, 9.5, 10.5, 9.6) பெற்றார். கொரிய வீராங்கனை ஓ யே ஜின் 52.2 புள்ளிகள் பெற்று முதலிடம் பிடித்தார்.
இதே போன்று 2 ஆவது சுற்று போட்டியில் 3ஆவது இடம் பிடித்தார். இதில் 10 ஷாட்டுகள் கொண்ட இந்த சுற்றில் பாகர் 100.3 புள்ளிகள் பெற்றார். தொடர்ந்து நடந்த 3 எலிமினேஷனுக்கு பிறகு பாகர் 3ஆவது இடத்தில் இருந்தார். கடைசியாக 5ஆவது எலிமினேஷன் வரையில் 3ஆவது இடம் பிடித்திருந்து 221.7 புள்ளிகளுடன் இந்தியாவிற்கு வெண்கலப் பதக்கத்தை உறுதி செய்தார். 0.1 புள்ளிகள் வித்தியாசத்தில் தங்கப் பதக்கம் கைப்பற்றும் வாய்ப்பை இழந்தார்.
இதற்கு முன்னதாக தகுதிசுற்று போட்டியில் 3ஆவது இடம் பிடித்து இறுதிப் போட்டிக்கு சென்றார். கடந்த 2004 ஆம் ஆண்டு துப்பாக்கி சுடுதல் தனிநபர் போட்டியில் சுமா ஷிரூர் இறுதிப் போட்டிக்கு சென்றார். 20 ஆண்டுகளுக்கு பிறகு இறுதிப் போட்டிக்கு சென்ற முதல் இந்திய பெண்மணி என்ற சாதனையை படைத்தார். 12 ஆண்டுகளுக்கு பிறகு துப்பாக்கி சுடுதலில் இந்தியா வெண்கலம் பதக்கம் வென்றுள்ளது. இதற்கு முன்னதாக, ககன் நரங் மற்றும் விஜய் லண்டனில் நடைபெற்ற போட்டியில் பதக்கம் வென்றிருந்தனர் என்பது குறிப்பிடத்தக்கது.
Paris Olympics 2024 India Schedule – இந்தியா விளையாடும் போட்டிகள் அட்டவணை 2ஆவது நாள்!