ஜடேஜாவிற்கு பிறகு டீமுக்கு கிடைத்த பொக்கிஷம்: 1.2 ஓவரில் 3 விக்கெட் எடுத்து ஆல் ரவுண்டராக காட்டிய ரியான் பராக்

By Rsiva kumar  |  First Published Jul 28, 2024, 1:42 PM IST

இலங்கைக்கு எதிரான முதல் டி20 போட்டியில் இந்திய வீரரான ரியான் பராக் 1.2 ஓவர்கள் வீசி 3 விக்கெட் எடுத்து தன்னை ஒரு சிறந்த ஆல் ரவுண்டராக காட்டிக் கொண்டுள்ளார்.


இந்தியா மற்றும் இலங்கை அணிகளுக்கு இடையிலான முதல் டி20 போட்டி நேற்று நடைபெற்றது. இதில், முதலில் பேட்டிங் செய்த இந்திய அணிக்கு யஷஸ்வி ஜெய்ஸ்வால் மற்றும் சுப்மன் கில் இருவரும் நல்ல தொடக்கம் கொடுத்தனர். இதையடுத்து சூர்யகுமார் யாதவ்வின் அதிரடியான அரைசதம் மற்றும் ரிஷப் பண்ட்டின் சிறப்பான பேட்டிங்கால் இந்தியா 20 ஓவர்களில் 7 விக்கெட்டுகளை இழந்து 213 ரன்கள் குவித்தது.

பிளே ஆப் உறுதி செய்த அணிகள் – ஒருவழியாக உள்ளே நுழைந்த அஸ்வினின் திருப்பூர் தமிழன்ஸ்!

Latest Videos

undefined

பின்னர் கடின இலக்கை துரத்திய இலங்கை அணிக்கு பதும் நிசாங்கா நல்ல தொடக்கம் அமைத்துக் கொடுத்தார். அதிரடியாக விளையாடிய நிசாங்கா 79 ரன்கள் குவித்து ஆட்டமிழந்தார். இதில், 7 பவுண்டரி, 4 சிக்ஸர் அடங்கும். இதே போன்று குசால் மெண்டிஸ் 45 ரன்கள் எடுத்து ஆட்டமிழந்தார். ஒரு கட்டத்தில் நிசாங்கா மற்றும் பெரேரா இருவரும் விளையாடியதைப் பார்க்கையில் இலங்கை ஜெயித்துவிடும் என்று எண்ணத் தோன்றியது.

ஆனால், அர்ஷ்தீப் சிங் மற்றும் அக்‌ஷர் படேல் இருவரும் இந்த ஜோடியை பிரித்தனர். அதன் பிறகு வந்த குசால் பெரேரா 20 ரன்னிலும் கமிந்து மெண்டிஸ் 12 ரன்னிலும் ஆட்டமிழந்து வெளியேறினர். அடுத்து வந்த கேப்டன் சரித் அசலங்கா 0, தசுன் சனாகா 0, வணிந்து ஹசரங்கா 2, மகீஷ் தீக்‌ஷனா 2, மதீஷா பதிரனா 6, தில்ஷன் மதுஷங்கா 0 என்று வரிசையாக சொற்ப ரன்களில் ஆட்டமிழந்து வெளியேறினர். இறுதியாக இலங்கை 19.2 ஓவர்களில் அனைத்து விக்கெட்டுகளையும் இழந்து 170 ரன்கள் மட்டுமே எடுத்து 43 ரன்கள் வித்தியாசத்தில் தோல்வியை தழுவியது.

Paris Olympics 2024 India Schedule – இந்தியா விளையாடும் போட்டிகள் அட்டவணை 2ஆவது நாள்!

இந்திய அணியைப் பொறுத்த வரையில் அர்ஷ்தீப் சிங், அக்‌ஷர் படேல் தலா 2 விக்கெட்டுகள் கைப்பற்றினர். முகமது சிராஜ் மற்றும் ரவி பிஷ்னோய் தலா ஒரு விக்கெட்டுகள் கைப்பற்றினர். இறுதியாக ரியான் பராக் 3 விக்கெட்டுகள் கைப்பற்றினார். அவருக்கு ஆரம்பத்தில் ஓவர்கள் கொடுக்கப்படவில்லை என்றாலும் டெத் ஓவரில் ஓவர் கொடுக்கப்பட்டது. அதில் அவர் 1.2 ஓவர்கள் வீசி 5 ரன்கள் மட்டுமே கொடுத்து 3 விக்கெட்டுகள் கைப்பற்றினார்.

இந்தப் போட்டியில் இந்திய அணி 2 வேகப்பந்து வீச்சாளர், 2 சுழற்பந்து வீச்சாளர்கள் மற்றும் ஹர்திக் பாண்டியா என்ற ஒரு ஆல் ரவுண்டருடன் களமிறங்கியது. அதோடு 8 பேட்ஸ்மேன்களுடன் களமிறங்கியது. பேட்டிங்கில் பலமாக இருந்தாலும் பவுலிங்கில் சிறப்பாக விளையாடவில்லை. இலங்கையின் தொடக்க வீரர்களை அவுட்டாக்க இந்திய பவுலர்கள் தடுமாறினர்.

யஷஸ்வி ஜெய்ஸ்வால், சூர்யகுமார் யாதவ் அதிரடி ஆட்டம் – இந்தியா பவுண்டரி மழை பொழிந்து 213 ரன்கள் குவிப்பு!

கடைசியில் அணியில் இடம் பெற்றிருந்த ரியான் பராக்கிற்கு வாய்ப்பு கொடுக்கப்பட்டது. தனக்கு கிடைத்த வாய்ப்பை சரியாக பயன்படுத்திக் கொண்ட ரியான் பராக் 1.2 ஓவர்கள் வீசி 5 ரன்கள் கொடுத்து 3 விக்கெட்டுகள் கைப்பற்றினார். இதில் அவர் எடுத்த 3 விக்கெட்டும் கிளீன் போல்டு தான். இதன் மூலமாக அணியில் சிறந்த ஆல் ரவுண்டராக தன்னை காட்டிக் கொண்டுள்ளார். இனி வரும் போட்டிகளில் ரியான் பராக்கிற்கு அடுத்தடுத்து வாய்ப்பு கிடைக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

இந்தப் போட்டியில் சூர்யகுமார் யாதவ் மற்றும் கவுதம் காம்பீர் இணைந்து அணிக்கு வெற்றி தேடிக் கொடுத்துள்ளனர். காம்பீர் கேப்டனாக இருந்த முதல் போட்டியிலேயே அணிக்கு வெற்றி தேடிக் கொடுத்தார். இதே போன்று தலைமை பயிற்சியாளராகவும் தற்போது அணிக்கு வெற்றி தேடிக் கொடுத்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.

யஷஸ்வி ஜெய்ஸ்வால், சூர்யகுமார் யாதவ் அதிரடி ஆட்டம் – இந்தியா பவுண்டரி மழை பொழிந்து 213 ரன்கள் குவிப்பு!

click me!