Paris 2024: பேட்மிண்டன் ஒற்றையர் பிரிவில் இந்தியாவின் பிவி சிந்து வெற்றி பெற்று அடுத்த சுற்றுக்கு முன்னேற்றம்!

By Rsiva kumarFirst Published Jul 28, 2024, 2:48 PM IST
Highlights

பாரிஸ் ஒலிம்பிக் 2024 தொடரில் இன்று நடைபெற்ற பேட்மிண்டன் ஒற்றையர் பிரிவில் இந்தியாவின் பிவி சிந்து வெற்றி பெற்று அடுத்த சுற்றுக்கு முன்னேறியுள்ளார்.

பாரிஸ் ஒலிம்பிக் 2024 தொடரின் 2ஆம் நாளான இன்று பிற்பகல் 12.50 மணிக்கு பேட்மிண்டன் குரூப் ஸ்டேஜ் போட்டி நடைபெற்றது. இதில் மகளிருக்கான ஒற்றையர் பிரிவில் இந்தியாவின் பிவி சிந்து, மாலத்தீவைச் சேர்ந்த பாத்திமத் நபாஹா அப்துல் ரஸ்ஸாக்கை எதிர்கொண்டார். மிகவும் பரபரப்பாக சென்ற இந்த போட்டியில் பிவி சிந்து 21-19 மற்றும் 21-6 என்ற நேர் செட் கணக்கில் வீழ்த்தி அடுத்த சுற்றுக்கு முன்னேறினார்.

ஜடேஜாவிற்கு பிறகு டீமுக்கு கிடைத்த பொக்கிஷம்: 1.2 ஓவரில் 3 விக்கெட் எடுத்து ஆல் ரவுண்டராக காட்டிய ரியான் பராக்

Latest Videos

 முதல் செட்டை 13 நிமிடங்களில் முடித்த சிந்து, 2ஆவது செட்டை வெறும் 14 நிமிடங்களில் முடித்து வெற்றி பெற்று அடுத்த சுற்றுக்கு முன்னேறியுள்ளார். இதுவரையில் இந்திய அணி பதக்க வேட்டையை தொடங்கவில்லை. எனினும், இன்று பிற்பகல் 3.30 மணிக்கு நடைபெறும் மகளிருக்கான துப்பாக்கி சுடுதல் இறுதி போட்டியில் மனு பாக்கர் இந்தியாவிற்கு பதக்கம் வென்று கொடுப்பார் என்று எதிர்பார்க்கப்படுகிறது. செய்ன் நதிக்கரையில் நடைபெற்ற பாரிஸ் 2024 ஒலிம்பிக் தொடரின் தொடக்க விழா அணிவகுப்பு நிகழ்ச்சியில் இந்தியாவிற்காக பேட்மிண்டன் வீராங்கனையான பிவி சிந்து தேசிய கொடி அணிவகுப்பு நிகழ்த்தினார்.

பிளே ஆப் உறுதி செய்த அணிகள் – ஒருவழியாக உள்ளே நுழைந்த அஸ்வினின் திருப்பூர் தமிழன்ஸ்!

click me!