
பாரிஸ் ஒலிம்பிக் தொடரில் இந்தியா 16 விளையாட்டுகளில் பங்கேற்று வருகிறது. இதில், இந்தியா சார்பில் 117 விளையாட்டு வீரர்கள் இடம் பெற்று விளையாடி வருகின்றனர். இதுவரையில் இந்தியா 2 பதக்கங்களை மட்டுமே வென்றுள்ளது. துப்பாக்கி சுடுதல் போட்டியில் இந்திய வீராங்கனை மனு பாக்கர் தனிநபர் மற்றும் கலப்பு இரட்டையர் 10மீ ஏர் பிஸ்டல் பிரிவில் வெற்றி பெற்று வெண்கலப் பதக்கம் வென்றுள்ளார்.
இதன் மூலமாக ஒலிம்பிக்கில் 2 பதக்கங்களை வென்ற முதல் இந்திய வீராங்கனை என்ற சாதனையை மனு பாக்கர் படைத்துள்ளார். மேலும் நீச்சல் மற்றும் டென்னிஸ் போட்டிகளில் இந்தியா பதக்கம் இல்லாமல் வெளியேறியுள்ளது. இந்த நிலையில் தான் ரோவிங் போட்டியில் இந்தியா சார்பில் ஒரேயொரு வீரர் மட்டுமே பங்கேற்று இருந்தார்.
ஒலிம்பிக்கில் 2 பதக்கங்களை வென்ற முதல் இந்திய வீராங்கனை என்ற வரலாற்று சாதனை படைத்த மனு பாக்கர்!
முதல் நாள் நடைபெற்ற காலிறுதிக்கு தகுதி பெறும் போட்டியில் 7 நிமிடம் 5.10 வினாடிகளில் இலக்கை கடந்து 5ஆவது இடம் பிடித்து அரையிறுதிப் போட்டிக்கு முன்னேறினார். ஆனால், பதக்கத்திற்கான வாய்ப்பிலிருந்து வெளியேறியுள்ளார். மேலும், தற்போது 13 முதல் 24 இடங்களுக்கான போட்டியில் இடம் பெற்றுள்ளார். இந்தப் போட்டி நாளை தொடங்குகிறது என்பது குறிப்பிடத்தக்கது.
இந்தியாவிற்கு 2ஆவது பதக்கம் – வரலாற்று சாதனை படைத்த மனு பாக்கர் மற்றும் சரப்ஜோத் சிங் ஜோடி!
கிரிக்கெட் மற்றும் விளையாட்டு உலகின் (Sports News in Tamil) நிமிட நிமிட தமிழ் செய்தி அப்டேட்களுக்காக ஏஷ்யாநெட் தமிழ்-ஐ பின்பற்றுங்கள். IPL லைவ் உட்பட டீம் இந்தியாவின் பிரேக்கிங் நியூஸ் (Cricket News in Tamil), சிறப்பு ரிப்போர்ட்கள் மற்றும் நேரலைகளுடன் முழுமையான தகவல்கள் உங்களுக்கு ஒரே கிளிக்கில் கிடைக்கும். ஏஷ்யாநெட் தமிழ் அதிகாரப்பூர்வ ஆப்பைப் டவுன்லோடு செய்து அனைத்து அப்டேட்களையும் பெறுங்கள்.