
பாரிஸ் ஒலிம்பிக் 2024 தொடரின் 7ஆவது நாள் போட்டி தற்போது நடைபெற்று வருகிறது. இதில், இன்று பிற்பகல் 1.19 மணிக்கு நடைபெற்ற வில்வித்தை கலப்பு இரட்டையர் பிரிவில் இந்தியாவின் தீரஜ் பொம்மதேவரா மற்றும் அங்கீத பகத் ஜோடியானது இந்தோனேஷியாவின் தியானந்தா சோய்னிருசா மற்றும் ஆரிஃப் பங்கஸ்து ஜோடியை எதிர்கொண்டது.
இதில், இந்திய ஜோடி தோல்வி அடைந்தால் தொடரிலிருந்து வெளியேறும் நிலை இருந்தது. ஆனால், தொடக்க முதலே சிறப்பாக விளையாடிய இந்திய ஜோடி 9, 10, 9, 9 என்று எய்து 37 புள்ளிகள் பெற்றது. 2ஆவது முறை 38 புள்ளிகள் பெற்றது. 3ஆவது முறையும் 38 புள்ளிகள் பெற்றது. இதன் மூலமாக 5-1 என்ற கணக்கில் இந்திய ஜோடியான தீரஜ் பொம்மதேவரா மற்றும் அங்கீதா பகத் ஜோடி வெற்றி பெற்று காலிறுதிப் போட்டிக்கு முன்னேறியுள்ளது.
வில்வித்தை காலிறுதிப் போட்டி இன்று மாலை 5.45 மணிக்கு நடைபெறுகிறது. இதில், ஸ்பெயின் ஜோடியை எதிர்கொள்கிறது. ஏற்கனவே ஆண்களுக்கான வில்வித்தை போட்டியில் இந்திய வீரர்கள் தோல்வி அடைந்து வெளியேறினர். இதே போன்று மகளிருக்கான போட்டியில் பஜன் கவுர் மற்றும் தீபிகா குமாரியைத் தவிர மற்றவர்கள் தோல்வி அடைந்து வெளியேறினர் என்பது குறிப்பிடத்தக்கது.
Paris 2024 Olympics: கடைசில பிவி சிந்துவும் தோல்வி – பேட்மிண்டனில் எல்லோருமே வெளியேற்றம்!
கிரிக்கெட் மற்றும் விளையாட்டு உலகின் (Sports News in Tamil) நிமிட நிமிட தமிழ் செய்தி அப்டேட்களுக்காக ஏஷ்யாநெட் தமிழ்-ஐ பின்பற்றுங்கள். IPL லைவ் உட்பட டீம் இந்தியாவின் பிரேக்கிங் நியூஸ் (Cricket News in Tamil), சிறப்பு ரிப்போர்ட்கள் மற்றும் நேரலைகளுடன் முழுமையான தகவல்கள் உங்களுக்கு ஒரே கிளிக்கில் கிடைக்கும். ஏஷ்யாநெட் தமிழ் அதிகாரப்பூர்வ ஆப்பைப் டவுன்லோடு செய்து அனைத்து அப்டேட்களையும் பெறுங்கள்.