
பிரான்ஸ் தலைநகர் பாரிஸில் 33ஆவது ஒலிம்பிக் 2024 தொடர் தொடங்கி விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது. இதில், இந்தியா 3 பதக்கங்களை கைப்பற்றியுள்ளது. 3 பதக்கத்தையும் துப்பாக்கி சுடுதல் போட்டியில் கைப்பற்றியிருக்கிறது. ஏற்கனவே நீச்சல், டென்னிஸ், படகு போட்டி, ரோவிங், ஹாக்கி உள்ளிட்ட போட்டிகளில் பதக்கமே இல்லாமல் வெளியேறியுள்ளது. இதே போன்று பேட்மிண்டன் போட்டியிலும் லக்ஷயா சென் தவிர பிரணாய் ஹெச் எஸ், சாத்விக்சாய்ராஜ் ராங்கிரெட்டி மற்றும் சிராக் ஷெட்டி ஜோடி, தணிஷா கிராஸ்டோ மற்றும் அஸ்வினி பொன்னப்பா ஜோடி ஆகியோர் தோல்வி அடைந்து வெளியேறியுள்ளனர்.
இந்த நிலையில் தான், இந்தியாவின் நம்பிக்கை நட்சத்திரமான பிவி சிந்து எலிமினேஷன் சுற்று போட்டியில் தோல்வி அடைந்து வெளியேறியுள்ளார். இந்த நிலையில் தான் 7ஆவது நாளான இன்று இந்தியா வெண்கலம் மற்றும் தங்கப் பதக்கத்திற்கான போட்டிகளில் பங்கேற்கிறது. கோல்ஃப், துப்பாக்கி சுடுதல், வில்வித்தை, ரோவிங், ஜூடோ, படகு போட்டி, ஹாக்கி, பேட்மிண்டன் ஆகிய விளையாட்டுகளில் இந்தியா பங்கேற்கிறது. இதில் யார் யாரெல்லாம் பங்கேற்கிறார்கள்? இந்தியா பதக்கம் வெல்வதற்கான வாய்ப்புகள் இருக்கிறதா? என்று பார்க்கலாம் வாங்க…
பிற்பகல் 12:30 மணி: கோல்ஃப்
ஆண்களுக்கான 2ஆவது சுற்று - சுபாங்கர் சர்மா, ககன்ஜீத் புல்லர்.
பிற்பகல் 12.30 மணி – துப்பாக்கி சுடுதல்
மகளிருக்கான 25மீ பிஸ்டல் பிரீசிஷன் தகுதிச் சுற்று - மனு பாக்கர், ஈசா சிங்
பிற்பகல் 1 மணி – துப்பாக்கி சுடுதல்
ஆண்களுக்கான ஸ்கீட் ஷூட்டிங் தகுதிச் சுற்று நாள் 1 – அனன்ஜீத் சிங் நரூகா
பிற்பகல் 1.19 மணி – வில்வித்தை
கலப்பு அணி 1/8 எலிமினேஷன் சுற்று – தீரஜ் பொம்மதேவரா, அங்கீதா பகத்
பிற்பகல் 1.48 மணி – ரோவிங்
ஆண்களுக்கான ஒற்றையர் பிரிவு இறுதிப் போட்டி – பால்ராஜ் பன்வார்
பிற்பகல் 2 மணி – ஜூடோ
மகளிருக்கான 78கிலோ எடைப்பிரிவு எலிமினேஷன் சுற்று 32 – துலிகா மன்
பிற்பகல் 3.30 மணி – துப்பாக்கி சுடுதல்
மகளிருக்கான 25மீ பிஸ்டல் ரேபிட் தகுதிச் சுற்று – மனு பாக்கர், ஈசா சிங்
பிற்பகல் 3.35 மணி – படகு போட்டி
மகளிருக்கான டிங்கி ரேஸ் 2, 3, 4 சுற்றுகள் – நேத்ரா குமணன்
பிற்பகல் 3.50 மணி – படகு போட்டி
ஆண்களுக்கான டிங்கி ரேஸ் 3, 4 – விஷ்ணு சரவணன்
மாலை 4.45 மணி – ஹாக்கி
ஆண்களுக்கான Pool B – இந்தியா - ஆஸ்திரேலியா
மாலை 5.45 மணி – வில்வித்தை (முதல் சுற்றில் வெற்றி பெற்றால்)
கலப்பு அணி காலிறுதிப் போட்டி – தீரஜ் பொம்மதேவரா, அங்கீதா பகத்
மாலை 6.30 மணி – பேட்மிண்டன் - காலிறுதிப் போட்டி
ஆண்களுக்கான ஒற்றையர் பிரிவு காலிறுதிப் போட்டி – லக்ஷ்யா சென் – சோ டியா சென்
இரவு 7.01 மணி – வில்வித்தை (முதல் சுற்றில் வெற்றி பெற்றால் மட்டும்)
கலப்பு அணி அரையிறுதிப் போட்டி – தீரஜ் பொம்மதேவரா, அங்கீதா பகத்
இரவு 7.54 மணி – வில்வித்தை – வெண்கலப் பதக்க போட்டி (முதல் சுற்றில் வெற்றி பெற்றால் மட்டுமே)
கலப்பு இரட்டையர் – தீரஜ் பொம்மதேவரா, அங்கீதா பகத்
இரவு 8.13 மணி – வில்வித்தை -தங்கப் பதக்கத்திற்கான போட்டி (முதல் சுற்றில் வெற்றி பெற்றால் மட்டுமே)
கலப்பு இரட்டையர் - தீரஜ் பொம்மதேவரா, அங்கீதா பகத்
இரவு 9.40 மணி – வில்வித்தை
மகளிருக்கான 5000மீ முதல் சுற்று - பருல் சவுத்ரி, அங்கீதா தியானி
இரவு 11.40 மணி – வில்வித்தை
மகளிருக்கான ஷாட் புட் தகுதிச் சுற்று – தஜிந்தர்பால் சிங் தூர
கிரிக்கெட் மற்றும் விளையாட்டு உலகின் (Sports News in Tamil) நிமிட நிமிட தமிழ் செய்தி அப்டேட்களுக்காக ஏஷ்யாநெட் தமிழ்-ஐ பின்பற்றுங்கள். IPL லைவ் உட்பட டீம் இந்தியாவின் பிரேக்கிங் நியூஸ் (Cricket News in Tamil), சிறப்பு ரிப்போர்ட்கள் மற்றும் நேரலைகளுடன் முழுமையான தகவல்கள் உங்களுக்கு ஒரே கிளிக்கில் கிடைக்கும். ஏஷ்யாநெட் தமிழ் அதிகாரப்பூர்வ ஆப்பைப் டவுன்லோடு செய்து அனைத்து அப்டேட்களையும் பெறுங்கள்.