பாரிஸ் ஒலிம்பிக் 2024 தொடர் 26 ஆம் தேதி தொடங்க உள்ள நிலையில் இந்திய ஒலிம்பிக் சங்கத் தலைவர் பிடி உஷா பிரான்ஸ் தலைநகர் பாரிஸ் வந்து இறங்கியுள்ளார்.
பிரான்ஸ் தலைநகர் பாரிஸில் 3 ஆவது முறையாக ஒலிம்பிக் தொடர் நடைபெற இருக்கிறது. வரும் 26 ஆம் தேதி தொடங்கும் இந்த தொடர் ஆகஸ்ட் 11 ஆம் தேதி வரையில் நடைபெறுகிறது. இந்த தொடரில் இந்தியா சார்பில் மொத்தமாக 117 விளையாட்டு வீரர்கள் 69 போட்டிகளில் 95 பதக்கங்களுக்காக போட்டி போடுகின்றனர். இதுவரையில் ஒலிம்பிக்கில் இந்தியா 35 பதக்கங்களை வென்று குவித்துள்ளது. கடந்த 2020 ஆம் ஆண்டு டோக்கியோ ஒலிம்பிக்கில் இந்தியா ஒரு தங்கம், 2 வெள்ளி மற்றும் 4 வெண்கலம் உள்பட மொத்தமாக 7 பதக்கங்களை வென்றது. இந்த நிலையில் தான் தற்போது பாரிஸ் 2024 ஒலிம்பிக் தொடரில் இந்தியாவின் பதக்க எண்ணிக்கையானது 7ஐவிட அதிகமாகும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
8ஆர்டிஎம், 5 வருட மெகா ஏலம், 4-6 வீரர்களை தக்க வைக்க அனுமதி கேட்கும் ஐபிஎல் உரிமையாளர்கள்!
இந்த நிலையில், தான் ஒலிம்பிக் தொடரில் இடம் பெற்றிருந்த வீரர்கள் பாரிஸ் வந்த வண்ணம் இருந்தனர். இந்த நிலையில் தான் இந்திய ஒலிம்பிக் சங்கத் தலைவர் பிடி உஷா தற்போது பாரிஸ் வந்து இறங்கியுள்ளார். கேரளாவில் பிறந்த பிடி உஷா விளையாட்டின் மீது இருந்த ஆர்வம் காரணமாக சிறு வயது முதல் பள்ளி அளவில் நடைபெற்ற தடகள போட்டிகளில் கலந்து கொண்டு வெற்றி பெற்றார்.
Womens Asia Cup 2024 Prize Money: மகளிர் ஆசிய கோப்பை 2024 தொடருக்கான பரிசுத் தொகை எவ்வளவு?
கடந்த 1980 ஆம் ஆண்டு மாஸ்கோவில் நடைபெற்ற ஒலிம்பிக் போட்டியில் பதக்க வாய்ப்பை இழந்தாலும், அதன் பிறகு தேசிய, ஆசிய மற்றும் சர்வதேச அளவில் நடைபெற்ற போட்டிகளில் தங்க பதக்கங்களை குவித்தார். தடகள வீராங்கனையான பிடி உஷா 14 தங்க பதக்கம் உள்பட மொத்தமாக 23 பதக்கங்களை குவித்துள்ளார். இந்த நிலையில் தான் தான் பாரிஸ் ஒலிம்பிக் தொடரில் பங்கேற்றுள்ள இந்திய விளையாட்டு வீரர்கள், வீராங்கனைகளை ஊக்கப்படுத்த பாரிஸ் வந்துள்ளார். நாளை மறுநாள் செய்ன் நதிக்கரையில் ஒலிம்பிக் தொடக்க விழா நடைபெற இருக்கிறது என்பது குறிப்பிடத்தக்கது.
Touchdown Paris! ✈️
IOA President ma’am has arrived in Paris to encourage and support our athletes at the Olympic Games. 👏🏽 pic.twitter.com/U8Hm5fiObh