ஆசிய விளையாட்டு போட்டியில் இன்று நடந்த ஆண்களுக்கான அரையிறுதிப் போட்டியில் இந்திய அணியானது 5-3 என்ற கோல் கணக்கில் கொரியாவை வீழ்த்தி இறுதிப் போட்டிக்கு முன்னேறியுள்ளது.
சீனாவில் ஹாங்சோவில் 19ஆவது ஆசிய விளையாட்டு போட்டி நடந்து வருகிறது. இதில், இன்று நடந்த வில்வித்தை கலப்பு இரட்டையர் காம்பவுண்ட் பிரிவில் இந்தியா தங்கம் வென்றது. இதே போன்று ஸ்குவாஷ் கலப்பு இரட்டையர் பிரிவில் அனாகத் சிங் மற்றும் அபய் சிங் ஜோடி வெண்கலம் வென்றது. இந்த நிலையில், தான் ஆண்களுக்கான ஹாக்கி அரையிறுதிப் போட்டி நடந்தது. இதில், இந்தியா மற்றும் தென் கொரியா அணிகள் மோதின.
ஆரம்பம் முதலே இந்திய அணி வீரர்கள் ஹாட்ரிக் கோல் அடித்தனர். இந்திய அணியின் ஹர்திக் சிங் முதல் கோல் அடிக்க, மந்தீப் சிங் 2ஆவது கோல் அடித்தார். அடுத்ததாக ஹர்மன்ப்ரீத் சிங் 3ஆவது கோல் அடிக்கவே இந்திய அணி 3-0 என்று முன்னிலை வகித்தது. இதையடுத்து கொரியா அணி ஒரு கோல் அடித்தது. மீண்டும் ஒரு கோல் அடிக்க 3-2 என்று இந்தியா முன்னிலையில் இருந்தது. அதன் பிறகு இந்திய அணிக்கு கிடைத்த பெனால்டி கார்னர் வாய்ப்பை சரியாக பயன்படுத்திக் கொண்ட இந்திய வீரர் அமித் ரோஹிதாஸ் ஒரு கோல் அடித்தார். இதன் மூலமாக முதல் பாதி ஆட்டத்தில் இந்திய அணி 4-2 என்று முன்னிலை பெற்றது.
World Cup, Captains Day 2023: கேப்டன்ஸ் டேக்கு தயாரான குஜராத் கிரிக்கெட் சங்க கிளப்ஹவுஸ்!
இதையடுத்து போட்டியின் 42 ஆவது நிமிடத்தில் கொரியா அணி ஒரு கோல் அடிக்க, 4-3 என்று இந்திய அணி முன்னிலையில் இருந்தது. இறுதியாக இந்திய அணியின் வீரர் அபிஷேக் ஒரு கோல் அடிக்கவே 5-3 என்று இந்தியா அணியில் இருந்தது. கடைசி வரை தென் கொரியா அணி கோல் அடிக்க முயற்சித்தும் எந்த பலனும் இல்லை. இதன் காரணமாக இந்தியா 5-3 என்ற கோல் கணக்கில் வெற்றி பெற்று இறுதிப் போட்டிக்கு முன்னேறியது.
Ahmedabad, Captains Day Celebration: தனி விமானத்தில் அகமதாபாத் வந்த பாகிஸ்தான் கேப்டன் பாபர் அசாம்!