உலகக் கோப்பைக்கு முன்னதாக கேப்டன்ஸ் டே என்று சொல்லப்படும் அனைத்து அணிகளின் கேப்டன்களின் அணிவகுப்பு நிகழ்ச்சி குஜராத் கிரிக்கெட் சங்க கிளப் கிளப்ஹவுஸின் Banquet Hallல் வைத்து நடைபெற உள்ளது.
இங்கிலாந்து மற்றும் நியூசிலாந்து அணிகளுக்கு இடையிலான கிரிக்கெட் உலகக் கோப்பை தொடரின் முதல் போட்டி நடைபெறும் அகமதாபாத் மைதானத்தில் இன்று பிற்பகல் 2 மணிக்கு 10 அணிகளின் கேப்டன்களின் அணிவகுப்பு நிகழ்ச்சி நடக்க இருக்கிறது. நேற்றுடன் உலகக் கோப்பை வார்ம் அப் போட்டிகள் முடிந்த நிலையில், உலகக் கோப்பை நாளை தொடங்குகிறது.
Ahmedabad, Captains Day Celebration: தனி விமானத்தில் அகமதாபாத் வந்த பாகிஸ்தான் கேப்டன் பாபர் அசாம்!
ஐசிசி கேப்டன்ஸ் டே:
ஐசிசி கேப்டன்கள் தினம் அக்டோபர் 4 புதன்கிழமை இன்று நடைபெற உள்ளது. பிற்பகல் 2 மணி முதல் கேப்டன்கள் தினம் நடைபெறுகிறது. இங்கிலாந்து மற்றும் நியூசிலாந்து அணிகளுக்கு இடையிலான உலகக் கோப்பை முதல் போட்டி தொடங்கும் அகமதாபாத் நரேந்திர மோடி மைதானத்தில் தான் கேப்டன்கள் தினம் கொண்டாடப்படுகிறது.
இதற்காக இந்திய அணியின் கேப்டன் ரோகித் சர்மா ஏற்கனவே அகமதாபாத்திற்கு வந்துள்ளார். இந்திய அணியின் மற்ற வீரர்கள் சென்னை வந்துள்ளனர். வரும் 8 ஆம் தேதி இந்தியா மற்றும் ஆஸ்திரேலியா இடையிலான 5ஆவது உலகக் கோப்பை நடக்கிறது. மேலும், கேப்டன்கள் தவிர மற்ற வீரர்கள் அனைவரும் போட்டி நடக்கும் மைதானத்திற்கு சென்றுள்ளனர். இதே போன்று இங்கிலாந்து மற்றும் நியூசிலாந்து வீரர்கள் அகமதாபாத்திற்கு வந்துள்ளனர். இந்த நிலையில், நேற்று, நடந்த ஆஸ்திரேலியாவிற்கு எதிரான வார்ம் அப் போட்டியில் பாகிஸ்தான் அணி 14 ரன்கள் வித்தியாசத்தில் தோல்வியை தழுவியது.
இதன் மூலமாக விளையாடிய 2 வார்ம் அப் போட்டிகளிலும் பாகிஸ்தான் தோல்வி அடைந்துள்ளது. இந்த நிலையில், குஜராத் கிரிக்கெட் சங்க கிளப் கிளப்ஹவுஸின் Banquet Hallல் வைத்து கேப்டன்களின் அணிவகுப்பு நிழ்ச்சி நடத்தப்படுகிறது. மோடி மைதானத்தில் கேப்டன்ஸ் டே கொண்டாடப்பட உள்ள நிலையில், பாகிஸ்தான் அணியின் கேப்டனான பாபர் அசாம், ஹைதராபாத்திலிருந்து தனி விமானத்தில் புறப்பட்டு தற்போது அகமதாபாத்திற்கு வருகை தந்துள்ளார்.
அகமதாபாத் விமான நிலையத்திற்கு வந்திறங்கிய அவருக்கு உற்சாக வரவேற்பு அளிக்கப்பட்டுள்ளது. இதையடுத்து, ரோகித் சர்மாவை சந்தித்து பேசியுள்ளார். இது தொடர்பான புகைப்படங்கள் மற்றும் வீடியோக்கள் சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது.
டிவி அல்லது ஆன்லைன்/ஸ்ட்ரீமிங்கில் ரசிகர்கள் கேப்டன் தினத்தை எங்கு பார்க்கலாம் என்பது பற்றிய விவரங்களை ஐசிசி வெளியிடவில்லை. எனினும் உலகக் கோப்பை வார்ம் அப் போட்டிகள், உலகக் கோப்பை போட்டிகள் அனைத்தும் ஸ்டார் ஸ்போர்ட்ஸ் நெட்வொர்க் தொலைக்காட்சியில் நேரடியாக ஒளிபரப்பு செயப்படுகிறது. அதோடு, டிஸ்னி+ஹாட்ஸ்டார் ஓடிடி தளத்தில் லைவ் ஸ்டிரீமிங் செய்யப்படுகிறது.
All set for women's day..😭🩷 pic.twitter.com/m6RE36G4Zl
— Hamxa 🏏🇵🇰 (@hamxashahbax21)