முதல் ஆட்டத்தில் கனடாவிற்கு ஆட்டம் காட்டிய இந்தியா…

 
Published : Dec 09, 2016, 12:17 PM ISTUpdated : Sep 19, 2018, 02:46 AM IST
முதல் ஆட்டத்தில் கனடாவிற்கு ஆட்டம் காட்டிய இந்தியா…

சுருக்கம்

உலக ஜூனியர் ஹாக்கி போட்டியில் இந்தியா தனது முதல் ஆட்டத்தில் கனடாவை 4-0 என்ற கோல் கணக்கில் வெற்றி கண்டு ஆட்டம் காட்டியது.

இலக்னெளவில் உள்ள மேஜர் தயான்சந்த் செயற்கை இழை ஆடுகளத்தில் வியாழக்கிழமை நடைபெற்ற இந்த ஆட்டம், பனிப்பொழிவு காரணமாக 15 நிமிடங்கள் தாமதமாக தொடங்கியது.

இந்த ஆட்டத்தின் 35-ஆவது நிமிடத்தில் இந்தியாவுக்கான முதல் கோல் வாய்ப்பு கிடைத்தது. மன்தீப் சிங்கால் அந்த கோல் அடிக்கப்பட்டது. கனடா அணியின் தடுப்பாட்டத்தை தொடர்ந்து தகர்த்தாடிய இந்தியா, ஆட்டத்தின் 46-ஆவது நிமிடத்தில் 2-ஆவது கோல் வாய்ப்பை எட்டியது.

பின்னர் நடைபெற்ற ஆட்டத்தில் வருண் குமார் 60-ஆவது நிமிடத்திலும், அஜித் பாண்டே 66-ஆவது நிமிடத்திலும் என அடுத்தடுத்து கோல் அடித்தனர். இந்தியாவின் கோல் மழையில் மூழ்கிய கனடா, மீண்டு வருவதற்கோ, கோல் அடிப்பதற்கோ வாய்ப்பு கிடைக்கவில்லை. இறுதி வரையில் அதே நிலை தொடர்ந்ததால், இந்தியா 4-0 என்ற கோல் கணக்கில் வெற்றி பெற்றது.

கனடா அணியில் 13 பேர் இந்திய வம்சாவளி வீரர்கள் என்பது குறிப்பிடத்தக்கது.

PREV

கிரிக்கெட் மற்றும் விளையாட்டு உலகின் (Sports News in Tamil) நிமிட நிமிட தமிழ் செய்தி அப்டேட்களுக்காக ஏஷ்யாநெட் தமிழ்-ஐ பின்பற்றுங்கள். IPL லைவ் உட்பட டீம் இந்தியாவின் பிரேக்கிங் நியூஸ் (Cricket News in Tamil), சிறப்பு ரிப்போர்ட்கள் மற்றும் நேரலைகளுடன் முழுமையான தகவல்கள் உங்களுக்கு ஒரே கிளிக்கில் கிடைக்கும். ஏஷ்யாநெட் தமிழ் அதிகாரப்பூர்வ ஆப்பைப் டவுன்லோடு செய்து அனைத்து அப்டேட்களையும் பெறுங்கள்.

click me!

Recommended Stories

ரோகித், விராட் கோலி ரசிகர்களே ரெடியா? அடுத்த மேட்ச் எப்போது? லைவ் உண்டா?
டி20 உலகக் கோப்பைக்கான இந்திய அணி பிளேயிங் லெவன்.. சஞ்சு சாஞ்சன் இடத்துக்கு சிக்கல்.. இதுதான் காரணம்!